தொடர்கள்
ஆன்மீகம்
அயோத்தி மண்ணிலிருந்து....... சூர்யபிரபா

20240020092454785.jpeg

காசி விஸ்வநாதர் அருளாலும் ஸ்ரீராமர் அனுக்கிரகத்தாலும் பாரதப் பிரதமர் கடந்த 2022ஆம் ஆண்டில் சங்கமத்தில்அயோத்தியின் முதற்கட்ட பணிகளைப் பார்வையிட வாய்ப்பு கிடைத்ததைப் போலவே 2023ஆம் ஆண்டு காசி தமிழ் சங்கமம்2.0விலும் ஒரு சிறப்பான வாய்ப்பு அமையப் பெற்றது. அதுவும் கும்பாபிஷேக தினம் 22-01-2024 அன்று அறிவிக்கப்பட்ட திறப்புவிழாவிற்கு சரியாக 30 நாட்கள் முன்பாக 22-12-2023 அன்று சங்கமத்தின் பிரதிநிதியாக யமுனை குழுவில் ஒருவராக இறுதிகட்ட ஆலயப் பணிகளையும், நாங்கள் பார்வையிடும் பெரும்பேறு பெற்றோம். மிகத் துரிதமாக மின்னல் வேகத்தில் பல லட்சம் பணியாளர்களோடு மூன்று கால பணிநேரங்கள், மூன்று மாபெரும் நிறுவனங்களின் மேற்பார்வையில் நடைபெற்று முடிந்துள்ளன.பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆலய கட்டுமானத்திற்காக கிரானைட், மார்பிள் கற்களும், பஹல்பூர் இளஞ்சிவப்பு நிற கற்களும், ஏரலில் இருந்து வெண்கல மணியும் கும்பகோணத்தில் இருந்து ஐம்பொன் மூர்த்திகளையும் கொண்டு வந்து தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாக ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

20240020092603292.jpeg

இராம் லல்லா என்பது குழந்தைப் பருவத்தில் இராமர், இலட்சுமணர், பரதர், சத்ருகன் என சகோதரர்கள் நால்வரும் மூர்த்திகளாக தரிசனம் தருகிறார்கள். இந்த இராம் லல்லா சிறப்பு தரிசனத்திற்காகவும் அயோத்யாவின் ஆலயப் பணிகளைப் பார்வையிடவும் சங்கமத்தின் பிரதிநிதிகளுக்காக மாவட்ட உப ஆட்சியர்கள் திரு.சந்தீப் ஸ்ரீவத்சவா மற்றும் திருமதி.அனாமிகா ஸ்ரீவத்சவா ஆகியோர் தலைமையில் CRPF பாதுகாப்புடன் தேசத்தின் உயர்மட்ட பாதுகாப்பு வளையத்தில் இருக்கக்கூடிய ஆலயப் பகுதிக்குள் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். தரிசனம் முடிந்து வெளியே வரும் வழியில் அகழ்வாராய்ச்சியின் போது எடுக்கப்பட்ட படிமங்களையும் பக்தர்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தியுள்ளனர்.

20240020092629268.jpeg

அயோத்தியில் உள்ள அனுமான் மந்திர் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆக்கிரமிப்பில் இருந்த ஆலயமும் மீண்டும் மத்திய அரசால் நிர்மானியம் செய்யப்பட்டு இன்று பக்தர்களின் வழிபாட்டு பூஜைகள் நிகழ்ந்து வருகின்றன.அடுத்ததாக சரயு நதி, நவ கன்னியர்களில் ஒருவரான புண்ணிய நதி., இராமபிரான் முக்தி அடைந்த தீர்த்தஸ்தலம். இந்த சரயு கரையில் அமையப்பெற்ற பிரமாண்ட வீணை இங்கு சிறப்பம்சம். கடந்த தீபாவளித் திருநாள் சமயத்தில் இங்கு 22,23,676 விளக்குகள் ஏற்றப்பட்டு உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

20240020092714585.jpeg

கடந்த முறை காசி தமிழ் சங்கமத்தின் வரவேற்பு நிகழ்ச்சிகளும், உணவும் கட்டப்பட்டு வந்த புதிய அயோத்தியா இரயில் நிலையத்திலும் 2ஆம் சங்கமமான இந்த ஆண்டு புதிய பேருந்து நிலையத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு வருட காலத்திற்குள் எதிர்பாராத அபரிமிதமான வளர்ச்சியையும் மாற்றங்களையும் அயோத்தி நகரம் முழுவதும் காணலாம். இந்த புண்ணிய பூமியில் கால் பதித்த பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்து, மத்திய அரசுக்கும் உத்திர பிரதேச அரசுக்கும் மனமார நன்றி கூறி மீண்டும் வாரணாசி நோக்கி பயணித்தோம்.

20240020093144827.png