தர்மஸ்ய சாசனம் கரோதி இதி தர்மசாஸ்தா
தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக இருப்பதால் தர்மசாஸ்தா என்று அழைக்கப்படுகிறார்.
அந்த: ப்ரஷ்டை சாஸ்தாஜனானாம்
சர்வாத்மா சர்வாப்ரஜா எத்ரைகம் பவந்னீ
எந்த இடத்தில் மக்கள் எல்லோரும் ஒருவராக காட்சியளிக்கிறார்களோ, எந்த பரமாத்மா சகல ப்ரஜைகளின் உள்ளங்களிலும் குடி கொண்டு இருக்கிறாரோ அத்தகைய பரமாத்மா வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத நிலையில் இருந்தும், அவர்களின் பாக்கிய விசேஷத்தால் ஸ்ரீசாஸ்தா என்ற திருனாமம் பூண்டு என்றென்றும் ஆட்சி புரிகிறார் என்று வேதம் கூறுகிறது.
ஸ்ருதி ஸ்ம்ருத்யாதிபி:சர்வேஷா
மனுஷிஷ்டிம் கரோதீதி சாஸ்தா
வேதம் ஸ்ம்ருதி சர்வ மந்திரங்கள் முதலியவற்றை உண்டுபண்ணியதால் சாஸ்தா என்று விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் ஓம் சாஸ்த்ரே நம: எட்ர நாமாவிற்கு ஸ்ரீ ஆதிசங்கரர் விளக்கம் கொடுத்துள்ளார்.
சாஸ்தா சர்வஸ்ய லோகஸ்ய
தஸ்மாத் சாஸ்தேதி சோஸ்யதே
என்று சுப்ரமேதாகம நூல் கூறுகின்றது.
சாஸ்தா இதி சாஸ்தா
அதாவது அடக்குபவன் என்று நாமலிங்கானு சாசனம் என்ற நிகண்டு பொருள் உறைக்கின்றது.
ஸ்ரீமத் சிவாகமங்களில் சாஸ்தா என்ற சொல்லுக்கு உலகங்களைஆள்பவர் என்றும், ஆணை செய்பவர் என்றும் மக்கள் மனங்களில் ஊடுறுவியவர் என்றும் பொருள் கூறப்படுகின்றன. பகவான் அவதரித்தவுடன் பரமேஸ்வரர் அவருக்கு சர்வலோக சாஸ்த்ருத்வம் அளித்து சாஸ்தா என்று பெயர் சூட்டினார்.
சாஸ்தா என்ற திருனாமத்திற்கு எல்லா உலகையும் ஆள்பவன் என்று பொருள்.
பல நூல்களிலும் பாடல்களிலும் சாஸ்தா நாமங்கள்
லக்ஷ்மி கல்பத்தில்
மாஹா சாஸ்தா
ஜவ சாஸ்தா
ப்ர சாஸ்தா
சத்ரு சாஸ்தா
சர்வ சாஸ்தா
சாஸ்தா
ஆகாசபைரவ கல்பத்தில்
மஹா சாஸ்தா
சத்ரு சாஸ்தா
பால சாஸ்தா
ஜகத் சாஸ்தா
அக்னி சாஸ்தா
ப்ர சாஸ்தா
சிதம்பரத்தில் எட்டு திசையிலுள்ள சாஸ்தா
மஹா சாஸ்தா
பால சாஸ்தா
தர்ம சாஸ்தா
பிரம்ம சாஸ்தா
ஜகன் மோஹன சாஸ்தா
கிராத சாஸ்தா
வைஷ்ணவ சாஸ்தா
ரௌத்ர சாஸ்தா
அஷ்ட சாஸ்தா
மஹா சாஸ்தா
விஸ்வ சாஸ்தா
பால சாஸ்தா
கால சாஸ்தா
தர்ம சாஸ்தா
சில்ப சாஸ்தா
கிராத சாஸ்தா
சம்மோஹன சாஸ்தா
வேறு சில சாஸ்தா நாமங்கள்
அகோர சாஸ்தா ஆகாய சாஸ்தா
ஆதி சாஸ்தா ஆர்ய சாஸ்தா
உக்ர சாஸ்தா கண சாஸ்தா
கல்ப சாஸ்தா கல்யாண சாஸ்தா
கோர சாஸ்தா ஞான சாஸ்தா
சர்வ சாஸ்தா தத்வ சாஸ்தா
திவ்ய சாஸ்தா தேவ சாஸ்தா
தந்த்ர சாஸ்தா பரத சாஸ்தா
பாதாள சாஸ்தா பிரம்ம சாஸ்தா
பீம சாஸ்தா புவன சாஸ்தா
பூ சாஸ்தா பூத சாஸ்தா
போக சாஸ்தா ப்ரணவ சாஸ்தா
மந்த்ர சாஸ்தா மஹாராஜ சாஸ்தா
மோஹன சாஸ்தா யந்த்ர சாஸ்தா
யாம சாஸ்தா யோக சாஸ்தா
ராஜ சாஸ்தா ருத்ர சாஸ்தா
லோக சாஸ்தா வரத சாஸ்தா
விஜய சாஸ்தா வீர சாஸ்தா
வேத சாஸ்தா சத்ய சாஸ்தா
ஐய்யனார் பதினாறு பேதங்களை உடையவர் என்று தியானரத்னாவளி என்ற நூல் கூறுகிறது.
மதகஜ சாஸ்தா மோஹினி சாஸ்தா
அமிருத சாஸ்தா கிராம சாஸ்தா
உக்ர சாஸ்தா வீர சாஸ்தா
லக்ஷ்மி சாஸ்தா பால சாஸ்தா
மதன சாஸ்தா பீஷண சாஸ்தா
ருத்ர சாஸ்தா வரத சாஸ்தா
அசுவ சாஸ்தா சௌந்தர சாஸ்தா
புவன சாஸ்தா மஹா சாஸ்தா
மலைகளில் பிரதிஷ்டிக்கப்படும் சாஸ்தாவை பதினாறு கைகள் உடையவராகவும்;
காட்டில் பிரதிஷ்டிக்கப்படும் சாஸ்தாவை பத்து கைகள் உடையவராகவும்;
நகரங்களில் பிரதிஷ்டிக்கப்படும் சாஸ்தாவை எட்டு கைகள் உடையவராகவும்;
கிராமங்களில் பிரதிஷ்டிக்கப்படும் சாஸ்தாவை இரண்டு கைகள் டையவராகவும்;
பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று ஸ்ரீமத்சிவாகமம் கூறுகிறது.
தமிழ் நிகண்டுகளில் சாஸ்தா நாமங்கள்
அரிகர புத்திரன் அலைகடல் வண்ணன்
அறத்தைக் காப்பவன் ஆரியன்
எண்கரன் ஐயன்
கடல் நிறவண்ணன் யோகி
கோழிக்கொடியோன் காரி
செண்டாயுதன் கையன்
சாந்தன் சாதவாகனன்
செண்டணிந்தோன் சண்டாயுதன்
தண்டிப்போன் தண்டணிந்தோன்
பச்சைபரியுள்ளோன் நெய்தற்பூண்டோன்
பூரணை கணவன் புட்களை கணவன்
மாலரன் சேய் புறத்தவன்
கடல் வண்ணன்
வெள்ளை யானையுள்ளோன்
வெள்ளை யானை ஊர்தி
வெள்ளை யானை வாகனன்
சாதாவின் வேறு பல நாமங்கள்
ஆபத்துதாரகன் பெரியசாமி
கலியுக வரதன் ஆரிய தாதா
சாத்தையன் சாத்தப்பன்
சிவாத்மஜன் சாஸ்த்ரையன்
வனபதி கோடிபதி
புவனேச்வரன் தேவோத்தமன்
பூத வல்லபன் ருத்ரஜன்
பூத சேனானி ஆதிநாதன்
பூதனாதன் கஜாரூடன்
பராய குப்தன் ஆர்யநாதன்
குருநாதன் நீலாம்பரன்
கிராமபாலன் வைவஸ்வதபதி
விப்ரபூஜ்யன் ஆரிய தாதா
இவற்றில் பரமேஸ்வரன் மஹாசாஸ்தாவிற்கு அருளிய நாமங்கள்:
தன்னால் எல்லா புவனங்களுக்கும் பட்டபிஷேகம் செய்யப்பட்டதால் புவனேஸ்வரன் என்றும், ஈரேழு உலகங்களையும் அரசாள்வதால் சாஸ்தா எனவும், சகல உலகங்களில் உள்ள பூத கணங்களுக்குத்தலைவனாக விளங்குவதால் பூதனாதன் எனவும், ஹரியாகிய விஷ்ணுவிற்கும் ஹரனான தனக்கும் மகனாக பிறந்ததால் ஹரிஹர புத்திரன் எனவும் அடங்கும்
சாஸ்தாவின் நாமங்களை கணக்கிட்டு எண்ண முடியாது. அளவிவிட்டுக் கூறவும் முடியாது.
அடுத்த இதழில் "மஹசாஸ்தாவின் வாசஸ்தலங்கள்" பற்றி தொடர்கிறார்..........
Leave a comment
Upload