அல்லாவின் கருணை எல்லோர்க்கும்...!!
அல்லாவின் கருணை எல்லோர்க்கும் உண்டு...!
அவனிடம் அனுப்புங்கள் கருணை மனுவை...!
இல்லை என்பதே அவன் இல்லை என்பான்...!
உனக்கு உள்ளதை அவன் அள்ளித் தருவான்...!
வாழும் காலம், அதில் நாளும் பொழுதும்,
வல்லோன் அவனை வணங்கிடு நீயும்...!
வரும் துயர் எல்லாம் உனை அணுகாது,
தொலை தூரம் செல்லும் அவன் துணையோடு...!
அல்லாவின் கருணை எல்லோர்க்கும் உண்டு...!
அவனிடம் அனுப்புங்கள் கருணை மனுவை...!
ஈகையின் பண்பினை நமக்கு உரைத்தானே...!
இயன்றதைக் கொடு என்று நமை
பணித்தானே...!
வாழும் வழிமுறைகளை அவன் வகுத்தானே...!
நாளும் திருமறையை நமக்கு அளித்தானே...!
அல்லாவின் கருணை எல்லோர்க்கும் உண்டு...!
அவனிடம் அனுப்புங்கள் கருணை மனுவை...!
பாலா
கோவை
Leave a comment
Upload