ராஷ்மிகா
ராஷ்மிகா மந்தனா தனது சம்பளம் 3.5 கோடியிலிருந்து 4.5 கோடி என்று உயர்த்தி இருக்கிறார்.
லால் சலாம்
ரஜினியை வைத்து படம் பண்ணுவதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால், அது இந்த கதைக்கு தானாக நடந்தது. என்கிறார் லால் சலாம் பட இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
மெட்ராஸ் காரன்
தெலுங்கு நடிகை நிஹாரிகா மலையாள நடிகர் ஷேன் நிகாம் நடிக்கும் தமிழ் படத்துக்கு மெட்ராஸ் காரன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் .வாலி மோகன் தாஸ் இந்த படத்தை இயக்குகிறார்.
பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே வயது இப்போது 31. அவரது உயரம் 175 சென்டிமீட்டர் அவரது சொத்து மதிப்பு ஏழு மில்லியன்.
நயன்தாரா
நயன்தாரா ஒருவரை பிடிக்கவில்லை என்று ஒதுக்கி அவருடன் பேசுவதை தவிர்த்தால் அவர் நிச்சயம் கெட்டவராக தான் இருப்பார். நயன்தாராவுடன் நடித்த அம்மா நடிகை சரண்யா பொன்வண்ணன் இப்படி சொல்கிறார்.
அனுஷ்கா
அனுஷ்காவுக்கு இப்போது வயது 43. அவரின் சொத்து மதிப்பு 130 கோடி. அனுஷ்கா கார் பிரியர், அவர் சொந்தமாக ஏழு கார் வைத்திருக்கிறார். அவருக்கு தங்க நகைகளை விட வைர நகைகள் தான் அதிகம் பிடிக்கும். எனவே அதிக அளவு வைர நகைகள் அவர் வைத்திருக்கிறாராம்.
யாஷிகா ஆனந்த்
தனது நெருங்கிய தோழி விபத்தில் இறந்த பிறகு நடிகை யாஷிகா ஆனந்த் பார்ட்டிகளுக்கு போவதை தவிர்த்து வருகிறார்.
தீபிகா படுகோன்
நடிகை தீபிகா படுகோனுக்கு பிடித்த உணவு ரசம் சாதம். சென்னையில் அவர் இருந்தால் ரஜினி வீட்டில் இருந்து அவருக்கு ரசம் சாதம் வந்துவிடும்.
லட்சுமி மேனன்
யோகி பாபுவின் வானவன், ஆதியின் சப்தம், இது தவிர ஆரி நடிக்கும் படம் என்று மூன்று படங்கள் லட்சுமிமேனன் கைவசம் இருக்கிறது.
சுட சுட
புஷ்பா 2
புஷ்பா 2 படத்தில் முக்கிய காட்சிகள் ஜப்பானில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறது. ஆகஸ்ட் 15-ல் இந்த படம் வெளிவரும்.
ரஜினி
லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் கார் மேடைக்கு அருகில் வந்து, அந்த காரில் இருந்து ரஜினி இறங்கிய வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.
ஜோதிகா
சூர்யா ஜோதிகா குழந்தைகள் மும்பையில் படிப்பதால் அவர்கள் இருவரும் மும்பையில் குடியேறிவிட்டார்கள். குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் தமிழ் படங்களை தவிர்த்து வருகிறார் ஜோதிகா. சென்னைக்கு வந்து குழந்தைகளை விட்டுவிட்டு நீண்ட நாள் படப்பிடிப்பில் கவனம் செலுத்த முடியாது என்று காரணம் சொல்கிறார். அதேசமயம் இந்தி படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறார்.
ராம் சரண்
தெலுங்கு நடிகர் ராம்சரண் இவரது மனைவி உபாசனா. உபாசனா அப்போலோ நிர்வாக வாரிசு. திருமணம் ஆகி கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற ஆண்டு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பெயர் கிளீன் காரா. ராம்சரண் சினிமாவில் பிசி. உபாசனா அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தில் பிசி. எனவே தங்கள் குழந்தையை கவனித்துக் கொள்ள சாவித்திரி என்ற ஒரு கேர் டேக்கரை நியமித்திருக்கிறார்கள். இவர் ஏற்கனவே கத்ரினா உள்பட பல நடிகைகள் குழந்தைகளை பராமரித்து வந்தவர் .இவருக்கு மாத ஊதியம் ரொம்பவும் கம்மி 5 லட்சம் தான்.
Leave a comment
Upload