கடல் கடந்த தேசங்களில் சாஸ்தா
அக்காலத்தில் பூமியிலுள்ள கண்டங்கள் ஏழு.பெயர்களால் அழக்கப்பட்டனன. அவை முறையே
ஜம்பு (பாரத தேசம்)
ப்லக்ஷம் (ஸ்ரீ லங்கா முதலிய இந்து மஹா சமுத்ர நாடுகள்)
குசத்வீபம் (வடக்கு ஆப்பிரிக்க நாடுகள்)
கிரௌன்சம் (கிரேக்க தேசம் முதல் உள்ள ஐரோப்பிய நாடுகள்)
சாகம் (ஸாவகம் முதல் ஆஸ்த்ரேலியா உள்ள நாடுகள்)
ஸான்மலி (மொரீஷியஸ் தீவு முதலாக
கடலுக்குள் மறைந்த தேசங்கள்)
புஷகரத்வீபம் (இமயமலைக்கு வட பாகத்திலுள்ள சீனா ரஷ்யா முதலிய நாடுகள் ஆகும்.
குசத்வீபம் என்பது எகிப்து ஜாம்பியா போன்ற வட ஆப்பிரிக்க நாடுகள் அடங்கியது. இந்த கண்டத்தில் சாஸ்தா அதிபதியாக இருந்தார் என்பதை ஸ்ரீஹரிஹர புத்ர சஹஸ்ரனாமத்தின் 449 ஆம் நாமா,” குசாதிபாய நமஹ என்று போற்றுவதைப் பார்க்கலாம். அதாவது, குசத்வீபத்தின் அதிபதியே என்று போற்றுகிறது.
இது போலவே சால்மலீ த்வீபத்திலும் சாஸ்தா வழிபாடு இருந்ததை அதே சஹஸ்ரனாமத்தின் 84 ஆம் நாமா சால்மலீ பதயே என்ற்உ கூறுகிறது. அதாவது, சால்மலித் தீவின் அதிபதியே என்பதாகும்.
இதன் மூலம் கடல் கடந்தும் சாஸ்தா வழிபாடு இருந்திருப்பதைக் காணலாம்.
அமெரிக்காவில்சாஸ்தா என்ற பெயர் கொண்ட மலை (MOUNT SHASTHA) சாஸ்தா ஏரி (SHASHTHA LAKE) சாஸ்தா பூங்கா (SHASTHAA PARK) என்று இன்றளவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.அந்த சாஸ்தா மலையின் எரிமலை சிகரத்தில் உள்ள பாறைகளில் சாஸ்தா தாமரைப்பூவில் இருப்பது போல் உருவம் உள்ளது.
சாஸ்தா என்று அங்கு வாழ்ந்த செவ்விந்தியர்களால் கி.மு 10,000 ஆண்டுகளுக்கு முன்னமே வழிபட்ட கடவுளாகக் கருதப்படுகிறார்.
குமரிக் கண்டம் பகுதியை கடல் கொண்ட பிறகுதமிழர்கள் வட ஆப்பிரிக்கா எகிப்து பகுதிகளில் ஆட்சி அமைத்தனர் என்றும் வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள MOUNT SHASTHAA மலையடிவாரத்தில் உள்ள சுரங்கங்களில் வாழ்ந்து வந்தனர் என்றும் சில ஆராய்ச்சி நூல்களிலிருந்தும் காணக் கிடைக்கிறது.
அது போலே இத்தாலி நாட்டை ஆண்ட மன்னர்களின் பெயர்களில் பாண்டியன் (PANDION 1437 – 1397 BC) அவரது பிள்ளைகள் எற்ச்சாத்தான் (ERECHATUS), பூதன் (BHUTES), மனைவி பிரதக்ஷிணை (PRAXITHER) போன்ற பெயர்களப் பார்க்கும் போது அங்கு பாண்டியர்கள் ஆட்சியும், சாஸ்தா வழிபாடும் மிக்கு இருந்து வந்துள்ளது என்பது உறுதியாகிறது. கம்போடியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அங்க்கோர்வாட் கோவிலில் சபரிமலை அய்யப்பன் போன்ற சிற்பங்கள் கணப்படுகின்றன.
இவ்வளவு புராணமும், வரலாறும் பின்னிப் பிணைந்து விவரித்தோம் சாஸ்தாவைப் பற்றி. வேத காலக் கணக்கில் பார்ப்பின் யுகங்கள் பல கடந்தும் வந்துள்ளன என்பதும், பிந்தைய காலத்தில் வந்த சரித்திர ஆய்வாளர்களின் இன்றளவும் கிடைக்கப்பெறும் ஆய்வு நூல்களிலிருந்தும் சாஸ்தா ஆதி தெய்வம் என்று தெளிவாகிறது. புராணங்கள் சிதையாமல் அவை தலை முறை தலைமுறையாக கற்பிக்கப்பட்டு வரும் குருகுல முறை (அக்காலத்தில் ஏது காகிதம் எழுதி பாது காத்து…அவை வந்தவை இந்த காலத்தில் தான், நவீன மய காலத்தில் தான். அதுவும் அழிந்து பிறந்து அழிந்து, மீண்டும் பிறக்கையில் இடைச் செருகல்களோடு வருகையில் உண்மை சிதைந்துண்டுதான் போயிருக்கக் காண்கிறோம்.
ஆனால், வேதங்களோ, புராணகளோ யுகம் கடந்தும் உண்மை மாறாமல், அப்படியே கிடைப்பது நமது தொன்மையான குருகுல வாசிப்பேயாகும் என்பது தெளிவாகிறது. ஆதலால் தான் இன்றும் வேத பாடசாலை படிப்பு இன்றியமையாத ஒன்றாய் விளங்குகின்றது.
இந்த குரு குல வாசிப்பு இருக்கும் வரை வெள்ளைக்காரனால் அவனது தீய எண்ணங்களை புகுத்த முடியாமல் திணரினான். அவன் வரும் முன் லட்சோப லட்ச குருகுல பள்ளிகள் இருந்தன. அதற்கு முன் முகமதியர்களின் சீரழிப்பு எல்லாம் சேர்ந்து குருகுல வாசிப்பை சிதறி விட்டது. இருப்பினும், நாடு முழுவதும் உள்ள யுகம் தாண்டி இருந்து வரும் கோவில்களிலும், சங்கர மடங்கள், ஆதீனங்கள், வடக்கே கரானாக்கள், போன்ற அமைப்புகளின் கடும் முயற்சியால் இந்த முறை இன்றும் தழைத்து தான் வருகிறது.
வரும் வாரம் சாஸ்தாவின் பிறப்பு அதன் ரகசியம் பற்றி அறியலாம்.
Leave a comment
Upload