தொடர்கள்
பொது
கோலி சோடா - நூற்றாண்டை கடந்த பெருமை மாலா ஶ்ரீ

20230615073059464.jpeg

சென்னையின் கடும் வெயிலில் கிரிக்கெட் விளையாடி விட்டு ஒரு ரூபாய்க்கும் குறைவான பன்னீர் சோடாவை லாவகமாக கட்டை விரலை ஒரு வாக்காக வைத்துக் கொண்டு ஒரே அடியில் கோலி சோடாவின் கோலியை உள்ளே தள்ளி பொங்கி வரும் குளிர்ந்த பன்னீர் சோடாவை மடக்கு மடக்கு என்று விழுங்கியிருக்கிறீர்களா ???

இல்லையென்றால் இளமையின் சில அழகான பக்கங்களை நீங்கள் இழந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நூற்றாண்டை கடந்த கோலி சோடாவின் கதை இது.

இனி,

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணுசாமி முதலியார். இவர், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக கடந்த 1924-ம் ஆண்டு முதன்முறையாக ஜெர்மனியில் இருந்து அதற்கான கோலி சோடா பாட்டில்களை இறக்குமதி செய்து, அவற்றின் மூலம் கண்ணுசாமி முதலியார் தயாரிக்கத் துவங்கினார். பின்னர் அந்த கோலி சோடாக்களை முதலில் பெட்டிக் கடைகளுக்கு சப்ளை செய்துள்ளார். நாளடைவில் வேலூருக்கு வரும் பெரும்பாலான மக்கள் கோலி சோடாக்களை விரும்பி வாங்கி குடித்துள்ளனர். அதன் சுவை பிடித்துப் போகவே, வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கோலி சோடா விற்பனை பரவத் துவங்கியது. இதன்மூலம் தமிழ்நாட்டில் அப்போதைய குளிர்பானங்களுக்கு இடையே கோலி சோடா பிரதான இடம் பிடித்தது!

இதன் அடுத்தக்கட்டமாக, வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்குக்கூட கோலி சோடாவைத்தான் நமது முன்னோர்கள் வாங்கி கொடுத்து உபசரித்துள்ளனர். இதனால் பெட்டிக்கடைகள், பலசரக்கு கடைகள் உள்பட பல்வேறு இடங்களில் கோலி சோடா முக்கிய இடம்பிடித்தது. பின்னர் கடந்த 1990-ம் ஆண்டு முதல் பல்வேறு வெளிநாட்டு குளிர்பானங்கள் வருகை மற்றும் விளம்பரங்கள் அதிகரித்தும், கோலி சோடாவின் மவுசு இதுநாள்வரை குறையவில்லை! இத்தகைய பிரபலமான கோலி சோடா, முதன்முதலில் வேலூரில்தான் தயாரானது.

20230615073638915.jpg

இன்றும் வேலூரில் உள்ள கண்ணன் சோடா கம்பெனியில், கண்ணுசாமி முதலியாரின் தலைமுறையினர் பாதுகாப்பாக வைத்துள்ளனர். தற்போதும் 3வது தலைமுறையாக மோகனகிருஷ்ணன், 4வது தலைமுறையான அவரது மகன்கள் ஆனந்தகிருஷ்ணனன், ஹரிகிருஷ்ணன் கோலி சோடா தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய சூழலுக்கேற்றவாறு, புதுவகையான புளூபெர்ரி கோலா, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு, பச்சை என பல்வேறு வகையான கோலி சோடாக்கள் தயாரித்து, 4வது தலைமுறை நிர்வாகிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வேலூரிலிருந்து வடமாவட்டங்கள் முழுவதிலும் கோலி சோடா விற்பனையை விரிவுபடுத்தி உள்ளனர்.

வேலூரில் கண்ணுசாமி முதலியாரால் துவங்கப்பட்ட கோலி சோடா தயாரிப்பு மற்றும் விற்பனை, தற்போது நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. நூற்றாண்டு கண்ட கோலி சோடா, தற்போது பெரிய நட்சத்திர ஓட்டல்களிலும் விற்பனை களைகட்டி வருகிறது.

அதேபோல் திருமண நிகழ்ச்சிகளில் பஞ்சுமிட்டாய், பாப்கார்ன் உள்ளிட்ட பல்வேறு நொறுக்குத்தீனிகளுடன் விருந்தினர்களைக் கவரும் வகையில் விதவிதமான கோலிசோடா வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால்தான் கோலி சோடா நூற்றாண்டை கடந்து பயணிக்க முடிகிறது என கண்ணன் சோடா கம்பெனி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பாரம்பரியமிக்க கோலி சோடா, இன்றைய இளைய தலைமுறையின் குளிர்பான வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறது எனக் குறிப்பிடத்தக்கது.

இன்றைய இளைஞர்கள் முயற்சிக்க வேண்டிய ஒரு ஐட்டம் கோலி சோடா. அதற்கான உபகரணங்கள் இல்லாமல் கட்டை விரலை வைத்து திறந்து பாருங்கள்.

துரதிருஷ்டவசமாக பீர் பாட்டிலை ஓபனர் இல்லாமல் வாயால் கடித்து திறக்கும் திறமை அதிகமான இன்றைய சூழ்நிலையில்.... அதையெல்லாம் மறந்து விட்டு கோலி சோடாவை திறக்கும் சமுதாயம் உருவானால்......

நாட்டுக்கும் வீட்டுக்கு நல்லது !!!!

மாலாஸ்ரீ