நிவேதா பெத்துராஜ்
தெலுங்கு படங்களில் நடித்த படி இந்தி வெப் சீரியல்களில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.
ரகசிய திருமணம்
நடிகர் சித்தார்த் நடிகை அதிதி ராவ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வைரலாகி கொண்டிருக்கிறது. ஆனால், இதை இருவரும் இன்று வரை மறுத்து கருத்து தெரிவிக்கவில்லை.
ராஷிகன்னா
குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தி சபர்மதி ரிப்போர்ட் என்ற இந்தி படத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் கதாநாயகி ராஷிகன்னா.
ஹன்சிகா
காந்தாரி என்ற படத்தில் நரிக்குறவர் பெண் அறநிலைத்துறை அதிகாரி என்ற இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ஹன்சிகா.
திரிஷா
மீண்டும் சிம்புவுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறார் நடிகை திரிஷா. அது விண்ணைத்தாண்டி வருவாயா போன்று ரொமாண்டிக் கதையாக இருக்க வேண்டுமாம்.
ரஜினி
ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தை சன் பிக்சர் தயாரிக்கிறது, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்திற்கான ஒரு போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருக்கிறார். அதில் ரஜினிகாந்த் கருப்பு கண்ணாடி அணிந்திருக்கிறார். இது தவிர ஒரு கைதியின் கையில் விலங்கு மாட்டி இருப்பது போல் ரஜினியின் கையில் வாட்சுகள் மாட்டப்பட்டுள்ளது. ரஜினியின் இந்த கெட்டப் உண்மையிலேயே ஸ்டைலு ஸ்டைலு தான்.
ஒய்ஃப்
ஆர் ஜே விஜய் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ஒய்ஃப் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் கதாநாயகி அஞ்சலி நாயர்.
தேசிங்கு ராஜா- 2
இயக்குனர் எழில் தேசிங்கு ராஜா இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். ஹீரோ விமல் தான். இது தவிர பூஜிதா பொன்னாடா ரோபோ சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பாடல் காட்சிக்காக 50 லட்சம் செலவு செய்து ஒரு பங்களா செட் அமைத்திருக்கிறார்கள். அங்கு பாடல் காட்சியில் விமல் மற்றும் சினேகா குப்தா ஆட படம் எடுத்து இருக்கிறார்கள்.
Leave a comment
Upload