இறுதி வாரம் !
பிரபல தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி தொடர்ந்து நம்முடைய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்,
கேள்வி : சின்ன நூல் கண்டா நம்மைச் சிறைபடுத்துவது என்ற சுய முன்னேற்றத் தொடர் அக்கால இளைஞரிடையே நல்ல கருத்துகளை விதைத்தது. இளைஞரிடையே
பெருகி வரும் தற்கொலைகள் கவலையைத் தருகிறது. இன்றைய இளைஞரை வழி நடத்த மீண்டும் எழுதுகோலை எடுப்பீர்களா?
சிவசங்கரி : சுயமுன்னேற்றம் பற்றி திருப்பி எழுதுவேனா என்று கேட்டிருக்கிறீங்க. எழுதினேன். இப்ப கூட போன வருஷம் ராணியில கொஞ்சம் யோசிக்கலாமே என்ற தொடர் எழுதினேன்.
நான் ஏற்கெனவே சொன்னது போல நான் தொலைக்காட்சி உரையிலே நான் நிறைய இந்த டாபிக்கெல்லாம் கவர் பண்ரேன். திருப்பி ஒரு சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது மாறி எழுதச் சொன்னா அதுக்கு நிறைய களப்பணி செய்யணும். அத்தனை பேரைப் போய் பார்க்கணும். அந்த மாதிரியெல்லாம் செய்யறதுக்கு வயசு இடம் கொடுக்கலை.
கேள்வி : அடுத்த இமாலய முயற்சி ஏதேனும்....
சிவசங்கரி : அடுத்த இமாலய முயற்சின்னா (சிரித்துக்கொண்டே…) இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு போல ஒரு இமாலய முயற்சி…16 வருஷ தவம். அது 18 மொழிகளில் உள்ள எழுத்தாளர்களை அங்கங்கு சென்று சந்தித்து அதற்கான ஹோம் வொர்க் பண்ணி ஃபீல்ட் வொர்க் பண்ணி அது ஒரு பதினாறு வருஷ தவம். அப்ப அதுக்கெல்லாம் அலயறதுக்கு தெம்பு வேணும். அது முக்கியமாக அந்த உடல் எனர்ஜி வேணும்.இப்ப எண்பத்தியொரு வயசுலஅதெல்லாம் செய்ய முடியாது.
ஆனா Knit India Thoroug Literature, என்ற இலக்கியத்தின் மூலம் இந்திய இணைப்புஇந்தியாவில் முதன்மையான புத்தகம் அல்ல. இப்ப கனடாவ்ல அதுக்கு வந்து இலக்கியத் தோட்டம்… அவர்கள் வந்து இந்திய இலக்கிய தரிசனம் அப்படீன்னு அவார்ட் குடுத்தாங்க அதுக்கு. அப்ப அவங்க சொன்னாங்க, இந்தியாவில் மட்டும் இது first of its kind இல்ல, பல மொழிகள் இருக்கிற பல நாடுகளில் கூட இப்படிப்பட்ட முயற்சி எடுக்கப்படவில்லை. So, இது உலக அளவிலே இது முதன்மையானது என்று சொல்லலாம் என்று சொன்னாங்க. அப்படிப்பட்ட இமாலய முயற்சி பண்ண முடிந்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்றேன்.
அடுத்து என் நினைவலைகள், சூரிய வம்சம். அது ஒரு மிகப்பெரிய வேலை தான். இனிமே இந்த வயசுக்கு மேல அந்த மாறி முயற்சி எல்லாம் பண்ணமுடியாது. பண்ணணும்னு ஆசையும் எனக்கில்லை.
கேள்வி : தங்களின் கண்ணோட்டத்தில் தற்போதைய பாரதம் சரியான பாதையில் செல்கிறதா?
சிவசங்கரி : பாரத மட்டுமில்ல, எல்லா உலக நாடுகளிலும் நல்லதும் நடக்கிறது. தீயதும் நடக்கிறது, அப்பவுமே நான் சொல்வேன்.
மொத மொதல்ல புது வெள்ளம் மாறி வரும் போது தண்ணீர் வரும். தண்ணீர் கிடைக்கிற சந்தோஷத்தோடு . அதுல பாத்தீங்கன்னா, மரம் மட்டை, அழுகிப்போன மிருகங்கள் அதன் உடல்கள் அழுக்கு அதெல்லாம் கூட அடிச்சிகிட்டு வரும். நம்ப அது வருதேங்குறதுக்காக தண்ணீரை எடுக்காம விடரதில்லை. அதெல்லாம் ஒதுக்கிட்டு தண்ணீர் எடுத்துக்கிறோம். அந்த மாதிரி உலக அளவிலே பல மாற்றங்கள் வந்திருக்கும் கால கட்டத்திலே முக்கியமா டெக்னொலாஜி மூலம் and வாழ்வு முறை மாறி விட்டதுல கூட்டுக் குடும்பம் nuclear (கணவன் மனைவி பிறந்த குழந்தைகள் மட்டுமுள்ள சிறு குடும்பம், அதாவது அதன் இதர சமீபத்திய உறவு முறைகள் கூட கிடையாது) குடும்பம் வந்து இந்த மாதிரியான பல சமுதாயத்திலும் நாட்டிலும் தனி மனித வாழ்க்கையில் மாற்றங்கள் வந்து விட்டன என்ற நிலையிலே நிறைய நல்லதிருக்கு, சில நெகட்டிவ் effectசும் இருக்கு. அதனால நாம் தான் அந்த நெகட்டிவ் effectsசும் வருதேன்னு பயந்துகிட்டு பாசிட்டிவ் effectsஐ கையாளாமால் விட முடியாது.
For example, செல் போன் எடுத்துக்கோங்கோ, அது மூலமா உலகமே நம்ம கைய்யிலே இருக்கு. பட்டனைத் தட்டுனா கூகுள் மூலமா எல்லாம் தெரிஞ்சிக்கலாம்.ஆனா அதே சமயத்ல தேவையற்ற ஆபாச படங்களோ ஒரு வன் முறை தூண்டும் விஷயங்கள் கூட குழந்தைகள் கூட பார்க்கக்கூடிய அளவுக்கு அதுக்கு reach இருக்கு. அதனால அது ஒரு மிகப்பெரிய …இது மாதிரி பல விஷயங்களை சொல்லிட்டு போகலாம். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் இருக்குற மாதிரி எல்ல விஷயத்துக்குமே பாசிட்டிவ் attitudesம் இருக்கு நெகட்டிவ் attitudesம் இருக்கு. So, நம்ம நாம் குழந்தைகளை பெரியவங்க தான் எது சரியான அர்த்தமுள்ள value வாழ்க்கைன்னு காட்டறது நம்ம கைல இருக்கு. பெரியவங்க தான் they should be living examples, ரோல் மாடல்ஸ், எடுத்துக்காட்டா இருக்கணும்.
பயந்துகிட்டு இருந்தோம்னா நமக்கு பின்னாடி வர்ரவங்கள்ளாம் அடிச்சி தள்ளிட்டு போயிடுவாங்க. So உலகமே மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்துக்கு ஏற்ப நல்ல பாசிட்டிவ் விஷயங்களை நிலை நிறுத்திக்கொண்டு value based ஆக அர்த்தமுள்ளதாக வாழவேண்டுமே தவிர அந்த காலம் மாறி இல்லையேன்னு புலம்பரதுல அர்த்தமே இல்ல.
முற்றும்...
Leave a comment
Upload