தொடர்கள்
ஆன்மீகம்
​​​​“மதுராந்தகத்தின் பேரழகன் அயோத்தி ராமனே தான்” - எஸ். ஸ்ரீதுரை​

20240019190049715.jpeg

எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் பரம், வியூஹம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி ஆகிய ஐந்து வடிவங்களில் தன்னடியார்களுக்கு அருள்கின்றான்.

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள திருமாமணிமண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவிநீளாதேவிமார்களுடன் நித்யர்களும், முக்தர்களும் புடைசூழ அந்தமில் பேரின்பத்தைவழங்கியும் அநுபவித்தும் திளைத்துக் கொண்டிருக்கின்ற வடிவமே “பரம்” என்பதாகும்.

திருப்பாற்கடலில் அலைகள் தரும் தாலாட்டை அநுபவித்தபடி அநந்தசயனத்தில்சேவைதரும் திருக்காட்சியே “வியூஹ” வடிவம்.

மேலுலலகிலிருந்து இப்பூவுலகிற்கு இறங்கி வந்து மக்களுடனும், மாக்களுடனும்நட்புடனும் பேரன்புடனும் கலந்து பரிமாறுகின்ற ராமகிருஷ்ணாதி அவதாரங்களைப்பெரியோர்கள் “விபவம்“ என்கின்றனர்.

“உடல் மிசை உயிரெனக் கரந்து (மறைந்து)” எங்கும் பரந்துள்ள தத்துவமே ஐந்தாவதாகவரும் “அந்தர்யாமி” என்பது.

இவை அனைத்தையும் விட நம் அனைவருக்கும் மிகவும் நெருக்கமாய் அமைந்து, நம்முடைய அறியாமையையும், எளிய ஆராதனைகளையும் பெருங்கருணையுடன்ஏற்றுக்கொண்டு நம் மனங்களைப் பண்படுத்தி வைகுந்த உலகிற்கு ஆற்றுப்படுத்தவல்லதே நான்காவதாக வருகின்ற “அர்ச்சை” எனப்படுகின்ற அர்ச்சாவதாரமாகும்.

கண்ணால் காணமுடியாத பரம்பொருளுக்கும் கருத்தைக் கவருகின்ற அழகியதொரு வடிவத்தைக் கொடுத்து, அத்திருவடிவத்தினையே பற்றுக்கோடாகக் கொண்டுநாமனைவரும் முக்தி எனப்படும் பேரின்ப வாழ்வை நோக்கிப் பயணப்படவேண்டும்என்ற வாத்ஸல்யத்தின் காரணமாகவே எம்பெருமான் திருக்கோயில்களில்வழிபடப்படுகின்ற சிலைகளாகவும், விக்கிரகங்களாகவும் காட்சி தந்து வருகின்றான்.

அத்தகைய அர்ச்சாவதாரம் என்பது நம்முடைய கண்களில் நிறைந்து கருத்தினைக்கவர்வதாக இருந்தால்தான் நம்மால் அந்த மூர்த்திகளை தியானிக்கவும், உபாசனைசெய்யவும் முடியும் என்கின்ற காரணத்தினாலேயே சகலவிதமான சாமுத்திரிகாலட்சணங்களின் உறைவிடமாக நாம் தரிசிக்கும் அர்ச்சாவதாரமூர்த்திகள் அமைந்துள்ளன.

“பல்லாண்டு பல்லாண்டு” என்று ஸ்ரீபெரியாழ்வாரும், “கிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி, கேசனே!” என்று ஸ்ரீதிருமழிசையாழ்வாரும் பெருமாளுக்குக் கண்ணெச்சில் படக்கூடாது என்றும் மங்களம் உண்டாகவேண்டுமென்றும் பேரன்புடன்பாடியிருக்கின்றார்கள் என்றால் அத்தகைய அர்சாவதார மூர்த்திகளின் பேரழகை நம்மால்எவ்வாறு வர்ணனை செய்ய இயலும்?

“தோள் கண்டார், தோளே கண்டார்” என்று கம்பநாட்டாழ்வாரும், “கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும்” என்று திருமங்கையாழ்வாரும் பாடுவதற்கிணங்க அமைந்துள்ளஅர்ச்சாவதார மூர்த்திகளில் மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்தராமனின் திருமேனியழகு என்றும்முதலிடம் பிடிக்கக்கூடியது.

​​​​@@@@ @@@@ @@@@ @@@@

ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட நூற்றெட்டு திவ்யதேசங்களில்ஸ்ரீவைகுண்டம், திருப்பாற்கடல் தவிர்த்த மற்ற நூற்றியாறு திவ்யதேசங்களும் நமதுபாரததேசத்திலும், அதன் வடக்கில் அமைந்துள்ள நேபாளத்திலும் இருக்கின்றன.

திவ்யதேசங்களாக இல்லாவிட்டாலும், அத்திருத்தலங்களுக்குச் சற்றும் குறைவில்லாதசாந்நித்தியமும், மகிமையும் பொருந்திய விஷ்ணுஸ்தலங்களை அபிமான ஸ்தலங்கள்என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் அழைப்பது வழக்கம்.

மதுராந்தகம், ஸ்ரீபெரும்பூதூர், மன்னார்குடி, மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரம்உள்ளிட்ட திருத்தலங்கள் இப்படிப்பட்ட அபிமான ஸ்தலங்களின் பட்டியலில்இருப்பவையாகும்.

ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்படாவிட்டாலும், அவர்களுக்குப் பின்னர்அவதரித்த ஆசார்ய புருஷர்கள் அவதரித்தவையாகவும், அவர்களால் மிகவும்போற்றப்பட்டதாகவும் உள்ள அபிமானஸ்தலங்களில் ஒன்றாகிய மதுராந்தகம்விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை இந்த உலகுக்கு அளித்தருளிய ஸ்ரீராமாநுஜரின்வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கின்றது.

​​​“லக்ஷ்மீநாத ஸ்மாரம்பாம் நாத யாமுந மத்யமாம்|

​​​ அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்||”

என்கிற ஸ்லோகத்தில் உள்ள படி பகவான ஸ்ரீலக்ஷ்மீநாராயணனிடமே ஸ்ரீவைஷ்ணவகுருபரம்பரையானது தொடங்குகின்றது.

அவ்வரிசையில் ஆதிகுருவாகிய பகவானை மஹாசமுத்திரமாக உருவகிக்கும்ஸ்ரீவைஷ்ணவம், அதிலிருக்கும் அநுக்கிரகம் என்னும் மழை நீரை வாரி எடுத்துவந்துபொழிகின்ற மேகமாக நம்மாழ்வாரையும், அம்மழை வந்து விழுகின்ற மலையாகநாதமுனிகளையும், அம்மலையிலிருந்து உற்பத்தியாகிய இரண்டு அருவிகளாகஉய்யக்கொண்டார், மணக்கால்நம்பி ஆகிய இருவரையும் உருவகிக்கின்றது. மேலும், அந்த அருவிகளிலிருந்து பிறக்கும் ஆறாக (நதியாக) ஸ்ரீஆளவந்தாரை உருவகிக்கும்ஸ்ரீவைஷ்ணவம் அந்த ஆறு வந்து கலக்கின்ற ஏரியாக ஸ்ரீராமாநுரை உருவகிக்கின்றது.

இவ்வாறு பகவானின் கருணையினால் நிரம்பிய ஏரியாகிய ஸ்ரீராமாநுஜருக்குத்தன்னுடைய திருக்கோயிலிலுள்ள மகிழ்மரத்தின் நிழலிலேயே மிக உயர்ந்ததாகியபஞ்சசம்ஸ்காரம் என்னும் வைணவதீக்ஷையைப் பெரியநம்பிகளின் மூலம் கிடைக்கச்செய்து ரக்ஷித்த காரணத்தாலேயே இவ்வூரின் பெருமாளை ஸ்ரீஏரிகாத்தராமன் என்றுஅழைத்துக் கொண்டாடுகின்றனர் ஸ்ரீவைஷ்ணவர்கள்.

சுமார் இருநூறு வருடங்களுக்கு முந்தைய காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் சார்பில்இப்பிரதேசத்தின் கலெக்டராக (ஆட்சியராக) இருந்த கர்னல் லயோனல் பிளேஸ் துரைஎன்பவருக்கு இவ்வூரின் ஏரிக்கரையில் கையில் வில்லேந்தியபடி ஸ்ரீராமரும்லக்ஷ்மணரும் காட்சி அளித்ததுடன். அவ்வேரியின் கரை பெருமழையால் உடையாமல்காத்ததனாலும் இவருக்கு ஸ்ரீஏரிகாத்தபெருமாள் என்ற திருப்பெயர் மிகவும்பொருத்தமானதாகிவிட்டது.

மதுராந்தகம் பேருந்து நிலையத்திற்கு அருகிலும், ரயில் நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ள இந்தத் திருக்கோயில் மதுராந்தகச் சோழனின் காலத்தில்கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்தின் கம்பீரத்தை வியந்தபடியேதிருக்கோயிலினுள் நுழைந்தால் துவஜஸ்தம்பம், பலிபீடம் ஆகியவற்றை தரிசிக்கலாம்.

துவஜஸ்தம்பத்தின் தென்பகுதியில் ஸ்தலவிருக்ஷமாகிய மகிழமரம். அதன் அருகில்வடக்கு நோக்கிய ஸ்ரீசுதர்சனழ்வார் திச்சந்நிதி. அதையடுத்து ஸ்ரீவேதாந்ததேசிகர்திருச்சந்நிதி. அதற்கடுத்து ஆழ்வார்கள் சந்நிதி. திருக்கோயில் தென்மேற்கில்ஸ்ரீஜனகவல்லித்தாயார் திருச்சந்நிதி அமைந்துள்ளது. இச்சந்நிதியில் உள்ள, “யிந்த தற்மம்கும்பினி சாகிர கலகட்டர் கர்னல் லயோனல் பிளேசு துறை அவர்களுது” என்றகல்வெட்டு கர்னல் லயோனல் பிளேஸ் துரை ஸ்ரீஜனகவல்லித்தாயார் சந்நிதித்திருப்பணிக்கு உதவிய தகவலைக் கூறுகின்றது.

தாயார் சந்நிதிக்கு வலப்புறம் உள்ள வசந்தமண்டபத்தைப் பார்வையிட்டபடியேபிராகாரத்தை வலம் வந்தால் திருக்கோயில்ன் வடமேற்கு மூலையில் பஞ்ச்சம்ஸ்காரமண்டபத்தையும், அதன் அருகில் உள்ள மகிழமரத்தையும் பார்க்கலாம். இதன்அடியில்தான் ஸ்ரீராமானுஜருக்குப் பெரியநம்பிகள் பஞ்சசம்ஸ்கார தீக்ஷையைஅருளினார்.

பஞ்சசம்ஸ்காரம் மண்டபத்தையும், மகிழமரத்தையும் பிரதட்சிணமாக வந்தால் கிழக்குப்பார்த்த ஸ்ரீஆண்டாள் சந்நிதியை தரிசிக்கலாம். ஸ்ரீஆண்டாளின் இரண்டு புறங்களிலும்ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீபெரியாழ்வார் ஆகியவர்களுடைய சந்நிதிகள் உள்ளன.

ஸ்ரீஆண்டாள் சந்நிதியின் முன்புள்ள அழகிய மண்டபத்தில்தான் ஸ்ரீராமநவமிஉற்சவநாட்களில் ஸ்ரீஏரிகாத்தராமருக்கு நித்திய உபசாரங்களும் அலங்காரங்களும் வெகுவிமரிசையாக நடைபெறுகின்றன.

ஸ்ரீஆண்டாள் சந்நிதிதிக்கு எதிரில் சற்று தூரத்தில் வடக்கு மதில் சுவற்றினை ஒட்டியபடிஸ்ரீவிஷ்வக்ஸேனர் சந்நிதி, ஸ்ரீராமானுஜர் சந்நிதி, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் சந்நிதி, புதியகண்ணாடி மண்டபம் ஆகியவை தெற்கு நோக்கியபடி வரிசையாக அமைந்துள்ளன.

இங்குள்ள ஸ்ரீராமாநுஜர் சந்நிதியில் கைகூப்பிய நிலையில் ஸ்ரீராமாநுஜரும், உபதேசமுத்திரையுடன் ஸ்ரீபெரியநம்பிகளும் சேவை ஸாதிக்கின்றனர். ஸ்ரீராமாநுஜர் சந்நியாசம்ஏற்பதற்கு முன்னர் கிருகஸ்தராக இருந்த பொழுது இத்திருத்தலத்தில் அவருக்குப்பஞ்சசம்ஸ்கார தீக்ஷை கிடைத்த காரணத்தால் இச்சந்நிதியில் அவர் வெள்லை வெஷ்டிஉத்தரீயத்துடன் சேவை ஸாதிக்கின்றார்.

ஸ்ரீராமாநுஜருக்குப் பஞ்சசம்ஸ்காரம் அருளப்பட்ட திருநாள் வருடம் தோறும் ஆவணிமாதம் சுக்லபக்ஷ பஞ்சமியில் இத்திருத்தலத்தில் வெகு விமரிசையாகக்கொண்டாடப்படுகின்றது. இச்சந்தியில் உள்ள சிறிய அளவிலான ஊஞ்சலாடும்ஸ்ரீகாளிங்கநர்த்தன கிருஷ்ணர் ஸ்ரீபெரியநம்பிகளால் ஆராதிக்கப்பட்டவர் என்று, அப்பெருமாளுடன் உள்ள சங்கு சக்க்ர முத்திரைகளைப் பயன்படுத்தியேஸ்ரீபெரியநம்பிகளால் ஸ்ரீராமாநுஜருக்குப் பஞ்சசம்ஸ்கார தீக்ஷை அருளப்பட்டதுஎன்பதும் இவ்வூர்ப் பெரியவர்களின் நம்பிக்கையாகும். பக்கத்துச் சந்நிதியில்எழுந்தருளியுள்ள ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மரையும் தரிசித்துவிட்டுப் பிரதானமாக உள்ளஏரிகாத்தராமர் சந்நிதிக்கு இப்பொழுது செல்லலாம்.

துவஜஸ்தம்பத்தை தாண்டி மஹாமண்டபத்தினுள் நுழைந்தால் மேற்குப் பார்த்த சிறியசந்நிதியில் வைனதேயனாகிய ஸ்ரீகருடபகவான் காட்சி அருளுகின்றார்.

பரந்து விசாலமாக விளங்குகின்ற மஹாமண்டபத்தைக் கடந்து அர்த்தமண்டபத்தையும்தாண்டினால் மூலஸ்தானமாகிய ஸ்ரீஏரிகாத்தராமர் சந்நிதியை அடையலாம். ரிஷ்யசிருங்கருடைய தகப்பனாராகிய விபண்டகர் என்ற தவமுனிவருக்கு வாக்களித்த படிஸ்ரீராமரும் சீதாதேவியும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி தம்பதி ஸமேதராகக் காட்சிஅளித்ததாக இவ்வூர்த் தலபுராணம் கூறுகின்றது. அதனை மெய்ப்பிக்கும் விதமாகஇவ்வூரில் மூலவ மூர்த்தியாகிய ஸ்ரீராமபிரானும் ஸ்ரீசீதாதேவி இருவரும் கைகளைக்கோர்த்தபடி சேவை ஸாதிக்கின்றனர்.

நடையில் நின்றுயர் நாயகனாகிய ஸ்ரீராமபிரான், ஸ்ரீசீதாபிராட்டியார், ஸ்ரீலக்ஷ்மணர்ஆகிய உற்சவமூர்த்திகளின் திருமேனியழகும் கம்பீரமும் வார்த்தைகளில் வடிக்கமுடியாதவை. நாம் முன்பே கண்டது போல, சகல சாமுத்திரிகாலட்சணங்களுடன் கூடியஅம்மூர்த்திகளை ஒருமுறை தரிசித்தவர்கள், “இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம்ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்” என்று ஸ்ரீதொண்டரடிப்பொடியாழ்வார்கூறியதைப் போன்று இப்பெருமாளின் தரிசனத்திலேயே மனமொன்றி மூழ்கிவிடுவார்கள்என்பது சர்வநிச்சயம்.

ஸ்ரீராமர், சீதாதேவி, லக்ஷ்மணருக்கு முன்னதாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதேவி பூதேவிஸமேத ஸ்ரீகருணாகரஸ்வாமிதான் ஆதியிலிருந்தே இத்திருத்தலத்தில்எழுந்தருளியிருந்தார் என்றும், இங்குள்ள குளக்கரையில் தங்கித் தவம்செய்துகொண்டிருந்த ஸ்ரீஆஞ்சநேயஸ்வாமிக்கு இப்பெருமாளே ஸ்ரீராமபிரானாகக் காட்சி அளித்ததாகவும் ஸ்தலபுராணம் கூறுகின்றது. ஸ்ரீகருணாகரனுக்குரிய தேவியாகியஸ்ரீஜனகவல்லித்தாயாருடைய சந்நிதியைத்தான் கர்னல் லயோனல் பிளேஸ் துரை சிலநூற்றாண்டுகள் முன்பு கட்டிக்கொடுத்திருகிறார்.

கருணாகரஸ்வாமியை அடுத்து சக்கரத்தாழ்வார், சயனமூர்த்தியாகிய ஸ்ரீஸம்பத்குமாரர், களிங்கநர்த்தன கிருஷ்ணர் ஆகியோர் அருள்பாலிக்க, கருவறையின் ஒரு மூலையில்எழுந்தருளியுள்ள விபண்டகர் எம்பெருமானின் பேரழகை இடயறாமல் பருகிக்கொண்டிருக்கின்றார்.

“வகுளாரண்ய க்ஷேத்திரம். விபண்டக மஹரிஷிக்குப் பிரத்யக்ஷம்….” என்று கூறியபடியேஅர்ச்சகஸ்வாமிகள் நெய் தீபத்தால் ஆரத்தி காட்டும்பொழுது நமது உடம்பில் ஏற்படும்சிலிர்ப்பு அடங்குவதற்கு வெகுநேரமாகும்.

​​​​@@@@ @@@@ @@@@ @@@@

நீண்டகாலப் போராட்டங்களுக்குப் பின்பு அயோத்தியிஉள்ள ஸ்ரீராமஜன்மபூமியில்ஸ்ரீராமபிரானின் திருவுருவம் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கின்ற இந்தப்பெருமிதத்திற்குரிய தருணத்தில் எழிலே உருவாக விளங்கும் ஸ்ரீஏரிகாத்தராமனைப்பற்றிய சுவாரஸ்யமான செவிவழிக்கதை ஒன்றை விகடகவி வாசகர்கள் அனைவருடனும்பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

சுமார் இரண்டு தலைமுறைக்கு முன்னதாகப் புழங்கிவந்த இச்செவிவழிக்கதைதற்காலத்தில் மறந்து போயிருக்கக் கூடும்.

விஷயம் இதுதான் –

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையில் மதுராந்தகம் பெருமாளின் திருக்கோயிலின்மூலஸ்தானத்தில் ஸ்ரீராமர், சீதாதேவி, லக்ஷ்மணர் மூவரும் மூலவமூர்த்திகளாகச் சேவைசாதிக்க, ஸ்ரீஆஞ்சநேயருக்கு ராமனாகக் காட்சிதந்த கருணாகரப் பெருமாள் மட்டுமேஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய உற்சவராக எழுந்தருளியிருந்தாராம்.

பின்னர், வடக்கிலிருந்த அயோத்தி உள்ளிட்ட பிரதேசங்களை அரசாண்டு வந்தபாதுஷாவின் காலத்தில் அங்கிருந்த உற்சவமூர்த்திகளுக்குப் பாதுகாப்பு இல்லையென்றுபயந்த அயோத்திவாசிகள் சிலர் ஸ்ரீராமர், சீதாதேவி, லக்ஷ்மணர் ஆகிய மூன்றுஉற்சவமூர்த்திகளையும் ஒரு பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு தென்னிந்தியாவை நோக்கிப் பயணப்பட்டார்களாம். மதுராந்தகத்தைச் சேர்ந்த பக்தர்கள்அனைவரும் அவர்களை மேற்கொண்டு செல்ல அனுமதிக்காததுடன், அவர்கள்எழுந்தருளப்பண்ணிக்கொண்டு விக்கிரங்கங்களையே இங்குள்ள திருக்கோயில்மூலஸ்தானத்தில் வைத்துப் பாதுகாத்துப் பூஜிப்பதாகக் கூறி அதற்குச் சம்மதத்தையும்பெற்றனராம். அவ்வாறு சாட்சாத் அயோத்தியிலிருந்தே வந்து சேர்ந்தவர்கள்தான் இங்குஅருள்பாலிக்கும் ஸ்ரீராமர், சீதாதேவி, லக்ஷ்மணரின் உற்சவமூர்த்திகள்….என்றுபோகிறது அந்தச் செவிவழிக்கதை.

நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதவீதம் இது ஒரு கற்பனையாகவேதான் இருக்கும்என்று தோன்றினாலும், இந்த ஏரிகாத்த ராமனை அந்த அயோத்திநகரத் திருக்கோயிலின்உற்சவமூர்த்தியாகக் கற்பனை செய்வதே மிகவும் அலாதியான இன்பமளிப்பதாகஇருக்கிறதல்லவா?

அயோத்தியில் அருள்புரிந்தால் என்ன….? எங்கள் ஆன்மாவில் கலந்த மதுராந்தகத்தில்எழுந்தருளியிருந்தால் என்ன….?

ராமன் எத்தனை ராமனடி….என்று பாடினாலும் அத்தனை ராமனும் நடையில் நின்றுயர்நாயகனாகவும், நளினமே உருவெடுத்து வந்தவனாகாவும் அமைந்து நம்மை நோக்கிப்புன்சிரிப்புச் செய்வதை யாரால் மாற்ற முடியும்….?

“கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ….?” என்ற ஸ்வாமி நம்மாழ்வாரின்திருவாக்கினைக் கருத்தில் கொண்டு ஸ்ரீராமபிரானின் பெருமைகளைப் பற்றிமேன்மேலும் அறிந்துகொள்ள முயற்சி செய்வோம்.

ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி இன்னருள் சுரக்கும் மதுராந்தத் திருத்தலட்தின்பேரழகனாகிய ஸ்ரீசீதா லக்ஷ்மண ஹநுமத் ஸமதே ஸ்ரீராமபிரானின் திருப்பாதகமலங்களையே என்றும் சரண் புகுந்து வீடுபேறு பெறுவோம்!

​​சக்கரவர்த்தித் திருமகனாகிய ஸ்ரீஸீதாரமனின் திருவடிகளே சரணம் !

20240020094847187.png