தொடர்கள்
கவர் ஸ்டோரி
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா !!! பெருமை மிகு தருணம்-ஜாசன்

இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறிய கதை

20231017185806888.jpg

உலகக்கோப்பை போட்டியில் இந்த முறை தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது இந்தியா. இறுதிப் போட்டிக்கு இரண்டு அணிகள் தகுதி பெற இந்தியா ,நியூசிலாந்தை சந்திக்க வேண்டும். ஆஸ்திரேலியா ,தென்னாப்பிரிக்காவை சந்திக்க வேண்டும் என்ற நிலையில் இந்தியா நியூசிலாந்து போட்டி நடந்தது.

நியூசிலாந்து இந்த முறை வலுவான அணியாக இருக்கிறது. அதன் பேட்டிங் பந்துவீச்சு எதையுமே குறைத்து மதிப்பிட முடியாது. அதுவும் குறிப்பாக ரச்சின் ரவீந்தரா மூன்று சதங்கள் 565 ரன்கள் எடுத்திருக்கிறார். அது மட்டுமல்ல 2019-ஆம் ஆண்டில் உலகக்கோப்பை அரை இறுதியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.

20231017190205126.jpg

​இந்தியா நியூசிலாந்து போட்டி பற்றி குறிப்பிட்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எங்கள் வீரர்கள் தங்கள் ஆட்டத்தில் மேலும் மேலும் முன்னேறவே விரும்புகிறார்கள். இந்த அணியின் சிறப்பு முதல் முதலில் இந்தியா உலகக் கோப்பையை வென்ற போது இந்த அணியில் இப்போது இருக்கும் வீரர்கள் பாதி பேர் பிறக்கவே இல்லை. அதேபோல் கடைசியாக இந்தியா உலகக்கோப்பை வென்ற போது இருந்தவரில் பாதி பேர் இப்போது இந்த அணியில் இல்லை. நாங்கள் தைரியமாக இருக்கிறோம் எங்கள் தைரியம் தான் எங்களுக்கு அதிர்ஷ்டம் என்று ரோகித் சர்மா குறிப்பிட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்தியா நியூசிலாந்து போட்டி நடந்தது.

20231017190240533.jpeg

​முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பிறகு சுப்மன் கில் விராட் கோலி ஜோடி தங்களது சீரான ஆட்டத்தில் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார்கள். 65பந்துகளில் 75 ரன்கள் எடுத்த சுப்மன் கில் தசைப்பிடிப்பு காரணமாக ஓய்வு பெற்று வெளியேறினார். அதனைத் தொடர்ந்து விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி ஆட்டம் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பக்கம் விராட் கோலி நிதானமாக விளையாடினார்.

20231017190438500.jpeg

ஸ்ரேயாஸ் ஐயர் பந்துகளை சிக்ஸர்களாக பந்துகளை பறக்க விட்டார். 70 பந்துகளில் 8 சிக்ஸர் 105 ரன்கள் எடுத்தார் ஸ்ரேயாஸ் அய்யர். விராட் கோலி 113 பந்தில் 117 ரன்கள்எடுத்து ஆட்டம் இழந்தார். கடைசியாக வந்த கே.எல்.ராகுல் 20 பந்துக்கு 39 ரன்கள் எடுத்து இந்தியா நாலு விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்திருந்தது. 398 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் நியூசிலாந்து களத்தில் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் டேவன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்தரா இருவருமே பத்து ஓவர்களில் முகமது ஷமியின் பந்து வீச்சில் வெளியேறினார்கள். அதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்ஸ் டெரில் மிட்சல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினார்கள் என்பது தான் உண்மை.

20231017190521399.jpeg

33-வது ஓவரில் திருப்புமுனை நடந்தது. வில்லியம்சன் மற்றும் டாம் லாதமை ஒரே ஓவரில் வெளியேற்றினார் முகமது ஷமி. அதன் பிறகு ரன்குவிப்பு மட்டு பட்டது. முகமது ஷமி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்தார். நியூசிலாந்து 327 ரன்னுக்கு தனது மொத்த விக்கெட்டுகளை இழந்தது. 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடக்க இருக்கிறது.

20231017190555832.jpeg

நியூசிலாந்து இந்தியா போட்டியை நேரில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் 100% இந்த முறை இந்தியாவுக்கு தான் உலகக்கோப்பை என்று சொல்லியிருக்கிறார் பார்ப்போம்.