தொடர்கள்
கவிதை
இராமன்-கவிஞர் இரா. சண்முகம் பரணம்பேடு.

20240017215326812.jpeg

அயோத்தியில் பிறந்த
குழந்தை இராமன்
ஆதிக்க வெறிகளால்
சுயத்தை இழந்து
ஒண்டியது ஓங்க
எஞ்சிய இடத்தில்
கண்டதே கோலமாய்
காட்சிப் பொருளானான்.

இராமனின் நீதியை
ஞாலத்துக் குணர்த்த
கரசேவை உறவுகள்
இருந்தை அகற்றி
விரும்பிய வகையினில்
படைக்க முயன்றிட
இராமஜென்ம பூமிக்கு
தடைக் கல்லானது
பாரத நடுநிலை
சமதர்ம பூமி.

காலங்கள் கடந்தாலும்
நீதியின் உச்சத்தில்
இராமன் பூமியும்மீண்டது
கோலாகல விழாவில்
நல்லதோர் நாளிலே
ஆலயப் பிரவேசம்
இனிதே நிறைவுற
மூலக் கடவுளாய்
அயோத்தி நகரினில்
இராமனும் அருள்வான்.

அல்லாஏசு இராமனுக்கிடையே
இல்லாத பிணக்கினை
கலந் துருவாக்கி
வல்லமைப் பிணியினைப்
பரப்பிட நினைத்த
அதர்மம் அழிந்து
சமதர்மம் தழைத்திட
எம்மதமும் கொண்டாடும்
இராமஜென்ம பூமிக்கு வாரீர்.

வருக வருக!
இறைவன் இராமனின் பேரருள் பெறுக!

20240020095037970.png