தொடர்கள்
கதை
கனவு மெய்ப்பட - ஆனந்த் ஶ்ரீனிவாசன்.

20240508081003280.jpeg

புனேவின் மிகவும் சிறப்பு வாய்ந்த பாத்சாஹி,.டீயை குடித்துக் கொண்டுருக்கும் போது, ஷர்மிளாவர்மா, தன் ஆசையைச் சொல்லவே, குடிப்பதை நிறுத்திவிட்டு, கோபப்பட்டாள் சாதனா.

"இதெல்லாம் நடக்கிற காரியமா, இந்த வயசுல?" அதுவும் நாடு விட்டு நாடு".

" ஒங்களுக்கு மட்டும் கஷ்டமில்லம்மா! நாங்களும் சேர்ந்து அவதிப்படணுமா?"

சிரித்துக் கொண்டே,"இது பிடிவாதம் இல்ல, சாதனா! ஆசை…. ,நீண்ட நாள் ஆசை வேர்களைத் தேடி போகும் உறவு.. ."

“ஒருவருக்கு முழு ஆயுள்ங்கிறது நூத்தியிருபது வருசம்".மிச்சமிருக்கிற வாழ்க்கையை, என் ஆசைப்படி வாழணும்னு நினைக்கிறேன்”..

டெல்லியை சேர்ந்த பாக்வானிதேவிதகர் 94வயது . பின்லாந்தில் வேர்ல்ட் மாஸ்டர்ஸ் அதெலிடிக் சாம்பியன்ஷிப் போட்டியில், வெண்கல பதக்கம் வாங்கியவர்.

ஆஷாபோன்சலே,பி.சுசிலா, ஜானகி எண்பது வயதை தாண்டியவர்கள் இன்னும் அதே சுறுசுறுப்பு."தனக்குவயசாயிடுத்துன்னு அவர்கள் யாரும் ஓய்ந்து போய் உக்கார்ந்துடலை."

"எந்தச் செயலுக்கும் வயது ஒரு பொருட்டல்ல". இதை நீ புரிஞ்சுக்க."

தொண்ணூறு வயசுல, எனக்கு இருக்கிற நேர்மறை எண்ணம், உனக்கு ஏன் இல்லை?"

"டெல்லியில் இருக்கும் நீ, வருடத்துக்கு ஒரு முறை விடுமுறைக்கு வந்து,

இங்கு உள்ள புகழ் வாய்ந்த .! "மூலா ,முத்தா நதிகளை, ரூபாலி ரஸ்டாரண்ட். பழமையான கோட்டைகள், ஏரிகள் இவற்றைப் பார்க்காமல் போகிறாயா?.

" முடியாது .ஏனென்றால் அவைகள் மேலுள்ள பாசபிணைப்பு".. மீண்டும் மீண்டும் பார்க்க தோணும்.

"அதே மாதிரி தான், நான் ஆசைபடுவதும் ….

"உங்க நேர்மையான வாதத்துக்கு முன்னால, நான் தோத்துப் போயிட்டேம்ம்மா".

என் ஆசையும் , , நிறைவேறுமா? ஒரு நாள் நிறைவேறும் என்கிற அசாத்திய நம்பிக்கை எனக்கு இருக்கு “

பக்கத்தில் குடியிருந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த கமலா, மூலம் நான் கற்றுக் கொண்ட தமிழ் இலக்கியங்கள், மற்றும் பாரதி கவிதைகள்தான் எனக்கு இன்ஸ்பிரஷன்"."ஒரு தடவை படிச்சா, திரும்பத் திரும்ப , படிக்கத் தோணும்.மனதளர்ச்சிக்கு அவைகள் மாமருந்து.

"மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்படவேண்டும்;

கனவு மெய்ப்படவேண்டும்;, கைவசமாவது விரைவில் வேண்டும்;

கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்;

பெண் விடுதலை வேண்டும்,"

"பாரதி, பாட்டுக்கு, இப்ப உயிர் கொடுக்கப் போறேன்."

"எப்படிம்மா .நீங்க லாகூர்போனீங்க.? " அப்புறம் எப்படிப் புனேவில் செட்டில் ஆனிங்க .".

ஒன்று பட்ட இந்தியாவின்,.அமிர்தரசில்,இருந்த நாங்கள், புலம் பெயர்ந்து . ஜவுளி கடை வைக்கப் பாகிஸ்தானில் உள்ள லாகூர் சென்றோம்.

"பக்கத்தில் உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள்,.காஷ்மீர் பண்டிட்கள் எல்லோரும் எந்த வேற்றுமையுமின்றி ஒரே குடும்பமாகத் தான் பழகி வந்தோம்."

கிடைத்த வருமானத்தில், வீடு கட்டவே, மகிழ்ச்சி கூடியது..

"மொத்த குடும்பமும் " மே 1947 வாக்கில், ஒரு மாத விடுமுறையை, ஜாலியா கொண்டாட, அப்பாவோடு தர்மசாலா சென்றோம்."

"சில முக்கிய வேலையினால், அம்மா மட்டும் பின்னாடி வந்து சேர்ந்து கொள்வதாகத் திட்டம்".

"ஆனால் , அந்தப் பயணம் அங்கேயே ,நீண்ட நாள் தங்கும் சூழ்நிலை ஏற்படும் என்றோ? திரும்பவும் லாகூர் போகும் வாய்ப்பு இருக்காது என்றோ? கனவிலும் நினைக்க வில்லை"

"அம்மா தங்கியிருந்த அந்த நேரம்,ஒரு பக்கம் ராணுவ அடக்கு முறை; மற்றொரு பக்கம் பிரிவினைவாத கலககாரர்களின்அட்டூழியம்;

பல வீடுகள், கடைகள்தீக்கிரையானது. எங்கள் ஜவுளிகடையும் சேர்த்து."."பல சீக்கிய, இந்து பெண்மணிகள் கற்பழிக்கப் பட்டனர்.காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டனர்.

அம்மா, பக்கத்துச் சலீம் பாய் வீட்டின் கக்கூசில ஆறு மணி நேரம் உயிருடன் போராடி, வெளியே வந்தவருக்கு, அவர் கொடுத்த பொருள்கள், பணத்துடன் எங்கள் வீட்டை பூட்டி விட்டுத் தர்மசாலா தப்பி வந்தார்".

எப்படியும் பிரிவினை நடந்து , தனிப் பாகிஸ்தான் நாடுஉருவாகிவிடும் என்று தெரிந்தது.

நடுத்தெருவில் விடபட்ட நாங்கள்.தர்மசாலவிலுருந்து இடம் பெயர்ந்து , அம்பாலா , குர்கான், டெல்லி, புனே. இப்படி மாறி மாறி எங்கள் வாழ்க்கை ஓட்டம் ஓடியது

"பிரிவினையானதால், எங்கள் லாகூர் வீட்டுக்கு நஷ்ட ஈடாக வீடு கட்டி கொள்ள, இந்திய அரசாங்கம், ஒரு வீட்டு மனை வெஸ்ட் டெல்லியில் கொடுத்தும், அப்பா சம்பாத்தியத்தில், வீடு கட்டமுடியவில்லை".

"""குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக இறந்து போக ,கடைசியில், புனே குடியேற்றம்."

"மனசசோர்வு அடையும் போதெல்லாம் பாரதியார் கவிதைகள் மன உறுதியை கொடுத்தன".

"என் ஆசைக்கு அம்மா கொண்டு வந்த ஜாடி, குடம் நான் இப்போது பூ தொட்டிகளாகப் பயன்படுத்துக்கிறேன்".

"கேக்கும் போதே மனசு சங்கடபடுத்துகிறதும்மா".

"லாகூர் போறதுக்கு விசா வாங்கணும். அவ்வளவு சாமானிய காரியமில்லை.

" ஆமாம் இந்த ஆசை இப்ப எப்படித் தீவீரமாச்சுமா?"

."அதுக்குப் பாண்டமிக் தான் காரணம். எங்கும் வெளியில் போக முடியாத சூழ்நிலை.. பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது. அப்போது தான் பேத்தி சோனா உதவியினால்,முகநூல் கணக்கு துவங்கினேன்".

"அதன்மூலம் நிறைய நண்பர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள். முகநூலில் நாங்கள் வசித்த வீடு பக்கத்து டைலர் சலீம் பாய் பெயர் பற்றி விபரம் குறிப்பிட்டுப் பதிவு போட்டுருந்தேன்".

"நான் பதினஞ்சு வயதில் பிரிவினை காரணமா, அந்த நாட்டை விட்டு விரட்டபட்டேனோ, அந்த வீட்டில் யார் இருந்தாலும் சரி, என்னை அனுமதிக்க மறுத்தாலும் சரி, நான் விளையாடிய வீட்டை பார்க்கணும்."அவர்கள் நிச்சயம்என்னை,வீட்டுக்குள் அனுமதிப்பார்கள் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு இருந்தது..

பாகிஸ்தானில், லாகூர் முக்கியச் சுற்றுலா தலம்;இந்து முஸ்லிம் நட்புக்கு எடுத்துக்காட்டு.முக்கிய இந்து கோவில்கள், கிருஷ்ணன்கோவில் மற்றும் வால்மீகி மந்திர் உட்படப் பல பழங்கால மதத்தளங்களுக்குத் தாயகமாக உள்ள இடம் "ஷாலிமார் தோட்டம்முகலாயக் கட்டிடக்கலையின் ஆடம்பரத்திற்காகப் பெயர் பெற்றது..

"வாவ்! இவ்வளவு விஷயங்கள் தெரிஞ்சு வச்சுருக்கே !யூ ஆர் ரியலி கிரேட்ம்மா."!! "

"அடுத்த வாரமே ஒரு பத்திரிகையாளர், நாங்கள் தங்கியிருந்த வீட்டின் புகைப்படம், மற்றும் வீடியோ அனுப்பி விட்டு, மேலும் பல தகவல்கள் அறிந்து கொள்ள, இந்தியா பாகிஸ்தான் ஹெரிடஜ் என்ற முகநூல் அமைப்பை நாடுமாறு தகவல் அளித்து இருந்தார்.."

அதற்குப் பிறகு தான் நான் இந்தத் தகவலை உன்னிடம் சொன்னேன்.

அம்மாவின் ஆசையை நிறைவேற்றி வைக்க அதற்காக சாதனா பாஸ்போர்ட், விசா சம்பந்தமான வேலைகளைப் பார்க்க துவங்கினாள்.

ஆனால் ஷர்மிளா வர்மாவின் விசா மறுக்கப் பட்டது.

இவ்வளவு பாடுபட்டும் , அம்மாவின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே? என்ற ஏக்கம் சாதனாவிடம் தெரிந்தது.

ஆனால் ஷர்மிளா வர்மாவோ, துளி கூடச் சங்கடபடவில்லை.. ஒவ்வொரு தோல்வியும், தன்வெற்றிக்கு அடுத்தப்படி என்றார்.

இந்தச் சமயத்தில் தான் முகநூலில் லாகூரில் உள்ள இன்னொரு பத்திரிக்கையாளர் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது.

"அவர்,வழிகாட்டுதல்படி தன் வீட்டு வீடியோ பதிவை அனுப்பியது மட்டுமல்லாமல், தன் தொண்ணூறாவது வயதில், தன் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டுமென, ஒரு வேண்டுகோள்,அவர் பத்திரிக்கையில் பதிவிடக் கேட்டுக் கொண்டார்"

அந்தப் பத்திரிக்கை விஷயம், பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரியின், தனிக் கவனத்துக்குப் போனது தான் அதிசயம் .

இந்தியா பாகிஸ்தான் ஹெரிடஜ் முகநூல் அட்மின் மற்றும் மாடரேட்டர் துணையுடன், சேகரித்த விபரங்கள் மூலம் ,மறுபடியும் விசா அப்ளை பண்ணலாம் என்ற முனைப்போடு சாதனா உதவியுடன் விசாவுக்கு அப்ளை செய்தார் ஷர்மிளா .

ஷர்மிளா வர்மா வேண்டுகோள் மிக உருக்கமாகவும்.அவரின் ஆசை நியாயமாகத் தெரிந்ததால், இந்த வயதில் அவர் நேர்மறை எண்ணத்துக்கும், அவரின் மன உறுதிக்காகவும், தற்காலிக மூன்று மாத விசா பரிந்துரைக்கப்படுகிறது என்ற தகவல் வெளியுறவு இலாகா மந்திரி அலுவலகத்தில் இருந்து வந்திருந்தது.

இந்தச் செய்தி, பத்திரிக்கை, சோசியல் மீடியாவில், வைரலாகவே பரவவே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

கிளம்பும் முன்பு வாகா பார்டரில்,நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்குச் சிரித்துக் கொண்டே. ஷர்மிளா

"என்னுடைய இருதயத்தின் ஒரு மூலையில், லாகூர் பற்றிய நினைவுகள் எப்போதும் உயிர்ப்புடன் இருந்து கொண்டே உள்ளது." அந்த வீட்டில் என் உயிர் போனாலும் எனக்குச் சந்தோசம் தான்.

இந்த நேரத்தில் " எனக்கு உதவிய அத்துணை நல்ல உள்ளங்களை நேரில் சந்தித்து நன்றி கூற வேண்டும்"

லாகூர் வீட்டின் மாடியில் இப்போது ஷர்மிளாவர்மா. தன் கனவு மெய்ப்பட்டது கண்டு 90 வயதில் சந்தோச துள்ளலில்.