தொடர்கள்
ஆன்மீகம்
" தவக்காலமும் ஈஸ்டர் திருவிழாவும் " - ஸ்வேதா அப்புதாஸ் .

ஏசுவின் உயிர்ப்பு ஞாயிறு அன்று தான் உலகம் முழுவதும் ஈஸ்டர் பெரு விழா கொண்டாடப்படுகிறது .

20240229011954101.jpg

ஏசு கன்னி மரியா சூசையப்பரின் அன்பு மகனாக உலகத்தில் உதயமான இறைவனின் மகன் அவரின் இளமை வயதில் அவர் செய்த புதுமைகள் மற்றும் மக்கள் அவர் மேல் வைத்த பாசம் மரியாதையை பொருத்து கொள்ளாத யூதர்கள் அவரை கொலை செய்தனர் என்பது உண்மை வரலாறு .

20240229012043937.jpg

ஏசுவின் பாடுகளை நினைவில் நிறுத்தும் நாற்பது நாட்கள் தான் தபசு காலம் .

20240229012109837.jpg

ஏசுவின் பாடுகள் இறப்பை நினைவில் நிறுத்தி மனம் திரும்பும் நாட்கள் தான் நாற்பது தபசு நாட்கள் .

விபூதி புதன் அன்று துவங்கும் தபசு ஏசுவின் சிலுவை இறப்பான புனித வெள்ளி அன்று முடிவுக்கு வரும் .

20240229012230896.jpg

சாம்பல் புதன் அன்று பழைய குருத்தோலைகளை எரித்து அந்த சாம்பலை திருப்பலி நேரத்தில் புனித படுத்த நெற்றியில் பூசுவார்கள் குருக்கள் .

20240229012345974.jpg

" மனிதா மண்ணில் இருந்து வந்தாய் மண்ணுக்கே திரும்புவாய் " என்றும்

" மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள் " என்று கூறுவர் .

அந்த நிமிடத்தில் துவங்கும் தபசு நாற்பது நாட்களுக்கு பல தியாகங்களை செய்து வருவது வழக்கம் .

இந்த நாற்பது நாட்களில் தினமும் ஏசு பாரமான சிலுவையை சுமந்து சென்ற நொடிகளை நினைவில் நிறுத்தி சிலுவை பாதை ஜெபித்து வந்தனர் .

தபசு நாட்களில் ஊட்டியில் ஐந்தாவது வாரம் சிலுவையை சுமந்த வண்ணம் பரிகார பவனி நடப்பது வழக்கம் .

20240229012431136.jpg

தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் இருந்து துவங்கும் பரிகார பவனி பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்னகத்தின் கல்வாரி என்று அழைக்கப்படும் குருசடிக்கு சென்று ஏசுவின் பாடுகள் நினைவு கூறப்பட்டு வருகிறது . இந்த பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம் .

20240229012456244.jpg

தபசு காலத்தில் முக்கியமான வைபவம் 'கிரிசம் மாஸ் ' அனைத்து மறைமாவட்டங்களில் உள்ள பேராலயங்களில் பணிபுரியும் அனைத்து குருக்களும் அந்தந்த பிஷப் தலைமையில் தங்களின் குருத்துவ வார்த்தைப்பாட்டை புதுப்பித்து கொள்ளும் வைபவம் நடத்தப்படுகிறது .

20240229012523122.jpg

மற்ற ஒரு சிறப்பான நிகழ்வு புதிய புனித எண்ணெய்களை புனித படுத்த பட்டு அனைத்து ஆலய குருக்களிடம் கொடுக்கப்படும் .

இந்த புனித எண்ணெய்யை புதிதாக குருவாக போகும் பணியாளர் எடுத்து வருவது வழக்கம் .

ஞானஸ்தானம் , உறுதி பூசுதல் மற்றும் நொய்யல் பூசுதல் ஒருவர் நோய்வாய்ப்பட்டாலும் இறக்கும் தருவாயில் இந்த புனித எண்ணெய் பூசப்பட்டு ஜெபிக்கப்படும் .

இந்த நிகழ்வு குருத்தோலை ஞாயிறுக்கு முந்தின வியாழகிழமை சிறப்பிக்கப்படுகிறது .

குருத்தோலை ஞாயிறு இந்த தபசு காலத்தில் முக்கியமான ஒன்று .

20240229012646638.jpg

ஏசுவை கழுதையில் ஏற்றி ஒலிவ செடிகளை கொண்டு ' ஓசன்னா தாவீதின் புதல்வா ' என்று வரவேற்ற அதே மனித வர்க்கம் நான்கு நாட்களில் அவரை அடித்து கொலை செய்த கொடூரம் நடைபெற்றதை உலகம் மறக்கவில்லை இது நாள்வரை .

குருத்து ஞாயிறு அன்றிலிருந்து புனித வாரம் சிறப்பிக்கப்படுகிறது .

20240229012803661.jpg

புனித வியாழன் அன்று மாலை ஏசு சிறப்பித்த இரவு உணவு நிகழ்வை நினைவுகூரும் சிறப்பு திருப்பலி மற்றம் ஏசு பன்னிரெண்டு சீடர்களின் கால்களை கழுவி முத்தம் கொடுத்த நிகழ்வு வருடந்தோரும் இந்த நாளில் நடத்தி நினைவுகூறப்படுகிறது.

20240229012829959.jpg

நீலகிரியின் முதல் கத்தோலிக்க ஆலயமான செயின்ட் மேரிஸ் ஆலய உதவி பங்கு குரு பிரெட்ரிக் தன் மறையுரையில் கூறினார் ,

20240229012914550.jpg

" ஏசுவின் பாடுகள் இறப்பை பற்றி நாற்பது நாட்களாக அனுசரித்து வந்த நேரங்களில் இந்த புனித வியாழன் மிக முக்கியமான திருவிழா கொண்டாட்ட நாள் .இன்று தான் ஏசு குருத்துவதையும் திவ்விய நற்கருணையை உருவாக்கின நாள் .

ஏசுவின் இராவுணவு நிகழ்வு நாம் எப்படி உணவு அருந்துகிறோம் என்பதை சுட்டி காட்டும் ஒரு நிகழ்வு குடும்பத்துடன் ஒன்றாக இணைந்து உட்கொள்ளும் உணவு தான் சிறப்பானது .

அதை தான் ஏசு தன் பன்னிரெண்ட சீடர்களுடன் அமர்ந்து நற்கருணை உணவை பகிர்ந்து உணவை உண்ணும் நிகழ்வை நமக்கு அறிவுறுத்தியுள்ளார் .

பல குடும்பங்களில் ஒன்று சேர்ந்து உணவை பகிர்ந்து உண்ணுவது இல்லை .

பல தாய்மார்கள் உணவே இல்லாமல் இருப்பது வேதனையான ஒன்று .

அதே போல குருக்கள் இல்லாமல் எதுவுமே இல்லை பிறப்பு முதல் இறப்பு வரை குருக்களின் ஆசீர் தேவை இந்த நாளில் தான் ஏசு குருத்துவத்தை உருவாக்கினார் .என்று கூறினார் .

20240229012954815.jpg

இந்த மாலையில் தான் ஏசு நற்கருணையை உருவாக்கினார் .

அந்த திருப்பலியில் ஒலிக்கும் ஆலய மணிகள் ஈஸ்டர் இரவு வரை அமைதிகாக்கும் .

புனித வியாழன் அன்று திருப்பலிக்கு பின் நற்கருணை எடுத்து தனியான இடத்தில் வைக்கப்பட்டு புனித வெள்ளி பகல் மூன்று மணிவரை சிறப்பு ஆராதனை நடைபெறுவது வழக்கம் .

2024022901413878.jpg

வெள்ளி அன்று பகல் மூன்று மணிக்கு தான் ஏசு சிலுவையில் உயிர்விட்டார் அந்த நேரத்தில் குருக்கள் ஆலய பீடத்தின் முன் முகம் குப்புற விழுந்து ஏசுவின் கொடூர இறப்பை நினைவுகூறுவர் .

20240229014201963.jpg

ஏசு சிலுவையில் உயிர் விடும்போது கூறின வார்த்தையால் தான் கிறிஸ்தவம் உயர்ந்து நிற்கிறது " இறைவா இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும் ".

20240229014734361.jpg

ஒரு நாள் அமைதிக்கு பின் ஈஸ்டர் இரவு ஆலயம் முழுமையாக இருட்டப்பட்டு ஆலய கதவுகள் மூடப்பட்டு புதிய நெருப்பு புனித படுத்தப்பட்டு அதில் இருந்து புதிய ஒளி ஏற்றப்படும் .

பாஸ்கா கேண்டில் புனித படுத்தப்பட்டு மெழுகு திரிகள் ஒளிர பட்டு ஆலயம் ஏசுவின் உயிர்ப்பை பிரதிபலிக்கும் .

20240229014529842.jpg

பெரிய அளவில் தண்ணீர் நிரப்ப பட்டு புதிய பஸ்கா கேண்டிலை தண்ணீரினுள் மூழ்கி புனித படுத்தப்பட்டு புனித நீர் அனைவரின் மேல் தெளிக்க படுவது ஏசுவின் உயிர்ப்பை நினைவு கூறப்படுவது தான் ஈஸ்டர் கொண்டாட்டம் .

20240229014916287.jpgஏசுவின் உயிர்ப்பு தங்களின் புதிய உயிர்ப்பாகவே கருதி ஈஸ்டர் தினத்தை கொண்டடுகின்றனர் .