தொடர்கள்
ஆன்மீகம்
மூலஸ்தானத்தில் ஜம்மென்று அமர்ந்த ஶ்ரீ ராமர் - மாலா ஶ்ரீ

20240019113048255.jpeg

அயோத்தியில் ₹1800 கோடி மதிப்பில் பிரமாண்ட ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி கருவறைக்குள் மூலவர் ராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்விழாவின் முதல்கட்டமாக, கடந்த 2 நாட்களாக 121 ஆச்சார்யார்கள் ஹோமங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு சடங்குகளை மேற்கொண்டு வருகின்றனர்.வரும் 22ம் தேதி மதியம் 12.20 மணி முதல் 1 மணிவரை கருவறையில் வெள்ளியால் ஆன மூலவர் ராமர் சிலையின் பிரதிஷ்டை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11 நாட்களாக கடும் விரதத்தை மேற்கொண்டு வருகிறார். இவ்விழாவில் பிரதமர் மோடியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி. கவர்னர் ஆனந்திபென் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்பட பல்வேறு விவிஐபிக்கள் பங்கேற்கின்றனர்.

அயோத்தி ராமர் கோயிலில் வரும் 22ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் வெள்ளியால் ஆன ராமர் சிலை, கடந்த 18-ம் தேதி கருவறைக்குள் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராட்சத கிரேன்கள் மூலம் கோயில் கருவறைக்குள் வெள்ளியால் ஆன பிரமாண்ட ராமர் சிலை கொண்டு செல்லப்பட்டது. அதற்கு முன்னதாக, அச்சிலைக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் முக்கியமான நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அவ்வளாகம் முழுவதிலும் பக்தர்களின் ‘ராம்… ராம்…’, ‘ஹேராம்’ கோஷங்கள் விண்ணை அதிரவைத்தது.

20240020093746637.png