தொடர்கள்
வரலாறு
அயோத்தி இளவரசியை மணந்த தென்கொரிய மன்னர்!- ஆர்.ராஜேஷ் கன்னா

20240017184351223.jpeg

2000 வருடங்களுக்கு முன்பு ஒரு ப்ளாஷ்பேக்….அயோத் என்பது பழங்காலத்தில் அயோத்தியை இப்படி தான் சொல்லி அழைப்பாளர்கள். அயோத் மன்னர் பத்மசேனன் ஆட்சி செய்த கௌசலா பண்டைய ராஜ்ஜியம் உத்திரபிரதேசம் முதல் ஓடிசா வரை பரந்து விரிந்து இருந்தது. அரசர் பத்மசேனனின் மனைவி ராணி இந்துமதிக்கு சம்யூக் யூசோ மற்றும் சூரிரத்னா என்ற இருமகள் கள் இளவரசியாக பிறந்தனர்.

பதினாறு வயது நிரம்பிய சூரி ரத்னா மன்னரின் செல்லமகள் .தன் மகள் சூரி ரத்னாவை கொரிய நாட்டு மன்னர் கிம் சுரோவிற்கு மணமுடிக்க வேண்டும் என்று கனவில் இருந்தார். இதனை தன் செல்ல மகள் சூரி ரத்னாவிடம் தன் ஆசையினை தெரிவித்ததும் தன் தந்தையின் கனவினை நிறைவேற்ற ஒப்புகொண்டு , கப்பலில் பயணம் செய்து கொரிய நாட்டிற்கு சென்றார்.

கொரிய நாட்டு மன்னர் கிம் சுரோ தற்போதைய தென் கிழக்கு கொரிய நாட்டில் கிம்கே நகரத்தில் தெற்கு க்யோங்சங் மகாணத்தினை அமைத்து ஆட்சி செய்து வந்தார். சூரி ரத்னாவிற்கும் மன்னர் கிம் சுரோவிற்கும் திருமணமாகி 12 பிள்ளைகள் பிறந்தனர் .நமது சூரி ரத்னாவிற்கு கொரியாவில் ராணி ஹு ஹவங் என்று பெயரிட்டு அழைத்தனர். இதனால் அயோத் நாட்டிற்கும் கொரியாவிற்கும் வர்த்தகம் நன்றாக நடைப்பெற்று வந்தது.

கொரிய நாட்டில் நடந்த சமீபத்திய ஆராய்ச்சியில் அயோத்திக்கும் கொரியாவிற்கும் இடையே இருந்த நட்புறவு வரலாற்று நூல்களில் எழதப்பட்டுள்ளது என்றும் அயோத்தி இளவரசி கொரிய நாட்டு மன்னர் கிம் சுரோ திருமணம் முடித்த விவரங்கள் கிடைத்தது .கொரிய மன்னர் கிம் சுரோ கல்லறையில் ஆராய்ச்சி செய்த போது அவருடன் அயோத்தியில் வந்த விலைமதிப்பற்ற கலைபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2024001718441646.jpg

2019 ஆண்டு இந்திய தபால் துறையில் அயோத்தியில் பிறந்த நமது சூரி ரத்னாவிற்கு ரூ5 மற்றும் ரூ25 தபால் தலைகள் வெளியிடப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

தற்போது அயோத்தியில் இராமபிரான் கோயில் திறப்பு விழாவிற்கு பின்பு அயோத்திக்கு கிம் சுரோ மற்றும் அவரது மனைவி சூரி ரத்னா என்கிற அரசி ஹு -ஹவங் வம்சாவளியினர் தென் கொரிய மக்கள் கிட்டதட்ட ஒரு லட்சம் பேருக்கு மேல் அயோத்தி வந்து தங்களது ராணியின் நினைவு சின்னத்தையும் அதே நேரத்தில் அயோத்தி ராமபிரான் கோயிலை தரிசித்து செல்வார்கள் என்று தென் கொரிய அரசு திட்டம் வகுத்து அதற்கான பணிகள் நடைப்பெற்று வருவதாக தகவல் !.

20240020093617956.png