தேர்தல் திருவிழா
முதலமைச்சருக்கு கிடைத்த இன்னொரு தகவல் இன்னொரு அதிர்ச்சி என்று ஆகிவிட்டது' என்று விகடகவியார் சொன்னதும் நாம் "அது என்ன அதிர்ச்சி தகவல் "என்று நாம் கேட்டதும் எல்லாம் அண்ணாமலை செய்யும் சில்மிஷம் தான் என்றார் விகடகவியார்.
"அவர் என்ன செய்தார் "
என்று நாம் கேட்க கோவையில் அண்ணாமலையை தோற்கடிக்க திமுக ,அதிமுக இரண்டும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி இருக்கிறது. கோவை பொறுப்பாளர் முத்துசாமியுடன் இணைந்து தேர்தல் பணி பார்க்க அமைச்சர் டி.ஆர். பி. ராஜா அங்கு முகாமிட்டிருக்கிறார்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலையும் விரைவில் தொடங்க இருக்கிறார்கள். எனவே தேர்தலுக்கு செலவு செய்யும் பசையுள்ள அமைச்சர்கள் முத்துசாமி, ஏ.வா வேலு, நேரு மூவரையும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை கண்காணிக்க வேண்டும், சோதனை செய்ய வேண்டும், தேவைப்பட்டால் கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்துகிறாராம் அண்ணாமலை.
அண்ணாமலை பொருத்தவரை கோவையில் திமுக தேர்தலுக்கு 200 கோடி ரூபாய் வரை செலவு செய்ய இருக்கிறது என்று சொல்லி டெல்லி தலைவர்களிடம் பேசி இருக்கிறார். இந்தத் தகவல் முதலமைச்சருக்கு கிடைத்திருக்கிறது. அவர் இந்த மூவரையும் அழைத்து உஷாராக இருங்கள் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் 'என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்
Leave a comment
Upload