தொடர்கள்
அரசியல்
என். சங்கரைய்யா

20231018100941854.jpg

தோழர் ரயில் ஏறினால் அடுத்து அவருக்கு ஜெயில்தான். 102 வயதில் இறந்து போன கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா பற்றி ஒரு செங்கொடி தோழர் சொன்னது இதுதான். அவர் கலந்து கொள்ளாத போராட்டமே இல்லை என்கிறார் அவர். அதேபோல் சிறை வாழ்க்கை பற்றி பெரிதும் கவலைப்படாத காம்ரேட் அவர் என்கிறார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் சங்கரய்யா.

சங்கரய்யா தந்தை தனது மகன் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று விரும்பினார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்த சங்கரய்யா மாணவர்களை திரட்டி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். இதனால் பட்டப் படிப்பு பாதியில் நின்று சிறைக்குப் போக வேண்டி இருந்தது.

1940-இல் அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். 1964-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக இவரும் ஒரு காரணம்.. மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். செம்மலர் இலக்கிய இதழ் உருவாக சங்கரய்யா ஒரு காரணம் .தீக்கதிர் நாளிதழின் முதல் பொறுப்பாசிரியர் இவர்தான்.

எட்டாம் ஆண்டு சிறை மூன்றாண்டு தலைமறைவு வாழ்க்கை. சங்கரய்யா இது அவரது தாத்தாவின் பெயர் இவருக்கு வைத்தார்கள். காமராஜரை இவர் முதல் முதலில் சந்தித்தது வேலூர் சிறையில் தான்.

2021-ஆம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கௌரவித்தது .சங்கரய்யா போன்ற தலைவர்கள் இனி காண்பது அரிது