மதுரை மாவட்டம், அழகர்கோவிலுக்கு அருகே உள்ள கள்ளழகர் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியை சாமி தரிசனம் செய்து, பல்வேறு வேண்டுதல்கள் குறித்து காகிதத்தில் எழுதி, அங்குள்ள மரத்தில் கட்டிவிட்டு செல்கின்றனர். பின்னர் அந்த வேண்டுதல்கள் நிறைவேறியதும், பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு சம்பந்தப்பட்ட பக்தர்கள் பல்வேறு அபிஷேகங்கள் செய்வித்து, எலுமிச்சை பழ மாலைகளை அணிவிக்கின்றனர். பின்னர் தங்களின் வசதிக்கேற்றபடி காய்கறிகள், பழங்கள் நெல் மற்றும் பல்வேறு சிறுதானியங்கள், பணமுடிப்புகள் மற்றும் மாடு கன்றுகளை காணிக்கையாக வழங்குவது வழக்கம்.
இந்நிலையில், மதுரையை சேர்ந்த ஒரு மருத்துவர் தம்பதி, தங்களின் வேண்டுதல் நிறைவேறியதை தொடர்ந்து, கடந்த 13-ம் தேதியன்று அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு சுமார் 18 அடி உயர அரிவாளை காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். இதை பார்த்ததும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஆச்சரியத்தில் வாய்பிளந்தனர். மதுரை அருகே இந்த அரிவாள் தயாரிப்பு பணி குறித்து கடந்த மாதம் யூ-டியூப் வலைதளங்களில் வீடியோ படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது எனக் குறிப்பிடத்தக்கது.
Leave a comment
Upload