தக் லைஃப்
ராஜ்கமல் இன்டர்நேஷனல் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் தக்லைஃப். மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் படம். தற்சமயம் தேர்தல் பரப்புரையில் கமலஹாசன் தீவிரமாக இருப்பதால் படப்பிடிப்பு இல்லை. இந்தப் படத்தில் ஏற்கனவே நடிப்பதாக இருந்த துல்கர் சல்மான் கால் ஷிட் பிரச்சனை காரணமாக விலகிவிட்டார். இதேபோல் ஜெயம் ரவியும் விலகிவிட்டார். இப்போது இந்தப் படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார் அரவிந்த்சாமி உடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சாய் தன்ஷிகா
தமிழில் மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டுப் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சாய் தன்ஷிகா. இப்போது தி ப்ரூப் என்ற படத்தில் நடிக்கிறார். ஆவேசமான சண்டைக்காட்சிகளில் எதிரியின் நெஞ்சில் ஏறி ஆவேசமாக கால் வைத்து நிற்பது போன்று ஒரு போஸ்டர் காட்சி வெளியிட்டு இருக்கிறார்கள். இதற்கு ஆக்ஷன் நாயகி என்று சமூக வலைதளத்தில் பாராட்டு குவிகிறது. இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கில் தயாராகிறது.
தமன்னா
இப்போது இணைய வழி மூலம் நகைகள் விற்கும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் நடிகை தமன்னா. அந்த நிறுவனத்துக்கு விட்டன் கோல்டு என்று பெயர் சூட்டியிருக்கிறார். ஏற்கனவே நகை வடிவமைப்பில் தமன்னாவுக்கு ஆர்வம் அதிகம். இப்போது சொந்த கடை என்பதால் கூடுதலாக கவனம் செலுத்துகிறார்.
வேட்டையன்
ரஜினி நடிக்கும் வேட்டையன் அக்டோபர் 10-ஆம் தேதிவெளியாக இருக்கிறது. அதற்குப் பிறகு இரண்டு தினங்களில் ஆயுத பூஜை ,விஜயதசமி என்று தொடர் விடுமுறை என்பதால் இந்த ஏற்பாடு என்கிறார்கள்.
ஷோபனா
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தயாரிக்கும் ரஜினியின் 171-வது படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஷோபனாவை நடிக்க வைக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
GOAT ரிலீஸ் தேதி
நடிகர் விஜய் நடிக்கும் GOAT திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக. அறிவித்திருக்கிறார்கள்.
இந்தியன் 2
இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் பிரியா பவானி சங்கர் என்று மூன்று நடிகைகள் இருந்தாலும் கமலுக்கு ஜோடி கிடையாது.
Leave a comment
Upload