தொடர்கள்
தேர்தல் திருவிழா
2024 பாராளுமன்ற தேர்தல்: ஒரு கண்ணோட்டம் - பால்கி


20240508072147119.jpeg

2024 லோக் சபா தேர்தல் நடந்து முடிந்தாய் விட்டது.

ஆம் 18 ஆம் லோக் சபாவுக்கு பிரதிநிதிகளைத் தேர்வு செய்தாகிவிட்டது.

இந்த தேர்தலில் ஏற்பட்டுள்ள பல ஹிட்ஸ்ஸை பார்க்கலாமா?

744 கட்சிகள் போட்டி போட்டதாம். இதுதான் பெரிய அளவில் கட்சிகள் போட்டியிட்டதாம்.

இதில் 6 கட்சிகள் தாம் நாடு தழுவிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாம்.

543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தன.

போட்டியிட்டவர்களின் எண்ணிக்கை 8,360 மட்டுமே.

ஆக ஒரு தொகுதிக்கு சராசரியாகப் பார்த்தால் 15 பேர்கள் போட்ட்ட்யிட்டனர்.

BSP தான் அதிக அளவில் வேட்பாளர்களை நிறுத்திய நேஷனல் கட்சி, 486.

அடுத்த இடங்களை பாஜக 441, காங்கிரஸ் 328 (அதில் ஒருவர் மட்டுமே இரு இடங்களில் நின்றார், வெற்றியும் பெற்றிருக்கிறார். அதில் ஒன்றை விட்டுவிட வேண்டும். மறுபடியும் இடைத் தேர்தல் நடக்கும். வெற்றி பெற்ற ஒரு அதிருப்தி காங்கிரஸ் வெற்றியாரை இணைத்துக்க் கொண்டு காங்கிரஸ் சென்சுரி அடித்தது. அதுவும் விரைவில் திரும்பவும் 99 க்கே திரும்பிவிடும்.

மற்ற மூன்று னேஷனல் கட்சிகள் யாரென்றால் சிபிஎம், ஆம் ஆத்மி, நேஷனல் பீப்பள்ஸ் பார்டியாம். அந்த கடைசி பார்டி வெறும் 3 வேட்பாளர்களை நிறுத்தியிருந்ததாம்.

இதில் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் லிஸ்டிலிருந்து சோஷியல் யூனிடி சென்டர் ஆஃப் இண்டியா(கம்யூனிஸ்ட்) 150 பேரை நிறுத்தியிருந்தது.

நம்ம கரூர் தொகுதியில மட்டும் தானுங்க வெறும் 54 பேரு போட்டிய்யிட்டாருங்க. அதில் 46 பேர் சுயேச்சைகள். நீளமான வேட்பாளர் லிஸ்ட் பார்த்திருப்பார்கள் அந்த தொகுதி மக்கள்.

அகில இந்திய அளவில் எட்டு தொகுதிகளில் 40 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர்.

சூரத் தொகுதியில் தேர்தல் வாகுப்பதிவு ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னமேயே அங்கு பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டார். மற்ற வேட்பாளர்கள் ஆட்டத்திலிருந்து ஜகா வாங்கிக்கொண்டனர். காங்கிரஸ் வேட்பாளர் பாஜகவில் இணைந்தும் விட்டார்.

போட்டி போட்ட வேட்பாளர்களின் சராசரி வயது 48. 25 வயதினர்கள் நிறையவே இருந்தனர்.

10 சதவீதம் மட்டுமே பெண் வேட்பாளர்கள். இன்னிலை விரைவிலேயே மாறும். ஏனெனில், மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு சட்டம் தான் சென்ற 17ஆவது லோக சபையில் தீர்மானிக்கப்பட்டு விட்டதே.

இதில் பாஜக 16%, காங்கிரஸ் 13%,, BSP வெறும் 8% பெண் வேட்பாளர்கள் அடங்குவர்.

சுமார் 60% கட்ந்த 17ஆவது லோக சபை எம்பீக்கள் மறுபடியும் போட்டீட்டனர்.

18 வேட்பாளர்கள் தன்னிடத்தை விட்டு இப்போது வேறு இடங்களில் போட்டி இட்டனர்.

34% வேட்பாளர்கள் தமது முந்தைய கட்சிகளை விட்டு இப்போது வேறு கட்சிகளுக்காக வேட்பாளர்களக நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் கட்சி பிளவுகளினால் வேறு கட்சிகளாக ஆகிவிட்டிருந்தனர். உதாரணமாக, சிவ சேனை ..

படிப்பு என்ற தகுதிக்கு என்று பார்த்தால் வெறும் 31% மட்டுமே டிகிரீ முடித்துள்ளனர்.

சுமார் 986 மில்லியன் வோட்டாளர்களில் 642 மில்லியன் வோட்டாளர்கள் மட்டுமே தங்களது வாக்கை பதிவு செய்திருந்தனர்.

39 தொகுதிகளின் சில இடங்களில் மட்டுமே ரீபோல் நடந்துள்ளன.

10.1 லட்ச வோட்டுக்கள் வித்தியாசத்தில் காங்கிரசைச் சேர்ந்த அஸ்ஸாமின் ராக்கிபுல் ஹுசேய்ன் வெற்றி பெற்றிருக்கலாம்.

20240508072228482.jpg

ஆனால் எனது தொகுதியான மும்பை வடமேற்கு தொகுதியில் நின்ற ஏக்னாத் ஷிண்டே சிவசேனையின் வேட்பாளரான ரவீந்திர வாய்க்கர் வெறும் 48 வோட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.