தொடர்கள்
கதை
அப்புவுக்கு அட்மிஷன் கெடச்சுடுச்சு- மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

20240424122301566.jpg

ஒரு வழியா குமார் அந்த பிரபல பள்ளியின் வாசலுக்கு வந்தான். க்யூ நீண்டு இருந்தது. அதுல அவனோட அப்பா குப்புசாமியை அவரோட ஜிப்பாவை வைச்சு
கண்டுபிடிச்சான். அவர ரிலீவ் பண்ணி, வீட்டுக்கு அனுப்பினான்.

அப்ளிகேஷன் தர்ரது இன்னிக்குதான் முதல் நாள். ஒரு வாரம் வரைக்கும் அப்ளிகேஷன் தருவாங்கலாம். அப்ளிகேஷன் ஃபீஸே ஆயிரம் ரூபாய்.இதுல
பேரெண்ட்ஸ் ரெண்டு பேரும் கிராஜுவேட்டா இருக்கணும். ஸ்கூல்லேந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ள வீடு இருக்கணும். என்ன டொனேஷன் கேப்பாங்க?
அத பத்தி ஸ்கூல் பிரவுசர்ல ஒன்னும் சொல்லல.

கொஞ்ச நேரத்துல கவுண்டரிலிருந்து தன் மகன் அப்பாசாமிக்கு அப்ளிகேஷனை
வாங்கினான். ரிஜிஸ்டர்ல ’அப்பாசாமி’ன்னு எழுதி அதையே அப்ளிகேஷ்னலயும்
எழுதிக் கொடுத்தாங்க. ’அப்பாசாமி’ என்பது குமாரோட தாத்தாவோட பேரு.
’அப்பாசாமி’ யதான் நாங்கெல்லாம் ’அப்பு’ ன்னு கூப்புடுவோம். யாரு வைச்ச
பேர்ன்ன்னு எப்பவோ ஆரம்பிச்ச ஆராய்ச்சி இது வர ஒரு முடிவுக்கு வரல.

வீட்டுக்கு போன உடனே அப்ளிகேஷன கவனமா ஃபில்அப்
பண்ணிணாங்க கனவனும்,மனைவியும். அப்பாசாமியோட பர்த் சர்டிபிகேட்,
எல்லோரொட ஆதார் கார்டு எல்லாத்தயும் ஜெராக்ஸ் எடுத்து அப்ளிகேஷன் கூடவே
வச்சுட்டாங்க.

இன்னும் ரெண்டு நாள்ள நடக்கப் போற இண்டர்வியூல என்னவெல்லாம்
கேட்பாங்கன்னு, இதுக்கு முன்னாடி வருஷம் தன் பையன இந்த ஸ்கூல்ல சேர்த்த

கோபால்கிட்ட போன் பண்ணி கேட்டாங்க. அவனும் தன் அனுபவத்தோட இன்னும்
கூட்டியே சொல்லி, அவங்க பயத்த அதிகமாக்கிட்டான்.

மறுநாள் காலை இண்டர்வியூ.கௌரிக்கும் குமாருக்கும் ஒரே டென்ஷன்தான்.
பள்ளி சொல்லும் எல்லா கண்டீஷனும் ஓகேவாத்தான் இருக்கு.ஆனா
பள்ளிக்கூடம்தான் 11/4 கிலோ மீட்டர்ல இருக்கு. இந்த கால் கிலோ மீட்டர் ஏதாவது
பாதிக்குமா?யோசித்துக் கொண்டே கிளம்பினான் குமார்.வருஷத்துக்கு வருமானம் 6
லட்சம் தான் இருக்கு. இதுல பிரச்சனை வந்துடுமோ? இதுல ஸ்கூல் பீஸ் கட்ட
முடியாதுன்னு நினைச்சிடுவாங்களோ? உள்ளுக்குள் எண்ணியபடியே ஸ்கூல்ல
உள்ளே நுழைந்தான் குமார்

‘எனக்கு தெரியலனா நீ சொல்லு, உனக்கு தெரியலனா நான்
சொல்லிடுறேன்’என்று இருவரும் அக்ரிமெண்ட் போட்டுக் கொண்டார்கள். பெத்த
பொன்ன பிரசவத்துக்கு சேர்த்துட்டு வெளியில நிக்கிற அப்பாவின் அவஸ்தை குமார்
மூஞ்சில தெரிஞ்சது. ‘இதுக்கு தான் இப்ப எல்லாம் ஒரு குழந்தையோட
நிறுத்திக்கிறாங்க போல இருக்கு. இந்த ஒரு குழந்தைய ஆளாக்குறதே பெரிய
பொறுப்பா இருக்கு’ன்னு எண்ணிக் கொண்டான் குமார். ஒரு வழியா இவங்கள
உள்ள கூப்டாங்க.

இருகரங்களையும் கூப்பிக்கொண்டு ஓட்டு கேட்கும் வேட்பாளராக
இருவரும் அறையினுள் நுழைந்தார்கள்.நடுவுல ஒரு வயசான பாட்டி உட்கார்ந்து,
ரெண்டு பக்கத்திலும் ரெண்டு இளம் பெண்கள் உக்கார்ந்து இருந்தாங்க. நடுவுல
இருந்த பாட்டி தான் ஸ்கூல் செக்ரட்டரி போல இருக்கு. அவங்க போட்டோதான் மேல
மாட்டி இருந்தது. பக்கத்துல இருக்கவங்க பிரின்ஸ்பால்,வைய்ஸ் பிரின்ஸ்பால் போல

இருக்கு. அவங்க ரெண்டு பேரும் வாயையே திறக்கல. மாமியார் முன்னால
அந்தகாலத்து மாட்டுப் பொண்ணு மாதிரி உக்காந்து இருந்தாங்க.

பாட்டிதான்தான் கேட்டாங்க, ’குழந்தைக்கு ஏதாவது ரைம்ஸ் தெரியுமா?ன்னு.
அவன் பள்ளிக்கூடமே வரல, அவனுக்கு எப்படி தெரியும்? மனசுக்குள்ளே சொல்லிக்
கொண்டாள் கௌரி. இருந்தாலும் ‘வீட்டில் ஏதாவது ட்ரைனிங் கொடுத்து இருக்க
வேண்டுமோ’ன்னு யோசித்தாள்.

கௌரியும்,குமாரும் அவர்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் தயங்கியபடியே
பதில் சொன்னார்கள். எல்.கே.ஜி.யில மொத்தம் 40 சீட்டு தான். ஆனா நாலாயிரம்
அப்ளிகேஷன் வரும் போல இருக்கு உங்க வீடு வேற ஒரு கிலோ மீட்டர தாண்டி
இருக்கு.ரெண்டு பேரும் வேற வேலைக்கு போறீங்க.குழந்தையோட ஹோம் ஒர்க்ல
ஹெல்ப் பண்ண உங்களுக்கு டயம் இருக்குமான்னான்னு தெரியல.
சொல்லிக்கொண்டே போனார் செக்ரேட்டரி பாட்டி .

’எப்படியாவது பார்த்து செய்யுங்க’ என்றான் குமார். தலையை அசைத்து
ஆமோதித்தாள் கொளரி. எங்க ட்ரஸ்டுக்கு ஏதேனும் டொனேஷன் தரமுடியுமா?
கேட்டது வலது பக்க அம்மையார். ’எவ்வளவு ‘ எனக் கேட்டான் குமார். ஒரு
தொகையை சொன்னாங்க. பாதியாக பேரம் பேசினான் குமார். கேட்டபடி கேஷாகவே
தருவதாக ஒப்புக்கொண்ட குமார் பக்கத்து அறையில் அதைக்கட்டி வீட்டு ஒரு
டோக்கனுடன் வந்தான்.டோக்கனை பெற்றுக் கொண்ட பாட்டியம்மா இடது பக்க
அம்மையாரிடம் அதைக் கொடுத்தார்.

சில வினாடிகளில் குமாரின் கைக்கு அப்புவின் கன்ஃபைர்மெடு அட்மிஷன்
லெட்டர் வந்தது.மகிழ்ச்சி பெருமித்துடன் ‘அப்பு ஸ்கூல் படிப்ப முடிக்கிற வர
கவலையே இல்ல’ என சொல்லிக்கொண்டே வெளியே வந்தாங்க. வீட்டுக்குள்
நுழைந்த குமார் ’அப்புவுக்கு அட்மிஷன் கெடச்சுடுச்சு’ன்னு சொல்லிக் கொண்டே,
அப்பாவின் அறைக்கு போனான்.இருந்தாலும் குழந்தைக்கு மண்டே அன்று
இண்டர்வியு இருப்பதை அவன் அவரிடம் சொல்லவே இல்லை.