தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 058 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20231017072305282.jpg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சாரிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் சாரின் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் சாரின் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

ஸ்ரீ வைஷ்ணவ வெங்கட்ராமன்

ஸ்ரீ மஹா பெரியவாளின் பிறந்த இல்லத்தை பாடசாலையாக மாற்றி அதனை நிர்வகிக்கும் பாக்கியம் கிடைத்த ஸ்ரீ வைஷ்ணவ வெங்கட்ராமன் மாமா அவர்களின் அனுபவங்கள் மிகவும் ஆத்மார்தமானவை . பக்தியின் பிரவாகம்