தொடர்கள்
நேயம்
36 ஆறு வருடத்திற்கு பின் கல்லூரி வாசலில்- ஸ்வேதா அப்புதாஸ்

கடந்த ஆறாம் தேதி பகல் 12.30 மணிக்கு ஊட்டி அரசு கல்லூரி வாசலில் வெள்ளை முடி தாடி யுடன் சிலர் கரு முடியுடன் சற்று இளமையாக வந்திருந்தனர் .

20230612232040655.jpg

மாம் டேய் பாய் சார்ல்ஸ் எப்படியிருக்கிங்க .

எப்ப வந்த மகன் அமல் அப்படியே இருக்க சூப்பர் டா என்று கூறி நண்பர்களை ஆரக்கட்டி தழுவி கொண்டனர் .

20230612232117670.jpg

கையில் கொண்டு வந்த ஒரு பேனரை கல்லூரி கேட்டில் கட்ட நாம் அருகில் சென்று பார்க்க .

20230612232204438.jpg

1984 முதல் 1987 பேட்ச் பழைய மாணவர்களின் சந்திப்பு தான் அது .

சிங்கப்பூரில் இருந்து வந்த சார்லஸ் , டெல்லியில் இருந்து வந்த கிரிஷ்.

20230612232309584.jpg

இன்னும் வந்து கொண்டிருக்கிறார்கள் வெய்ட் செய்யலாம் என்ற குரல்கள் .

20230612232600205.jpg

இதோ பா நம்ம காலேஜ் எஸ் .பி .பி .விஜி வந்தாச்சு ...டேய் விஜி உன் பாட்டை கேட்டு எத்தனை நாள் ஆகிப்போச்சு ...மகன் உன் பாட்டை கேட்கணும் என்ற குரல்கள் .

மழை தூறல் எல்லோரையும் நனைத்து கொண்டிருந்தது .

20230612232739992.jpg

முப்பது பேருக்கு மேல் ஆஜர் ..எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டு ஒவொருவரும் கட்டி பிடித்து கொள்ள பலரின் கண்களில் ஆனந்த் கண்ணீர் .

போலீஸ் அதிகாரி இளங்கோ வந்து சேர எல்லோரும் அவர் பக்கம் திரும்ப டேய் நான் உங்களின் ஒருவனாக வந்துள்ளேன் என்று அணைத்து கொண்டார்கள் .

2023061223290052.jpg

GAC Reunion Past 1984-87 Meets Present 2023 . Back to the Future :Rewind, Reunite , and Remember! என்ற பேனர் அதில் 1987 ஆம் வருட மாணவ தலைவர் தர்மராஜ் படம் பளிச் என்று இருக்க அதை முன்னாள் மாணவர் சேட் ரசித்து கொண்டிருந்தார் .

இந்த சந்திப்புக்கு காரணகர்த்தாவான தர்மராஜ் மற்றும் டெல்லி கிரி ஓடோடி வந்து வாங்கப்பா எல்லோரும் போய் ப்ரின்சிபாலை பார்த்துவிட்டு வரலாம் என்று கூற கல்லூரி வாயிலில் இருந்து பேனருடன் ஒரு சிறிய பவனி நகர்ந்து வர இன்றைய மாணவ மாணவிகள் ஆச்சிரியதுடன் பார்த்தார்கள் அதில் சில மாணவிகள் யார் இவர்கள் என்று கேட்க அருகில் சென்று பார்த்து , நம்ம காலேஜ் ஓல்ட் ஸ்டுடென்ட்ஸ் சூப்பர்பா என்று கூறி வழிவிட்டார்கள் .

2023061223302381.jpg

சேர்மன் தர்மராஜ் பிரதர்ஸ் வெய்ட் பண்ணுங்க ப்ரின்ஸியிடம் போய் உத்தரவை வாங்கி வருவார் கிரி என்று கூற

கிரி உள்ளே போய் சென்று ஓகே என்று கூற மலர் கொத்துடன் அனைவரும் உள்ளே செல்ல பிரமித்து போய் பார்த்தார் பிரின்சிபால் அருள் ஆன்டனி

20230612233054274.jpg.

அனைவரையும் உட்கார வைத்து பேசினார் .

தர்மாவும் , ரவியும் மலர் கொத்தை ப்ரின்ஸிக்கு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர் .

"36 வருடத்திற்கு பின் நீங்கள் இப்படி ஒன்றாக இருப்பதை பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது உண்மையில் அருமை உங்களின் உதவி தேவை கல்லுரி சார்பாக வரவேற்கிறேன் ஆல் தே பெஸ்ட் " என்று கூறினார் .

எல்லோரும் அந்த அழகிய முதல்வரின் அறையை சுற்றி பார்த்து வெளியே வந்து பாரம்பரிய படிக்கட்டில் ப்ரின்சிபாலுடன் குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்து.

20230612233200115.jpg

எங்க கல்லூரி எவ்வளவு அழகானது இங்க பாரு மச்சி நான் உட்காரும் கல்லை காணோம் என்று கூறின அஸ்மத் கான்

2023061223324451.jpg

"நம்ம ப்ரின்ஸி அப்துல் காதர் சேட் கருப்பு சூட்டில் குடையுடன் வருவது இன்னும் என் கண்முன்னே தெரிகிறது அவரின் நடை உடை கம்பிரம் கிரேட் மறக்க முடியாது " என்று கூற

20230612233326370.jpg

அந்த காலத்து கல்லூரி காதல்கள் கூட நினைவு கூறப்பட்டது .

சேர்மன் தர்மாவை நெருங்கி பேசினோம் ,

" எவ்ளோ சந்தோஷமா இருக்கு 37 வருடத்திற்கு முன் இளையஞர்களாக சுற்றி திரிந்த இந்த கல்லூரியில் மீண்டும் ஒன்றாக இணைந்து வந்திருப்பது பழைய நினைவுகள் பின்னோக்கி பார்த்து கொண்டிருக்கிறோம் மனதிற்கு இதமாக இருக்கிறது . அமெரிக்கா , சிங்கப்பூர் , டெல்லி என்று பல இடங்களில் இருந்து வந்திருப்பது பிரமித்திருக்கிறோம் " என்று கூறினார் .

கல்லுரியை சுற்றி பார்க்க பல மாற்றங்கள் .

கோவையில் இருந்து அவசரமாக வந்து சேர்ந்த வின்சென்ட் ரவி அழகான கல்லூரியை மாற்றக்கூடாது அதே கலர் அதே இடங்களாக இருக்க வேண்டும்,

20230612233506688.jpg

எதோ கல்லூரி கட்டிடங்களை வருவாய் துறை எடுத்து செல்கிறதாமே என்று குண்டை போட எல்லோரும் ஒரு காலமும் அதை அனுமதிக்க கூடாது அப்படி எதாவது நடந்தால் முன்னாள் மாணவர்களின் படை சும்மா இருக்காது என்ற எச்சரிக்கை மணியை அழுத்திவிட்டு நகர்ந்தனர் .

ஒரு மாணவி ஓடி வந்து , " நீங்கள் எல்லாம் யார் "? என்று கேட்க சுரேஷ் நாங்க முன்னாள் மாணவர்கள் 36 வருடத்திற்கு முன் இதே கல்லூரியில் படித்த மாணவர்கள் இன்று ஒன்றாக சேர்ந்துள்ளோம் " ஐயோ ஆச்சிரியமாக இருக்கு யு ஆர் ஆல் கிரேட் சார் நாங்க எல்லாம் இப்படி வருவோமா தெரியல ஆல் தி பெஸ்ட் கூறி சென்றார் அந்த கல்லூரி நங்கை .

டெல்லியில் இருந்து வந்திருந்த ரஷீத்

, " இந்த நிகழ்வுக்கு முக்கிய காரணம் எங்க சேர்மன் தர்மாவும் கிரியும் தான் .இத்தனை வருடம் கழித்து எங்களை இந்த கல்லூரிக்கு கூட்டி வந்து பழைய நினைவுகளில் மூழ்கடித்தது அருமையான தருணம்".

சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த சார்ல்ஸ் கூறும் போது ,

" 36 வருடத்திற்கு பின் நண்பர்கள் ஒன்றாக இணையவைத்தது அருமை இந்த சந்திப்புக்கு தான் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளேன் மறக்கமுடியாத ஒரு ரீயூனியன் "

கல்லூரியை ஒரு சுற்று சுற்றி வர ஜான் சல்லிவன் வந்து சென்ற இடத்தில் நாம் படித்தோம் என்பது பெருமையான விஷயம் என்று கூறினார் ரவி .

எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கோரஸாக "வி லவ் அவர் ஊட்டி ஆர்ட்ஸ் காலேஜ்" என்று கூறி புதிய கல்லூரி நுழைவாயிலில் குரூப் போட்டோ எடுத்து விட்டு தமிழ் நாடு ஹோட்டலில் லஞ்ச் முடித்த கையோடு மசினகுடி மாவனல்லா ரிசார்டுக்கு பயணித்து தங்கினார்கள் .

20230612233811158.jpg

அங்கு சென்றவுடன் எல்லோரும் கல்லூரியின் மலரும் நினைவை குறிக்கும் டீ ஷர்ட்டிற்கு மாற சூப்பராக மாறினார்கள் .

2023061223384262.jpg

சேட்டின் பிறந்த நாள் கேக் வெட்டி ரீயூனியன் கொண்டாட்டம் . துவங்கியது

20230612234854934.jpg

அந்த கால கட்டத்தில் கல்லூரியில் பாடகர்களாக வலம் வந்த விஜி மற்றும் ஜெயகுமார் பாடல் பாட அதை ரசித்து அனைவரின் கண்களும் குளமாகின .

சேர்மன் தர்மராஜ் ஒரு சேரில் ஏறி நின்று உரை நிகழ்த்தி மெய்சிலிர்த்தார் எப்படி அன்று கல்லூரியில் சுற்றி திரிந்தோமோ அதே போல நம் பட்டம் பதவிகளை தூக்கி ஓரமாக ஒதுக்கி விட்டு வாடா போடா என்று இந்த நாட்களை கழிப்போம் மலரும் நினைவுகளுடன் .

20230612234941988.jpg

அதிலும் இவர்களை விட்டு போன நண்பர்கள் அனந்த கிருஷ்ணன் , பிரபாகரன் ,செந்தில் கோபி , மங்கள தாஸ் ,மரிய தாஸ் ,பாபு , அசோக் இவர்களின் பிரிவு இதயங்களை உருக செய்துவிட்டது" என்று கூறி அந்த ஆன்மாக்களுக்காக அமைதி காத்தனர் .

20230612235015577.jpg

சார்லஸ் சிங்கப்பூரில் இருந்து வாங்கி வந்த சூப்பர் பென் ஸ்டேண்டை அனைவருக்கும் பரிசாக கொடுத்து அசத்தினார் .

நீலகிரி படுக நடனத்தில் இருந்து அனைத்து வகை டான்ஸ்களும் அரங்கேறின .

2023061300042399.jpg

இளங்கோவின் மனைவி அவர் புறப்பட்டு வரும் போது ' உங்க பழைய கிளாஸ் மேட் ஆண்டிகள் வருகிறார்களா '? என்று கேட்க எந்த ஆண்டியும் வருவது இல்லை இந்த ரீயூனியனில் அவர்கள் மிஸ்ஸிங் .அடுத்த விசிடில் அவர்களை கூப்பிடவேண்டும் என்ற உறுதி மொழியை எடுத்து கொண்டனர் .

20230613001710610.jpg

அனைவரும் தங்களை மறந்து பழைய கல்லூரி கதைகளை பேசி தீர்த்தனர் .

விஜி " பசுமை நிறைந்த நினைவுகளே" பாடலை பாடி அனைவரும் கட்டி பிடித்து அழுது விட்டனர் .

தங்களின் குடும்பம் குழந்தைகளை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர் .

பழைய கல்லூரி மலரும் நினைவுகளில் இருந்து விடுபடாமல் கிளம்ப ஒரு விஷயம் என்றார் ராமகிருஷ்ணன் மச்சி அடுத்த ரீயூனியன் நம் குடுப்பதுடன் தான் என்று கூற அனைவரும் ஓகே சொல்ல .


அவரவர் காரில் பயணிக்க அனைவரும் விடை பெற சேர்மன் தர்மா கண்கலங்கி நின்று கொண்டிருந்தார் அடுத்த ரீயூனியன் கற்பனையில் .