தொடர்கள்
ஆன்மீகம்
அயோத்தி செல்லும் சாமான்யர்கள் - மரியா சிவானந்தம்

20240019182246709.jpeg

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடைப்பெற்று கொண்டு இருக்கிறது . இந்தியாவே ஆவலுடன் இந்த கும்பாபிஷேக விழாவைக் காண ஆவலுடன் காத்திருக்கிறது. 2500 முக்கிய பிரமுகர்களுக்கு விழா கமிட்டியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது . பலரை விழா அமைப்பாளர்கள் நேரில் சந்தித்து, அழைப்பிதழைத் தருகிறார்கள் . இவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் இரண்டு பெண்மணிகள் என் கவனத்தைக் கவர்ந்தார்கள்.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள கரம்தாண்டில் வசிக்கும் 85 வயதான சரஸ்வதி தேவி அகர்வால் அழைக்கப்பட்டவர்களில் ஒரு பெண்மணி . 30 ஆண்டுகளாக மௌன விரதம் கடைப்பிடித்து வந்த அவர், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகுதான் அதை முறிப்பதாக தீர்மானித்து இருந்தவர் .1992 ஆம் ஆண்டு முதல் மௌன விரதம் கடைபிடித்து வரும் இந்த பக்தை , கோவில் கும்பாபிஷேக விழாவில் மகிழ்ச்சியுடன் கலந்துக் கொள்ள காத்திருக்கிறார் / இவரை வரவேற்று , அழைத்துச் செல்லவும் அயோத்தியில் சகோதரர்களுடன் தங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன . "ராம் சியா ராம்' என்று கோஷமிட்டு தன்னுடைய மௌன விரதத்தை ஜனவரி 22ஆம் தேதி முடித்துக் கொள்கிறார் இந்த ராம பக்தை

2024001913364660.jpg .

ராமர் கோவில் திறப்பு விழாவில் அழைப்பு விடுக்கப்பட்ட மற்றும் ஒரு பெண்மணி சந்தோஷி துர்கா . சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நர்ஹாம்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யும் உதவியாளர் இவர் .சந்தோஷியின் சேவையைப் பாராட்டி விருதுகளும் ,பாராட்டுகளும் குவிந்துள்ளனது . இப்போது ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் .அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றதும் அவர் ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார் . "அயோத்தி கோவில் விழாவில் பங்கேற்பேன் ,என் ஊர் மக்களுக்கு , மகிழ்ச்சியும்,அமைதியும் கிடைக்க பிரார்த்தனை செய்வேன் " என்கிறார் சந்தோஷி .

20240019133721182.jpg

சிறப்பு அழைப்பு கிடைக்கப் பெற்றவர்கள் அயோத்தியை நோக்கி தங்கள் புனித பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். இவர்கள் பக்தி பரவசத்துடன் விழா நிகழ்வுகளில் பங்கேற்க இருக்கிறார்கள் . ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பே ஒருவர் அயோத்தியை நோக்கி தன் பயணத்தைக் தொடங்கி விட்டார் .நடைப்பயணம் சென்று கொண்டு இருக்கும் இவர் சல்லா ஸ்ரீனிவாச சாஸ்திரி. ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் வருமானத்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்ற அதிகாரி.

20240019133801946.jpg

அயோத்தியில் இருந்து ராமர் ராமேஸ்வரத்துக்கு வந்த பாதையை ஆராய்ச்சி செய்ய முடிவு செய்து கடந்த ஜூலை 20ஆம் தேதி தன் பாத யாத்திரையை ராமேஸ்வரத்தில் துவக்கி விட்டார். 8000 கி.மீ தூரத்தை தன் கால்களால் நடந்துச் சென்று கடக்க இருக்கிறார். அத்துடன் ராமர் கோவிலில் காணிக்கையாக செலுத்த ஒரு கிலோ தங்கம் ,7 கிலோ வெள்ளியில் இரண்டு பாதுகைகளை தயார் செய்து அதை தன் தலைமேல் சுமந்துச் செல்கிறார். இதன் மதிப்பு 65 லட்சம் ஆகும். அடுத்த இரு வாரங்களில் அயோத்தியை அடைந்து தன் காணிக்கையை செலுத்த இருக்கிறார் இந்த நவீன பரதன் .

இறைவன் அழைத்தால் அன்றி ஒருவர் கோவிலுக்குச் செல்ல முடியாது என்பது நம் அனைவரின் நம்பிக்கை .அரசு அழைக்கும் முன்பே இறைவன் அழைத்து உள்ளார் .ஆன்மிக நம்பிக்கை மட்டுமன்றி ,மக்கள் பணி செய்பவருக்கும் இறைவனிடம் இருந்து சிறப்பு அழைப்பு வந்துள்ளது . அது இறைவனின் கருணை அன்றி வேறில்லை .

கும்பாபிஷேக விழா நம் மக்களுக்கு மகிழ்ச்சியை ,வளத்தை அளிக்க வேண்டுவோம.

20240020093712477.png