கடவுளின் தேசம் என்று அழைக்கும் கேரளாவில் கோயில்கள் , ஆலயங்கள் , மசூதிகள் அதிகமாக இருந்தாலும் கம்யூனிச ஆட்சி தான் நடப்பது ஆச்சரியமான ஒன்று தான்.
கிறிஸ்தவ ஆலயங்கள் எல்லா கேரள மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது .
கத்தோலிக்க பிரிவின் ஆரம்பமே கேரளா தான் இயேசுவின் சீடர் தாமஸ் இங்கு தான் முதன் முதலில் கிறிஸ்தவ கோட்பாடுகளை விதைத்தார் .
வயநாடு மாவட்டத்தில் உள்ள பள்ளிக்குன்னு என்னும் கிராமத்தில் 1908 ஆம் ஆண்டு பிரென்ச் பாதிரியார் ஜெபர்னோ என்பவரால் ஒரு ஆலயம் கட்டபட்டு பிரான்சில் இருந்து லூர்து அன்னை சுரூபம் எடுத்து வந்து புனித படுத்தி வைத்தார் .
அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆலயத்திற்கு அவ்வப்பொழுது வந்து போய்க்கொண்டிருக்க சில புதுமைகள் நடந்தது வெளியுலகிற்கு தெரிய வர பக்தர்கள் அன்னையை தரிசிக்க துவங்கியுள்னர் .
சிறிய ஆலயமாக இருந்து தற்போது பெரிய ஆலயமாக எழுந்து நிற்கிறது .
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த லூர்து அன்னையிடம் வந்து ஜெபிக்க குழந்தை வரன் கிடைத்துள்ளது .
கை குழந்தையுடன் நேரில் வந்து மாதாவுக்கு நன்றி செலுத்துகிறார்கள் .
குழந்தைகளின் புகை படங்கள் குவிந்து காணப்படுகின்றன .
இப்படி ஏராளமான வேண்டுதல்களுடன் இந்துக்களும் , இஸ்லாமியர்கள் இங்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள் .
சுதாகர் என்பவர் கூறுகிறார் , " இங்கு வந்து லூர்து அம்மாவிடம் நம் கஷ்டத்தை கூறி சென்றால் நம் வீடு செல்வதற்குள் நம் பிரச்சனை தீர்ந்திருக்கும் இது எனக்கு நடந்தது ".
இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் தீர்வு கிடைக்காமல் திரும்பிச்செல்வதில்லையாம் .
வித்தியாசமான வேண்டுதல்களை இந்த ஆலயத்தில் பார்க்கமுடிகிறது .
தேவைகளை எதிர்நோக்கி தலையில் கல் வைத்து தாங்கி பிடித்து ஆலயத்தை சுற்றி வருகிறார்கள் .
வேறு சிலர் முட்டி காலில் தவழ்ந்து ஆலயத்தை சுற்றி வருகிறார்கள் .
வருடந்தோறும் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி துவங்கும் ஆலய விழா 18 ஆம் தேதி தான் முடிவுக்கு வருகிறது .
தொடர்ந்து பதினாறு நாள் சிறப்பு விழா தான் .
லூர்து அன்னை திருவிழா பிப்ரவரி 11 ஆம் நாள் உலகம் முழுவதும் சிறப்பிக்கும் தருணத்தில் இந்த ஆலயத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது .
பிப்ரவரி 2 ஆம் நாள் கொடியேற்றத்துடன் விழா துவங்க தினமும் சிறப்பு பக்தி நிகழ்வுகள் நடைபெறுகிறது .அதில் திருப்பலி மிக முக்கியமான ஒன்று .
விழா நாட்களான பதினாறு நாட்களும் அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்க படுகிறது .இதற்கான பொருள்கள் அன்பளிப்பாக கொடுக்கப்படுகிறது .
தேர் பவனிக்கு ஆலயத்தில் வீற்றிருக்கும் லூர்து அன்னையின் அற்புத சுரூபத்தை தான் எடுத்து செல்கின்றனர் .
பின்னர் அந்த சுரூபம் ஆலய வாயிலில் வைக்கப்பட்டு பக்தர்கள் தங்களின் நேர்ச்சையை செலுத்துகின்றனர்.
விழாவின் இறுதி நாள் ஞாயிற்று கிழமை சிறப்பு திருப்பலிகள் சிறப்பிக்க பட்டு வருகின்றன .
பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேர்ச்சை உணவில் கலந்து கொள்கின்றனர் .
சாதாரண கேரளா அரிசி சாப்பாடு பின் காய் குழம்பு .
வழக்கமாக இப்படிப்பட்ட உணவை சாப்பிடுவது சற்று சிரமம், ஆனால் இந்த ஆலய நேர்ச்சை உணவு ஒரு வித்தியாச மான சுவை எதோ அமிர்தத்தை உட்கொண்டது போல இருந்தது . அது தான் அற்புத உணவு என்கின்றனர் .
கடைசி நாள் நேர்ச்சை உணவுக்கான அரிசி வீடு வீடாக சென்று அரிசி வாங்கிவந்து உணவு தயாரிக்க பட்டு வழங்கப்பட்டது .
இதற்கான பெரிய கிச்சன் அடுப்புகள் எப்பொழுதும் தயார் நிலையில், உணவுக்கான அனைத்து பொருள்களும் அன்பளிப்பாக ஆலயத்திற்கு வந்து சேருகிறது .
வருடாந்திர விழா முடிந்தாலும் ஒவொரு சனிக்கிழமையும் சிறப்பு திருப்பலி மற்றும் நேர்ச்சை உணவு வழங்க பட்டு வருகிறது .
அருள் மழை பொழிய லூர்து அன்னை இந்த அற்புத ஆலயத்தில் வீற்றிருப்பது, வரப்பிரசாதம் என்கின்றனர்.
Leave a comment
Upload