தொடர்கள்
அனுபவம்
நாகப்பாம்பிற்கு இறுதி சடங்கு - மாலா ஶ்ரீ

20240418095112828.jpeg

ஆந்திர மாநிலம் மேலம்வாரி மேரகா கிராமத்தைச் சுற்றிலும் ஏராளமான முட்புதர் காடுகள் உள்ளன.

சமீபத்தில் அந்த கிராமத்தில் ஒரு வீட்டின் முன்பு ஒரு நாகபாம்பு அசைவற்று கிடப்பதை, அவ்வழியே நடந்து சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து, அங்கு படுத்து கிடந்த நாகபாம்பை தொட்டு பார்த்ததில், அது இறந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இறந்துபோன நாகப்பாம்பை நாகதேவதையாக கருதி பாலாபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து சிறப்பு பூஜைகளுடன் இறுதிச் சடங்குகள் நடத்தி வழிபட்டனர்.

பின்னர் மேளதாளத்துடன் இறந்துபோன நாகப்பாம்பை ஊர்வலமாக கொண்டு சென்று, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அடக்கம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ பல்வேறு சமூக வலைதளங்கில் வைரலாகப் பரவி பலரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.