ஆஸ்திரேலியா செமி பைனலுக்கு வந்த கதை
கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து நாள் போட்டிகளில் அல்லது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனி நபராக ஒருவர் தனது அணிக்கு வெற்றி தேடித் தந்த வரலாறு நிறைய இருக்கிறது. ஆனால், உலகக்கோப்பை அப்படி இல்லை. அந்த அணியின் வெற்றி என்பது கூட்டு முயற்சி தான். இதுவரை நடந்த உலகக்கோப்பை போட்டியில் இப்போது நடக்கும் உலகக்கோப்பை போட்டியில் கூட அதுதான் நடக்கிறது. பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை வீழ்த்துவது என்ற கூட்டு முயற்சியில் தான் அணியின் வெற்றி இருக்கிறது. தனிநபர் சாதனை என்பது எப்போதோ ஒரு முறை அபூர்வமாக நடக்கிறது. இப்போது ஆஸ்திரேலியா அதை நடத்தி காட்டி இருக்கிறது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அந்த வரலாறு நடந்தது. கிட்டத்தட்ட செமி பைனலுக்கு ஆப்கானிஸ்தான் தான் வந்துவிடும் போன்ற சூழ்நிலை தான் இருந்தது. தவிர இதுவரை நடந்த போட்டிகளில் எட்டு போட்டிகளில் நான்கு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று, தற்சமயம் உலகக்கோப்பைக்கு சொந்தக்காரரான இங்கிலாந்து, வங்கதேசம்,இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, புள்ளி பட்டியலில் ஆப்கானிஸ்தான் முன்னேறி இருக்கிறது. துவக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான சூழல் இல்லை. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 291 ரன்களை குவித்து இருந்தது. இதில் இப்ராஹீம் ஜாக்ரான் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 129 ரன்களை எடுத்திருந்தார்.
`அடுத்து வந்த ஆடிய ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானின் நவீன்ஹுல் ஹக் மற்றும் அஸ்மத்துல்லா ஓமர் சாய் ஆகியோரின் ஸ்வீங் ராஷிக்கானின் சூழல் இதில் சிக்கி ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு ஏழு விக்கெட் இழந்திருந்தது. தமிழ் வர்ணனையாளர்கள் இந்த முறை முதல் முறையாக செமி பைனலுக்கு ஆப்கானிஸ்தான் வந்துவிடும் போல் இருக்கிறது என்று சொல்லத் தொடங்கினார்கள்.
கிரிக்கெட் ஆட்டத்தில் எப்போதும் ஒரு டர்னிங் பாய்ன்ட் உண்டு. அந்த திருப்புமுனை வெற்றி தோல்வியை அப்படியே உல்டாவாக மாற்றிவிடும். ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் போட்டியில் அந்த திருப்புமுனை நடந்தது.
கிரெவன் மேக்ஸ்வெல் தான் அந்த திருப்புமுனை.இத்தனைக்கும் பந்து முதுகில் பட்டு முதுகு வலியில் அவதி, இதே போல் சில பந்துகள் காலில் பட்டு கால் வலி. இப்போது அவரது உடம்பில் பழுதில்லாமல் இருக்கும் ஒரே ஒரு உறுப்பு அவரது கை தான் அதுதான். அவரது ஒரே நம்பிக்கையும் கூட. ஓருரன் எல்லாம் ஓட முடியாது அடித்தால் சிக்ஸர் பவுண்டரி என்று தான் விளாச வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் மேக்ஸ்வெல் இருந்தார். தசைப்பிடிப்பு வலியுடன் ஒரு வீரர் விளையாட முடியுமா சாதனை நிகழ்த்த முடியுமா என்ற கேள்விக்கு முடியும் என்று சாதனை படைத்து நிரூபித்தார் மேக்ஸ்வெல். போட்டியின் கடைசிகட்டத்தில் தொடர்ச்சியாக பந்துகளை பவுண்டரிக்கு அடித்து விரட்டி மேக்ஸ்வெல் 128பந்துகளில் 201 ரன்கள் என்று தனி ஒருவராக ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி தேடித்தந்தார் மேக்ஸ்வெல்.
ஆஸ்திரேலியா தோல்வி நிச்சயம் என்ற நிலையில் அதை தவிடு பொடி ஆக்கினார் மேக்ஸ்வெல். ஆஸ்திரேலியா கேப்டன் கமின்ஸ் ,மேக்ஸ்வெல்லுக்கு ஜோடியாக களம் இறங்கியும் அவரது பங்களிப்பு வெறும் 12 ரன்கள் தான் மட்டுமே. ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் குவித்த முதல் இரட்டை சதம் இதுதான். அதுவும் ஆறாவது வீரராக களம் இறங்கி மேக்ஸ்வெல் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
ஜிம்பாவுக்கு எதிரான ஆட்டத்தில் கபில்தேவ் 175 ரன்கள் குவித்து வெற்றியை தேடி தந்தார். அவரும் ஆறாவது வீரராக தான் களம் இறங்கினார். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை இந்த போட்டி ஒரு மறக்க முடியாத போட்டி ஆப்கானிஸ்தானுக்கும் தான்.
Leave a comment
Upload