இருபது ஆண்டுகளுக்கு மேல் மக்களது வாழ்க்கையில் மிக மிக அவசியமான நவீன சாதனம் மொபைல் .ஒருகாலத்தில் டி .வி முன்பு நேரம் காலம் இன்றி விழுந்து கிடந்த மனித இனம் இப்போது மொபைலில் தலை கவிழ்ந்து இருக்கிறது . தொலைபேசிக்கு மாற்றாக , பேச மட்டுமே பயன்படும் என்று நினைத்த கருவி, இப்போது இணையத்தை முழுமையாக பயன்படுத்தி அடுத்தடுத்த படிகளுக்கு சென்று விட்டது. எல்லா விதங்களிலும் நமக்கு உற்ற நண்பனாக இருந்த மொபைல், இன்று நம்மை அடிமைப்படுத்தும் தலைவனாக ஆட்சி செய்கிறது . குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எந்நேரமும் மொபைலைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்
இந்த வார விவாதப் பொருள்
"தலை குனிந்து மொபைலில் ஆழ்ந்து கிடக்கும் இன்றைய இளம் தலைமுறையை மீட்பது எப்படி ?"
இந்த கேள்வியைப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தவர் ஜெயஶ்ரீ சுரேஷ் , ஹாங்காங்
அவர் கூறுகிறார் .
"என்னது ,இளைய தலைமுறை மட்டுமா மொபைலில் ஆழ்ந்துக் கிடக்கிறார்கள்? எல்லா வயதினரும் தானே மொபைலுக்கு அடிமையாக இருக்கிறார்கள் . சமீப காலத்தில் எனக்கு ஆச்சரியம் தந்தவர்கள் இருவர் , ஒருவர் என் அம்மா, மற்றவர் என் மாமியார். இருவருமே மொபைலில் விழுந்து கிடப்பது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.All are hooked with mobile"
படத்தில் இருப்பவர் ஜெயஸ்ரீயின் அம்மா
பார்கவன், Reston, VA USA
'ஒரு காலத்தில் ஸ்மார்ட் போன் விலையைப் பார்த்த போது , மொத்த மக்கள் தொகையில் ,வெகு குறைவான மக்களே அவற்றை வாங்க இயலும் என்று நினைத்தோம் /ஆனால் இப்போது எல்லோரும் வாங்கி பயன்படுத்த முடியும் .
இது ஒரு தீர்க்க இயலாத விஷயம் போல தோன்றினாலும், கொஞ்சம் நிதானமாக கவனித்தால் ,அப்படி ஒன்றும் புதிதாக விளைந்த பிரச்சினையாக தோன்றவில்லை .தொலைக்காட்சியில் கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகள், சீரியல்களில் மூழ்கி நேரம் கடப்பதை போல இப்போது மக்கள் மொபைலில் மூழ்கி இருப்பதும் ஒரு தவிர்க்க முடியாத பழக்கம் போல் தோன்றுகிறது .
பிரச்னை எப்போது தீவிரமாகிறது என்றால் காதிலே ப்ளூ டூத், ஸ்பீக்கர் மாட்டிகொண்டபடி தெருவில் நடப்பது ,தெருவை கடக்க முனைவது வண்டிகள் ஒட்டிக்கொண்டு தெருவில் செல்லும் போதுதான். ஒரு முறை அடிபட்டால் திருந்த வாய்ப்பு வரலாம் !
மற்றபடி ,தலை குனிந்து மொபைலில் ஆழ்ந்து கிடக்கும் இன்றைய இளம் தலைமுறை,ஒரு பரிதாபப்பட வேண்டிய ஜந்து.
சமூகத்தில் இருந்து விலகிய நிலையில் இருப்பதாக உணர்ந்து தன்னிச்சையாக இருந்துவரும ஒரு மனித ஜந்து ! அவ்வளவே!
வேறு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு / வேலைகள் இல்லையா என்ன? .அதற்கு ஏற்ற சூழ்நிலைகள் உண்டாக்க இயலும் இல்லையா? நல்ல நண்பர்கள் ,பேச, விவாதிக்க என்று இருந்தாலும, புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தாலும் ..மொபைலில் மூழ்கி இருப்பவர்கள் குறையலாம்.
என் வயது எண்பது , இது பற்றி பேசுகையில் இந்தியாவில் இருக்கும் என் நண்பர் கூறுவது :
"இன்னும் சில வருடங்களில் இந்த மொபைல் சார்ந்து இருப்பது சலித்து போனால், இந்த பிரச்சினைக்கு வழி பிறக்கலாம் ! "
தயாநிதி ,சென்னை
"உங்கள் தலைப்பில் பிழை இருக்கிறது" என்று நக்கீரனைப் போல ஆரம்பித்தார் . ஜெயஸ்ரீ போலவே அவரும் ,'இளைய தலைமுறை மட்டுமா மொபைலில் ஆழ்ந்து கிடக்கிறது? .குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை எல்லோரும் மொபைலுக்கு அடிமையாக இருக்கிறார்கள் ' என்கிறார் .
தொடர்ந்து ."என்ன செய்ய முடியும்? புத்திதான் சொல்ல முடியும்" என்றார் .
“பெரியவர்கள் தொடர்ந்து போன் பார்த்துக் கொண்டே இருந்தால் வீட்டில் உள்ள இளைஞர்கள் அவர்களிடம் பேச வேண்டும்."அப்பா , வெளியில் கொஞ்சம் நடந்து போய் வாங்க.உடற்பயிற்சி செய்யுங்க" என்று பொறுமையாக சொல்ல வேண்டும். பிள்ளைகளிடம் பெரியவர்களும் எடுத்துக் கூற வேண்டும். "போனை வைத்து விட்டு , "வீட்டில் உதவி செய்" என்றோ , "ஜிம்க்கு போ" என்றோ அவர்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டும் . குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்ப வேண்டும் . வீட்டில் WIFI வசதி, மொபைல் போனில் தரப்படும் அன்லிமிடெட் டேட்டா எல்லாமே , மொபைலுக்கு அடிமையாகும் நிலையை ஏற்படுத்தி விட்டது . நம்மை நாமே மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும் .ரேடியோ கேட்டல் போன்ற பழைய பொழுது போக்குகளுக்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் .
அல்லி ராஜ் ,கோயம்புத்தூர் கவிதையாகவே பாடி (எழுதி) விட்டார்.
பிரும்மாண்டமான புதுமை அனுபவம்
ஸ்மார்ட் போன் மொபைல்
பயன்படுத்துவது
புதிய கண்டுபிடிப்புகளின் பயன்
கிடைத்த
போதெல்லாம்
மனிதகுலம் இப்படித்தான் நடந்துள்ளது .
குறிப்பாக தேடலில் கூடுதல் ஆர்வமுள்ள இளைய தலைமுறை
கொஞ்சம் அதிகமாகவே மொபைலில் ஆழ்ந்து
கிடப்பது ஆச்சர்யமில்லை
' என்ன, போதும் ,போதும்
அடுத்த வேலையைப்
பார் என்று எக்ஸ்ட்ராவாக கவனம் செலுத்தினால்
போதும்
அதுதான் இன்றைய உடனடி மெகா தேவை "
கருத்து கூறிய நம் வாசகர்களுக்கு நன்றி
மக்கள் அரங்கம் பகுதிக்கு வாசகர்களின் வரவேற்பு பெருகி வருகிறது. தொடர்ந்து இங்கு நடை பெறும் விவாதங்களில் உங்கள் பங்களிப்பை தாருங்கள் .தயங்காமல் உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள் .
இனி அடுத்த வார விவாதப் பொருள் :
"புத்தாண்டு போன்ற கொண்டாட்ட இரவுகளில் அரசு மருத்துவமனை அவசரப்பிரிவில் விபத்தில் அடிபட்டு சிகிச்சைக்காக வருபவர் எண்ணிக்கை பெருகி வருகிறது .இதை தடுக்க என்ன செய்ய வேண்டும் ?"
வாருங்கள், தொடர்ந்து விவாதிப்போம் .
உங்கள் கருத்துக்களை எங்களுக்கு புகைப்படத்துடன் மெயிலில் அனுப்புங்கள்..அனுப்ப வேண்டிய மெயில் ஐடி Vikatakavi.weekly@gmail.com
அடுத்த இதழில் வெளியிடுகிறோம்.
Leave a comment
Upload