கூட்டணிக் கட்சிகள் மீது ஸ்டாலின் கோபம்!
விகடகவியார் உள்ளே நுழைந்ததும் நைசான வெள்ளரிப் பிஞ்சுகள் லெமன் ஜூஸ் கொண்டு வந்து வைத்த ஆபீஸ் பையன் ' சனாதன எதிர்ப்பு போராளி உதயநிதி ஸ்டாலின் ஏன் திராவிட கழகத் தலைவர் வீரமணியை பிரச்சாரத்துக்கு துணைக்கு அழைத்துச் செல்லவில்லை.
இந்துக்கள் ஓட்டு போய்விடும் என்ற பயமா ' என்று கேட்க உடனே நம் பக்கம் திரும்பி பார்க்க நாம் அவசர அவசரமாக 'நாங்கள் அவனை கேட்க சொல்லவில்லை. அவனே சுயமாக சிந்தித்து கேட்டிருக்கிறான் என்று சமாளித்தோம். அதை கண்டு கொள்ளாமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரும்பாலும் வீரமணியை பயன்படுத்த மாட்டார்கள். அந்த சமயத்தில் அவரை கொஞ்சம் தள்ளி தான் வைப்பார்கள் என்று ஆபீஸ் பையனை பார்த்து பதில் சொல்லிவிட்டு வெள்ளரிப் பிஞ்சுகளை சுவைக்க ஆரம்பித்தார். 'ஆளுங்கட்சி கூட்டணி பற்றி சொல்லும் ' என்று நாம் சொன்னதும்
மத்தியில் ஆளும் கட்சி கூட்டணியா தமிழக ஆளும் கட்சிக் கூட்டணி தெளிவாக சொல்லும்' என்று விகடகவியார் கேட்க "தமிழக ஆளுங்கட்சி தான் "நாம் சொன்னதும்
' முதலமைச்சர் கூட்டணிக் கட்சிகள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். ஏற்கனவே நீங்கள் எதிர்பார்த்த சின்னம் கிடைக்காது. தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதாவின் கை பாவை ஆகிவிட்டது. உதயசூரியன் சின்னத்தில் போட்டி போட்டால் வெற்றி உறுதி என்று சொல்லியும் கேட்காமல் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் மதிமுக நாங்கள் எங்கள் சொந்த சின்னத்தில் தான் போட்டி போடுவோம் என்று பிடிவாதம் பிடித்து கடைசியில் உயர்நீதிமன்றம் வரை சென்றும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை. விடுதலை சிறுத்தை கட்சிக்கு மண்பானை சின்னம் கிடைக்கவில்லை. இதில் வேடிக்கை மண்பானையைக் காட்டி எங்கள் சின்னம் மண்பானை என்று ஓட்டு கேட்க ஆரம்பித்துவிட்டது. இப்போது அவர்கள் எதிர்பார்த்த சின்னம் கிடைக்காததால் அவர்களின் வெற்றி வாய்ப்பு பற்றிய சந்தேகம் முதலமைச்சருக்கு வரத் தொடங்கி இருக்கிறது என்று சொன்னார் விகடகவியார்.
அப்போது "வைகோவின் வாரிசு "என்று நாம் ஆரம்பித்ததும் வைகோ மகன் துரை வைகோ பொது மேடையில் அமைச்சர் கே .என். நேரு இருக்கும் போதே நான் சுயமரியாதை காரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டி போட மாட்டேன். எங்கள் கட்சி சின்னத்தில் தான் போட்டி போடுவோம் என்று பேசியதை நேரு அவ்வளவாக ரசிக்கவில்லை. எனவே அந்த கூட்டத்தில் சுருக்கமாக இரண்டு வரி பேசிவிட்டு கூட்டத்தை முடித்து விட்டார். அதன் பிறகு முதலமைச்சரை தொடர்பு கொண்ட அமைச்சர் நேரு மதிமுக விடுதலை சிறுத்தை கட்சி இரண்டும் தனிச்சின்னத்தில் போட்டி போடுவோம் என்று சொன்னார்கள். அதை நீங்கள் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் அத்தோடு விஷயம் முடிஞ்சது தானே எதற்கு பொது மேடையில் நான் சுயமரியாதைகாரன் என்றெல்லாம் துரை வைகோ பேசுகிறார். .அப்ப எங்களுக்கெல்லாம் சுயமரியாதை கிடையாதா நான் பதிலுக்கு பேசவா இவர்களை எல்லாம் சட்டமன்றத் தேர்தல் போது தள்ளியே வையுங்கள் என்று ஆவேசப்பட்டு இருக்கிறார் நேரு. இப்போது எந்த பிரச்சனையும் வேண்டாம் தேர்தல் முடியட்டும் என்று முதல்வர் அவரை சமாதானம் செய்திருக்கிறார்.' என்றார் விகடகவியார்.
"ஈரோடு மதிமுக பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மரணம் " என்று நாம் ஆரம்பித்ததும் இதையும் கூட்டணியில் ஒரு பின்னடைவாக பார்க்கிறார் முதல்வர். தொகுதி பங்கீடு தற்கொலை வரை கொண்டு சென்று விட்டது. எல்லாவற்றிற்கும் வைகோ மற்றும் அவர் மகன் தான் காரணம். ஆனால், நம்மிடம் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று சொல்லி அமைச்சர் துரைமுருகனிடம் வருத்தப்பட்டு இருக்கிறார் கனிமொழி. கருணாநிதி முத்துசாமி ஆகியோரை தன் சார்பாக சென்று அஞ்சலி செலுத்த சொல்லி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று சொல்லிவிட்டு மீண்டும் சுட சுட செய்தியுடன் வருகிறேன் என்று அவசரமாக விகடகவியார் கிளம்பி போனார்.
Leave a comment
Upload