தொடர்கள்
கவிதை
பாவத்தின் மூட்டைகள்...!!-கோவை பாலா

20240501070446286.jpg

உன் பாவத்தின் மூட்டைகளை நீ சுமப்பாய்...!
பார்த்திருப்போர் பரிதாபம் எனச் சொல்வார்...!
நியாயம் எதவென நீ சொல்ல நினைத்தாலும்,
தெருநாய் கூட சீண்டாது உன்னைத்தான்...!

செய்த செயல்கள் அன்று
தவறென்றாலும்,
தவறுகள் திருந்த வழிகள் இருந்தாலும்,
தட்டித் திருத்த தாய், தந்தை ,
ஆசிரியர்,
நண்பன் ஒருவர் உடன் இருந்தாலும்....

கிட்டிய சூழல்களில் திருந்தப் பழகவேண்டும்...!
தவறை திரும்பச் செய்ய தப்பு யென்றாகிடும்...!
தவறுக்கும் தப்புக்கும் விளக்கம்
தேவைப்படும்...!
கவிஞர் வாலியின் வரிகள் நினைவில் வந்துவிடும்...!

தவறு என்பது தவறி செய்வது...
தப்பு என்பது தெரிந்து செய்வது...
தவறு செய்தவன் திருந்தி ஆகணும்..!
தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்..!

செய்த பாவங்கள் தீருதற்கு சிவனைத்தேடி,
பாதங்கள் நீ பற்றுதலால்
என்னலாபம்...?
உன் பாவம் அவன் சுமப்பான்,
யார் சொன்னார்...?
வேதனையும் வலியும் உன் வினைப்பயன்...!

மானிடனாய் பிறப்பதே அரிது என்போம்...!
பிறந்தபின் மனிதம் என்பதே மறந்துவிடுவோம்...!
ஆணவம் அகம்பாவம் அகந்தை
மேலோங்க...
ஆண்டவன் பெயர் சொல்லி வேடமிடுவோம்...!

வேடிக்கை என்ன வென்றால், நம்புகிறோம்...!
தப்பு செய்துபின் இறைவனை நினைப்பது...!
தப்பாமல் சுமைகளை இறக்கி வைப்பது...!
தப்பென்று உணர்ந்து திருந்தாத வரையில்...
பாவச் சுமைகள் இறங்காது,
முதுகில் இருந்து...!!