சென்ற மாதம் விகடகவி டிஜிட்டல் இதழில் கொலு போட்டி நடத்தப்பட்டு , வெற்றி பெற்றவர்களை அறிவித்தோம் .சம மதிப்பெண் பெற்ற நான்கு வாசகியார் முதல் பரிசுக்கு உரியவராக அறிவிக்கப்பட்டார்கள்.
வெற்றி பெற்றவர்களில் அயல்நாட்டு வாசகியும் ஒருவர் . அவரைத் தவிர்த்து மற்ற மூன்று வாசகிகளுக்கும் விகடகவி சார்பில் அமேசான் தளத்தின் வழியாக "சேலை ' பரிசாக அனுப்பி வைக்கப்பட்டது . சேலை கொடுப்பதும் ,பெறுவதும் பெண்களுக்கு மிகவும் பிடித்தமானது அல்லவா ?
கடை கடையாக ஏறி இறங்கி, பார்த்து பார்த்து தேர்வு செய்தாலே , நமக்கு சேலை விஷயத்தில் முழு திருப்தி இருக்காது . இப்போது இணைய வணிக தளத்தில் பார்த்து அனுப்பும் சேலை சரியாக போய் சேருமா,நன்றாக இருக்குமா என்று பதட்டமாக இருந்தது.
நீங்கள் ஊகித்தது சரியே , நாம் தேர்வு செய்தது ஒன்று , வாசகியருக்கு சேர்ந்த சேலை வேறொன்று. அதுவும், மூவருக்கும் மூன்று வேறு நிறங்களில். ஆனாலும் அதை மிக மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர் .
இந்த கொலு போட்டியில் கலந்துக் கொண்டது பற்றியும், விகடகவி இதழைப் பற்றியும் தம் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்துக் கொண்டார்கள் .
சாய் சுதா சென்னை :
நான் விகடகவி யின் பெரிய "Fan " . உங்கள் மேகசின் வழியாக நிறைய தெரிந்துக் கொள்கிறோம்,நிறைய கற்றுக் கொள்கிறோம் .இந்த கொலு போட்டியில் முதன் முதலாக கலந்துக் கொண்டேன். முதல் முறையே பரிசு வாங்கியது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. அதுவும் "சாரி" பரிசாக வந்தது மேலும் சந்தோஷமாக இருக்கு. இதே போல போட்டிகள் தொடர்ந்து நடத்துங்கள் . ஆசிரியர் குழுவுக்கு நன்றி .
அமுதா , பெங்களூரு
உங்களின் கொலு போட்டி என்னை போன்றவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக இருந்தது. நீங்கள் அனுப்பிய பரிசு நன்றாக இருந்தது. மிக்க நன்றி. அடுத்த வருடம் இன்னும் நன்றாக கொலு வைக்க வேண்டும் என்று உங்களின் போட்டி என்னை ஊக்கப்படுத்துகிறது.
ஜெயந்தி ஆர் , அம்பத்தூர்
விகடகவி ஒரு பல்சுவை இதழாக இருக்கிறது. நாட்டு நடப்பு போன்ற முக்கிய விஷயங்களை தெளிவாக தருகிறது . இந்த கொலு போட்டி என் போன்றவருக்கு பெரிய உற்சாகமாக அமைந்தது .
கொலு வைப்பதால் பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கிறது. புதிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். கொலுவில் புராண கதைகள் மட்டுமல்ல ,அறிவியல் வளர்ச்சி ,நாட்டுப்பற்று சமூக சிந்தனைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைகிறது . கார்கில் சண்டை , சுனாமி தடுப்பு , கடல் நீரை சுத்தமாக்குதல் சுதந்திர போராட்ட வீரர்கள் போன்ற தீம்களில் கொலு வைப்பதால் இதன் வழியாக நாம் நிறைய நல்ல விஷயங்களை பகிர்ந்துக்க கொள்கிறோம் .விகடகவி இதழுக்கு நன்றி .
வெற்றி பெற்ற வாசகியருக்கு மீண்டும் வாழ்த்துக்கள் ,தொடர்ந்து இதழைப் படியுங்கள். கொலு சமயத்தில் மட்டும் அல்ல, எப்போது வேண்டுமானலும் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள் .
எப்போதும் எங்களுடன் இணைந்திருங்கள்
விகடகவி ஆசிரியர் குழு
Leave a comment
Upload