கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் இருந்து ஒரு நாளைக்கு லட்சக்கணக்கானோர் சென்னை வந்து பணிக்கும் , படிப்பிற்கும் மின்சார ரயிலில் பயணம் செய்கின்றனர் .
கும்மிடிப்பூண்டி மார்க்கம் மின்சார ரயில்கள் உரிய நேரத்தில் சென்னை சென்ட்ரல் வந்து அடையுமா என்றால் எல்லா மின்சார ரயிலும் கிட்டதட்ட 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் காலதாமதமாக வந்து சேரும் , உரிய நேரத்தில் ரயில் சென்ட்ரலுக்கு வந்தால் அது குதிரை கொம்பு என்று பிரயாணிகள் வேதனையாக உள்ளது.
கும்மிடிப்பூண்டி மார்க்க ரயில் பிரயாணிகள் உரிய நேரத்தில் வேலைக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்ல முடியாது. அதே போன்று இரவு நேரத்தில் கரோனா காலத்திற்கு முன்பு விட்டது போல் இரவு 9 மணிக்கு மேல் அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் விட வேண்டும்.நள்ளிரவு 12.15 மணிக்கு கும்மிடிப்பூண்டி மின்சார ரயிலும் மீண்டும் விட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கையை கேட்க முடிந்தது.
கும்மிடிப்பூண்டி மார்க்கம் மின்சார ரயில்கள் வடசென்னை பகுதியை ஒட்டி இருப்பதால் மின்சார ரயில்களை இயக்குவதில் பாரபட்சம் செய்வதால் பெருமளவில் கூலித்தொழிலாளர்கள் உரிய நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல் வேதனை அடைவதையும் பார்க்க முடிந்தது.
சென்னை சென்ட்ரல் டாக்டர் எம்.ஜி .ஆர் ரயில் நிலையம் அருகில் சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் வரையிலும் ராயபுரம், கொருக்குப்பேட்டை , திருவொற்றியூர், பொன்னேரி , மீஞ்சூர்,கும்மிடிப்பூண்டி, ஆந்திர மாநில எல்லையான கூடூர் வரை தென்னக ரயில்வே சார்பில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மூலம் வடசென்னை உள்பட புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு பணிகள் காரணமாக மின்சார ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை வரை அதிகளவிலான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வடசென்னை உள்பட சென்னை புறநகரின் பல்வேறு பகுதிகளுக்கு குறைந்தளவிலேயே மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் வடசென்னை உள்பட புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர், கூலித்தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமலும், மீண்டும் இரவு நேரங்களில் வீடு திரும்பமுடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதற்கிடையே , சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரையில் 4-வது ரயில்வே இருப்புப் பாதை அமைக்கும் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை வேளச்சேரியில் வேலைக்கு செல்லும் ஒரு கூலித்தொழிலாளி , சென்ட்ரலுக்கு மின்சார ரயிலில் வந்திறங்கி, அங்கிருந்து பெரியார்- ஈ.வெ. ரா சாலையை கடந்து, பூங்கா ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள பறக்கும் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் அவருக்கு நீண்ட கால தாமதமும் உடல் நல சோர்வும் ஏற்படுகிறது.
கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் வட இந்திய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அடுத்தடுத்து இயக்கப்படுகிறது . இதனால் மின்சார ரயில்கள் சிக்னல் போட்டு ஆங்காங்கே நிறுத்தப்படுவது தான் காலதாமதிற்கு முக்கிய காரணம். சென்னை சென்ட்ரலிருந்து எண்ணூர் வரை நான்கு வழி பாதை இருப்பு பாதை போடப்பட்டு விட்டது. அத்திப்பட்டு புதுநகரில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கம் வரை 4 வழி இருப்பு பாதை போர்கால அடிப்படையில் போட்டால் மின்சார ரயில்கள் இரண்டு பாதைகளிலும் எக்ஸ்பிரஸ் , கூட்ஸ் ரயில்கள் மற்ற 2 பாதைகளில் தங்கு தடையின்றி செல்லும் . இந்த பணி கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் ரயில்வே நிர்வாகம் போட்டுவைத்துள்ளது என்று பயணிகள் தெரிவித்தனர்.
மேலும், சென்ட்ரலுக்கு அருகே பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் பிரதான ரயில் இருப்புப் பாதை உள்ளதால், அங்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்களுக்காக, புறநகர் பகுதிகளுக்கு செல்லும் மின்சார ரயில்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுகின்றன. இதற்கு பதிலாக, சென்னை வியாசர்பாடி,அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் வரை செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் மூர்மார்க்கெட்டில் உள்ள புறநகர் ரயில் நிலையத்தில் இருந்தே இயக்கலாம்.ஆனால், சென்னை சென்ட்ரலில் இருந்து ராயபுரம், கொருக்குப்பேட்டை ,திருவொற்றியூர், பொன்னேரி , மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி வழியாக கூடூர் வரை செல்லும் புறநகர் மின்சார ரயில்களை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இயக்கினால், எங்களை போன்ற கூலி தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கூடுதல் மின்சார ரயில்கள் மற்றும் பாஸ்ட் சர்வீஸ் மின்சார ரயில்கள் இயங்கும்போது, தென்னக ரயில்வேக்கு அதிகளவில் வருவாயும் கிடைக்கும். இதுபற்றி சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து,உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...’’ என்று அனைத்து கூலி தொழிலாளர்களும் வலியுறுத்துகின்றனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலை இருப்பதால் தொழிலாளர்களுக்கு சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை வரும் மின்சார ரயில்கள் காலதாமதாக வருகிறது. அதானி போர்ட் அருகே இருக்கும் விம்கோ மெட்ரோ ரயில் நிலையம் செல்ல விம்கோ ரயில் நிலையம் மேற்கூரை கூட இல்லாமல் இருக்கிறது . வடமாநிலங்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கும்மிடிப்பூண்டி ரயில் நிறுத்தத்தில் நிறுத்தப்பட வேண்டும். சென்னை முதல் அத்திப்பட்டு வரை உள்ள 3 மற்றும் 4 வது இருப்பு பாதையில் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் செல்ல வேண்டும் என்பதே இப்போதைய கோரிக்கை என கும்மிடிப்பூண்டி வழக்கறிஞர் மற்றும் சமுக ஆர்வலர் எஸ்.சுரேஷ் பாபு சொன்னார்.
இதுகுறித்து தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் விசாரிக்கையில், இதுபற்றி புதுடெல்லியில் உள்ள ரயில்வே அமைச்சக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி,சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ,மீஞ்சூர் மற்றும் திருவள்ளூர் பகுதிகளுக்கு கூடுதல் இணைப்பு மின்சார ரயில்களை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .சென்னை கடற்கரை -செங்கல்பட்டு வரையிலான மின்ரயில் பாதையில் நாளொன்றுக்கு சுமார் 1.60 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். இதுவே , சென்னை -கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை -திருவள்ளூர் புறநகர் ரயில் மார்க்கத்தில் நாளொன்றுக்கு சுமார் 1.36 லட்சம் பேர் மட்டுமே பயணிக்கின்றனர். இதனால் அதிக பயணிகள் சென்று வரும் சென்னை கடற்கரை -செ ங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் 4-வது இருப்பு பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்றதும் கூடுதல் மின்சார ரயில் சேவைகள் இயக்குவதற்கு திட்டமிட்டு உள்ளோம்!’’ என்று தெரிவித்தனர்.
கரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட அட்டவணைப்படி கும்மிடிப்பூண்டி மார்க்க மின்சார ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகள் கோரிக்கையாக உள்ளது.
நாளொன்றுக்கு லட்சக்கணக்காணக்கன பயணிகள் சென்னை டூ கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் மின்சார ரயில்களில் பயணித்தாலும் தென்னக ரயில்வே கும்மிடிப்பூண்டி மார்க்கத்தினை வஞ்சித்து வருவதாக பயணிகள் கவலையாக இருந்தது.
Leave a comment
Upload