அதை இறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணி தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய போட்டியில் நிறைய சாதனைகளையும் நிகழ்த்தி இருக்கிறது இந்திய அணி. .
தனது பிறந்தநாள் அன்று நவம்பர் 5-ஆம் தேதி சதம் அடித்து அதாவது சச்சின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒரு சதம் அடித்து ஒரு நாள் போட்டியில் 50 சதம் என்ற மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தினார் விராட் கோலி.
இந்தத் தொடரில் இதுவரை 711 ரன்கள் எடுத்து எடுத்திருக்கிறார் விராட் கோலி. இதன் மூலம் உலக கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையின் சொந்தக்காரர் ஆகிவிட்டார்.
795 பந்துகளில் 50 விக்கெட்டுகள் எடுத்து குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகள் எடுத்த உலக சாதனையும் முகமதுஷமி செய்ததுதான்.
அதுமட்டுமல்ல 50 ஓவர் உலகக் கோப்பை டி-20 உலகக்கோப்பை ஐபிஎல் தொடர் ஆகியவற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்னும் புதிய சாதனையையும் விராட் கோலி நிகழ்த்தி இருக்கிறார்.
2003 உலகக் கோப்பை தொடரில் ஏழு முறை சச்சின் டெண்டுல்கர் 50 ரன்கள் அடித்தது அதிகபட்ச சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்த நடப்பு தொடரில் எட்டு முறை 50 ரன்கள் எடுத்து அந்த சாதனையையும் உடைத்திருக்கிறார் விராட் கோலி.
அனைத்து ஃபார்மெட்டிலும் சேர்த்து தன்னுடைய எண்பதாவது சதத்தை சச்சின் 635 இன்னிங்ஸில் விளையாடி எடுத்து இருக்கிறார். அவரது இந்த சாதனையை 573 இன்னிங்ஸில் கோலி நிகழ்த்தியிருக்கிறார்.
நாக் அவுட் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா இதுவரை வீழ்த்தியது இல்லை. அந்த சாதனையும் இந்த போட்டியில் நடந்தது.
உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர் அடித்த கிறிஸ்கெயிலின் சாதனையை ரோகித் சர்மா 51 சிக்ஸர்கள் அடித்து அந்த சாதனையை முறித்திருக்கிறார். 2023 உலகக் கோப்பை தொடரில் இதுவரை 28 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார் ரோகித் சர்மா.
கபில்தேவ் 1983 சௌரவ் கங்குலி 2003 எம் எஸ் தோனி 2011 ஆகிய கேப்டன்கள் இந்திய அணியை உலகக்கோப்பை இறுதி சுற்றுக்கு அழைத்துச் சென்ற பெருமை உண்டு இப்போது நாலாவதாக அந்த பெருமை ரோகித்துக்கு கிடைத்திருக்கிறது.
இந்த உலகக்கோப்பை தொடரில் வெறும் 14 இன்னிங்ஸில் 50 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனை படைத்து இருக்கிறார் முகமது ஷமி.
ஒரு உலகக்கோப்பை தொடரில் 7 விக்கெட்டுகளை விழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.
ஒரு உலகக்கோப்பை தொடரில் நாலு முறை ஐந்து விக்கெட்டுகளை விழ்த்திய வீரர் என்னும் புதிய சாதனையையும் முகமதுஷமி செய்ததுதான்.
48 வருட உலகக்கோப்பை தொடரில் அதிக ஐந்து விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரும் இவர்தான்.
Leave a comment
Upload