நன்றி : தினமணி
தமிழக தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் மனுதாக்கல் முடித்து விட்டு தொகுதிக்கு செல்ல ஆயத்தமாகி விட்டனர்.
தேனி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் தங்க தமிழ்செல்வன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்தபோது வேட்புமனு படிவத்தை மறந்து வைத்து விட்டு வந்துவிட்டார். இதனால் சிரிப்பொலி எழுந்தது.
பிஜேபி அண்ணாமலை தனது ரூ20 ஸ்டாம்ப் பேப்பர்க்கு பதில் கோர்ட்டுகளில் பயன்படும் ஸ்டாம்ப் தாளில் டைப் செய்து விட்டார் என்று சர்ச்சை எழுந்ததும் தேர்தல் அதிகாரி அவரின் வேட்புமனுவினை ஏற்றுக்கொண்டார்.
தமிழகத்தில் 39 எம் பிக்களை தேர்ந்தெடுக்க கிட்டதட்ட நான்கு முனை போட்டி தொடங்கி விட்டது. இதில் தமிழக வாக்களர்கள் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் . கடந்த தேர்தலை விட நிறைய பேர் வந்து வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் பறக்கும் படை தமிழகம் முழுவதும் சுற்றி சுழன்று வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. திருவள்ளுர் தொகுதி யில் இருக்கும் ஒன்றிய கவுன்சிலர் ஒருவர் ரூ50 ஆயிரம் எடுத்து கொண்டு வரும் போது தேர்தல் அதிகாரி கைப்பற்றி பத்திரிக்கைகளுக்கு செய்தி வெளியிட்டனர்.
மிஸ்டர் வாக்காளர்கள் விட்டமின் ப எப்போது பிரதான கட்சிகள் தருவார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்ற செய்தி கசிய தொடங்கி உள்ளது.
தமிழக வாக்காளர்கள் முன்பு எப்போதும் இல்லாத விதமாக எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அரசியல் வாதிகளுக்கு பிடிகொடுக்காமல் யாருக்கு தங்கள் ஓட்டு என்று சொல்லாமல் நழுவி வருவது தான் ஹைலைட். இதனால் பிரதான கட்சிகளின் நிர்வாகிகளின் எப்படி ஓட்டுகளை வாங்குவது என்று புலம்பலாக உள்ளது.
தேர்தல் கூட்டதிற்கு அழைத்து செல்லும் பொது ஜனங்களுக்கு ரூ 200 மட்டும் தருவதாக புலம்பல் எழந்துள்ளது. விலைவாசியை பொறுத்து ரூ 500 தர வேண்டும் என்று பொதுமக்கள் புலம்புலை கேட்க முடிந்தது.
இப்போதே 100 F வெயில் அடிப்பதால் மதுப்பிரியர்கள் பகலில் அரசியல் கட்சி கூட்டத்திற்கு எப்படி செல்வது என்ற ஆதங்கம் பல டாஸ்மாக் பார்களின் வாசலில் கேட்க முடிகிறது.
ஆட்டோவில் மைக் கட்டிக்கொண்டு போடுங்கம்மா ஓட்டு என்று ஒருவர் பேசி வருவதற்கு பதில் ரெக்டார்ட் செய்யப்பட்ட குரலில் இப்போது ஆட்டோக்களில் உள்ள ஒலிபெருக்கிகள் ஓட்டு கேட்டு வருகிறார்கள்.அதுவும் வெயில் போன மாலை நேரங்களில் மட்டும்.
வரும் காலத்தில் டிவி, மொபைல் போன்களில் உங்கள் வேட்பாளர் இவர் தான் என விளம்பரம் வந்து அதனை பார்த்து வாக்காளர்கள் ஓட்டு போடும் நிலை வந்துவிடும் என்று அரசியல் கட்சிகள் தெரிவிக்கிறார்கள்.
தமிழக்கத்தினை பொறுத்தவரை பிரதான கட்சிகள் தொண்டர்கள் கூட தேர்தல் பணியில் ஈடுபடாமல் சுணக்கமாக உள்ளனர்.
எகிறும் விலைவாசி , போதிய வேலையின்மை தான் தமிழக மக்களிடையே கவலையளிப்பதாக உள்ளது.இதனால் மக்கள் ஆளும் கட்சியாகட்டும், எதிர்கட்சியாகட்டும் ஓட்டு கேட்டு சென்றாலே விரக்தியாக காணப்படுவதாக கட்சிக்காரர்கள் இடையே டாக்காக உள்ளது.
எல்லாத்தையும் விட ஒத்தையில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போலவே 5பன்னீர் செல்வங்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருப்பது அரசியல் காமெடியாக உள்ளது.
திருவள்ளுர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தேர்தலில் பணம் செலவு செய்ய தனக்கு நன்கொடை அளிப்பீர் என்ற வாசகத்துடன் உள்ள வாட்ஸ் -அப் பார்வர்டு படம் வைரலாகி உள்ளது.
வெயிலும் சூடு பிடிக்க தொடங்கி விட்டது..ஆனால் தமிழக தேர்தல் பிரசாரம் மந்த நிலையில் இருப்பதே தற்போதைய கள நிலவரம்.!
Leave a comment
Upload