தொடர்கள்
பொது
அமெரிக்க கலையோவியக்குகைகள் - சரளா ஜெயப்ரகாஷ்

20230613153641706.jpg

லூரே குகைகள் (LURAY CAVERNS)

'லூரே குகைகள்' அமெரிக்காவில் வொ்ஜினியா மாநிலத்திலுள்ள லூரே என்ற இடத்தில் உள்ளது. இது கிழக்கு அமெரிக்காவிலேயே நிலத்துக்கு அடியிலிருக்கும் பெரிய குகையாகும். இது பல லட்சம் வருடங்களுக்கு முன்னால் உருவான குகை என விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்திற்கு பயணித்து, நுழைவுச்சீட்டு வாங்கிகொண்டு, நுழைவு வாயிலின் உள்ளே சென்றேன். சுற்றிலும் உள்ள சுவரில் குகையை கண்டுபிடித்தவா்கள், குகையின் வரலாறு மற்றும் வேதிவினைப் புரிந்த பாறைகளின் விவரங்கள் காணப்பட்டன. அடுத்து இருந்த ஒரு கதவினைத் திறந்து குகைக்குள் நுழைந்தேன். சுற்றிலும் இருட்டு. அதில் விளக்கொளி தெரிந்தன. சிறிது காலடிதூரம் நடந்தவுடன், நான் கண்ட காட்சி எல்லையில்லா பிரமிப்பை எனக்கு ஏற்படுத்தியது. இது என்ன தோட்டாதரணி செட்டா என்று நினைக்கும் விதத்தில் பிரமாண்டமான மற்றும் விசித்திரமான வகையில் பாறையின் வடிவங்கள் காணப்பட்டன. மேலும் நடந்துசென்று நான் கண்ட ஓவ்வொரு காட்சியும் என்னை மிகவும் ஈா்க்கக்கூடிய வகையிலிருந்தன.
மேற்கூரையிலிருந்து கீழே தொங்கும் வடிவங்கள் இருந்தன. அவை பனிக்கட்டி உருகி குச்சிகுச்சியாக நிற்பது போல இருந்தன.

20230613153802647.jpg

இது போல மேலிருந்து கீழ்நோக்கி வரும் வடிவம் 'Stalactite' (கசிதுளிவீழ்) (படம் - 1) என்றும் தரையிலிருந்து மேல் நோக்கி எழும்பும் வடிவம் 'Stalagmite' (கசிதுளிபடிவு) (படம் - 2) என்றும் அழைக்கப்படுகின்றது.

20230613153852569.jpg

குகை முழுவதும் நடந்து சென்றுப் பாா்த்ததில், அங்குள்ள அமைப்புகள் என்னை மலைப்பூட்டச்செய்தன.
லூரே கேவா்னஸ், அமெரிக்காவில் அதிகமக்கள் வருகை தந்த இடமாக விளங்குகின்றது. குகையின் ஒரு பகுதி மட்டும் மக்கள் பாா்வையிட திறந்துவிடப்பட்டிருக்கின்றது. இது 1.25 மைல் நீளம் உள்ளது. இதனைச்சுற்றிப் பாா்க்க ஒரு மணி நேரமாகிறது. எல்லா காலங்களிலும் குகையின் உள்ளே 54° C வெப்பநிலை இருக்கின்றது. இந்த குகையிலுள்ள நடைபாதையும், விளக்குகளையும் தவிர மற்ற அனைத்தும் இயற்கையாக உருவானதுதான். இங்கு நடைபாதையில் மட்டுமே மக்கள் நடக்க வேண்டும். இங்கிருக்கும் வடிவங்களை அரசாங்கம் என்றென்றும் பாதுகாக்க கருதி, அவற்றைப் பாா்வையாளா்கள் தொட்டுப்பாா்க்க சட்டம் தடை விதித்திருக்கிறது.

இந்தக் குகையை கி.பி 1878ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வில்லியம் கேம்ப்பெல், ஆண்ட்ரூ கேம்பெல் மற்றும் பென்டன் ஆகிய மூன்று பேரும் கண்டுபிடித்தனா். அந்த தினம் உள்ளூா்வாசிகள் ஐந்து போ் ஒரு பாதையில் சென்றபோது அங்கு துளை ஒன்று இருப்பதையும், அதிலிருந்து குளிந்த காற்று வருவதையும் மற்றும் சுண்ணாம்பு கல்லில் வடியும் பால் போல அங்கு இருப்பதையும் பாா்த்து குழியைத் தோண்ட ஆரம்பித்தாா்கள். அந்தக்குழியில் ஆண்ட்ரூ மற்றும் குயின்ட் கயிறு வழியாக இறங்கி, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாா்த்த முதல் தூணுக்கு 'Washington Column' என்று பெயா் வைக்கப்பட்டது. இந்தக்குகையில் மொத்தம பத்தொன்பது நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் கண்களை கவரக்கூடிய வடிவங்கள் மற்றும் சில முக்கியத்துவம் வாய்ந்தவைகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

2023061315404187.jpg
Fish Market (படம் - 3)
இந்த வடிவங்கள் கிட்டத்தட்ட சமநீளத்தில் நீண்ட மெல்லிய கோடுபோல அடுத்தடுத்த வரிசையில் தொங்கிகொண்டு இருந்தன. இந்தக்
கோட்டின் இறுதியில், சிறிய வளைவாக வளைந்தும் காணப்பட்டன. இவைப் பாா்ப்பதற்கு மீன் சந்தையில், மீன் தொங்க விட்டிருந்ததை நினைவுப்படுத்தியதுப் போல இருந்தது.
Dream Lake (படம் - 4)

20230613154130544.jpg
இந்த இடம் அனைத்து புகைப்பட ஆா்வலா்களுக்கும் ஒரு விருந்தாக இருக்கின்றது. லூரி கேவா்ன்ஸின் பெரிய நீர்நிலை இந்த Dream Lake தான். 2500 சதுரஅடி உள்ளது. 18லிருந்து 20 அடி ஆழம் வரை இருக்கின்றது. மேற்கூரையிலிருந்து கீழே தொங்கும் 'ஸ்டாலக்டைட்' கீழே இருக்கும் தண்ணீரில் பாா்க்கும்போது கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல தெளிவாக காணப்படுகின்றது. ஆனால் இந்த அற்புதக்காட்சி கீழே இருந்து மேலே எழும்பும் 'ஸ்டாலமைட்' போல ஒரு மாயையை ஏற்படுத்துகின்றது. இப்படிப்பட்ட வடிவங்கள் இயற்கையாக எப்படி உருவாகும் என்பது ஒரு கேள்விகுறியாக மனதில் இருந்தது. இதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானத்தை தெரிந்துகொள்ளும்போது அதற்கு விடை கிடைக்கின்றது.
லூரே குகைகள் கரைசலாலான குகைகள். மழைநீா் சுற்றுப்புறத்திலுள்ள காா்பன்டை ஆக்ஸைடுடன் கலந்து, மிதமான காா்பானிக் அமிலத்தை உருவாக்குகின்றது. இந்தக் கரைசல் நிலத்தில் ஊடுருவி, அடுக்கடுக்காக உள்ள சுண்ணாம்புப் பாறையில் பரவி, அடிப்பாறைகளை வெற்றிடமாக்கி, இவ்வகையான குகை அறைகளை ஏற்படுத்துகின்றது. குகைக்குள் நீா் தொடா்ந்து ஓழுகி, காா்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றி, எஞ்சியுள்ள சுண்ணாம்பு வீழ்படிவை படிகமாக்கின்றது. இவை தொடர்ந்து படிந்துகொண்டு வந்து சேகரிக்கப்பட்டு 'Speleothems' என்ற வடிவங்களாக உருவாகின்றன. இதில் இரண்டு வகைகள் உள்ளன. அவையே Stalactite and Stalagmite ஆகும். இந்த இரண்டு வடிவங்களும்
சில இடங்களில் சேர்ந்து தூண் போல காட்சியளிக்கின்றன. இந்த குகை வடிவங்களில் படிவுகள், 120 வருடத்திற்கு ஒருமுறை ஒரு கன அங்குலம் கூடும். குகை வடிவங்கள் வெண்மை, சாம்பல் கலந்த கருப்பு மற்றும் செம்மண்ணிறத்தில் காணப்படுகின்றன. இவை இயற்கையாக உருவான நிறங்களாகும்.
Titania's Veil (படம்-5)

20230613154249149.jpg
கனிமச்சத்து நிறைந்த நீர் தொடர்ந்து சுவரில் ஊடுருவி, அடுக்கடுக்காக படிகிறது. துருத்திக் கொண்டிருக்கும் விளிம்பில் தொடர்ந்து படிந்து, இப்படி ஒரு பிரமாண்டமான அலங்கார முக்காடு போன்ற வடிவத்தினைக் கொடுக்கின்றது. Shakespeare ன் "A midsummer night dream" - ல் உள்ள பாத்திரத்தின் பெயரை நினைவு கூறும் வகையில் இந்த வடிவத்திற்கு Titania's Veil எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் ஒரு அங்குலம் வளர முன்னூறு வருடங்களாகின்றது என கணிக்கப்பட்டிருக்கிறது.

Saracen's Tent (படம் - 6)

20230613154421833.jpg
அருவியிலிருந்து விழும் தண்ணீரைப் போன்ற அமைப்பு (Flow Stone) குகை முழுவதும் நிறைய இடத்தில் காணப்படுகின்றது. அவற்றிலே சிறந்த உதாரணமாக இந்த Saracen's tent திகழ்கிறது. இது அழகான நிறைய மடிப்புகள் கொண்ட திரைச்சீலையை தொங்கவிட்டது போன்ற ஒரு கல்லாலான அமைப்பு. இந்த திரைச்சீலை அமைப்பிலுள்ள மடிப்புகள், கையால் மடித்து விட்ட மடிப்புகள் போன்று
மிகவும் நேர்த்தியாக காணப்படுகின்றன. தேசிய புவியியல், குகை திரைச்சீலை வடிவங்களில் இது உலகத்திலேயே மிகவும் சிறந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Fried egss (படம் - 7)

20230613154524609.jpg
இந்தக் குகையில் தொழிலாளர்கள் பல வருடங்களுக்கு முன்னால் வேலை செய்துக் கொண்டிருக்கும்போது, இரண்டு Stalagmite-ல் பாதிப்பு ஏற்பட்டு, உடைந்து விழுந்ததில், எஞ்சியிருந்தது வட்டவடிவமான வடிவம் மட்டும்தான். இது பார்ப்பதற்கு சமைக்கும்போது இருக்கும் முட்டை வடிவம் போல (Bullseye egg) காணப்படுகின்றது. இந்த வடிவங்களைத் தேய்த்துப் பார்ப்பதால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பப்பட்டது. முன்பு இதனைத் தொட்டுப் பார்க்க பார்வையாளர்களை அனுமதித்தார்கள்.
Double Column (படம் - 8)

20230613154609334.jpg
இந்தக் குகையிலிருக்கும் மிக உயரமான வடிவமைப்பு இந்த 'Double Column' 47 அடி உயரமுள்ளது. Stalactite க்கும் Stalagmite -க்கும் இது சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இவை இரண்டும் ஒன்றையொன்று சந்திக்கவில்லை, ஆனால் பக்கவாட்டில் இணைந்து காணப்படுகின்றது.
The Great Stalacpipe Organ (படம் - 9)

2023061315471425.jpg
இது இங்குள்ள தேவாலயத்தில் (Cathedral) காணப்படுகின்றது. 1954ல் இங்கு வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது. இது உலகத்திலேயே பெரிய இசைகருவி என்று கின்னசு உலக சாதனையில் இடம்பெற்றிருக்கின்றது. இது இங்கிருக்கும் 37 Stalactite - உடன் ரப்பர் நுனி உலக்கையின் மூலம் இணைக்கப்பட்டிருக்கின்றது. பட்டனை அமுக்கும் ஒவ்வொரு முறையும் ஒலி கேட்கும். இது தானாகவே இயங்கும்படி அமைத்திருக்கிறார்கள்.
Wishing Well (படம் - 10)

20230613154814780.jpg
இது 6 அடி ஆழமுள்ள கிணறு. இங்கு பார்வையாளர்கள் வேண்டுதல்களை கோரி, நாணயங்கள் மற்றும் பணங்களை இந்த குளத்தில் வீசுகிறார்கள்.
இப்படிச் செய்வதால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஒரு நம்பிக்கையாக இருக்கின்றது. இந்த கிணற்று நீர் நீல பச்சை நிறத்தில் காணப்படுகின்றது. செப்பாலான அமெரிக்க நாணயம் இங்குள்ள நீருடன் வேதிவினைப்புரிந்து நீலபச்சை வண்ணத்தில் காணப்படுகின்றது. 1954 ல் இருந்து வருடத்திற்கு ஒருமுறை இந்த கிணற்றிலிருந்து மில்லியன் டாலருக்கும் மேலாக பணம் எடுக்கப்பட்டு, பல ஸ்தாபனங்களுக்கு நன்கொடையாக கொடுக்கப்படுகின்றது.

20230613154853225.jpg
1986 ல் 'USA Today' பத்திரிக்கையில் லூரே குகைகள் உலகத்தில் அதிக வருவாய கொடுக்கக்கூடிய இடங்களுள் ஒன்றாக இருக்கக்கூடும் என குறிப்பிட்டிருக்கிறது. Luray Caverns அமெரிக்காவின் இயற்கையான அடையாளமாக (natural landmark) திகழ்கிறது.
இந்த குகையை சுற்றிப் பார்த்து திகைப்பு, பிரமிப்பு ஆனந்தம் எனப் பலவகையான உணர்ச்சிகளை அடைந்ததோடு, நிறைய அறிவியல் பின்னணிகளையும் அறிந்து கொண்ட மன நிறைவுடன் வெளியே வந்தேன்.