தொடர்கள்
தொடர்கள்
சாஹித்ய டகாடமியில் சுப்புசாமி - 10 புதுவை ரா.ரஜினி ஓவியம் : மணி ஶ்ரீகாந்தன் இலங்கை.

20230615072120250.jpeg
"சப்பாத்திஸ் ஆர் இன் ஃபைவ் பாக்கெட்ஸ். தொட்டுக்க காம்பினேஷன் தக்காளி தொக்கு வெச்சிருக்கேன். ரெண்டு வேளை சாப்பிடலாம். கொஞ்சம் புளியோதரை, சிப்ஸ். தயிர் சாதம். மத்தியானம் சாப்பிடுங்க. நாளைக்கு விஜயவாடாவில் பா. மு. க. மெம்பர் சரோஜா பாப்பா மூன்று முழு மீல்ஸ் சாப்பாடு ஸ்டேஷன்ல கொண்டு வந்து தருவா. நாலு பேரும் சாப்பிட சரியா இருக்கும். கன்வே ஹர் மை பெஸ்ட் விஷ்ஷஸ். டீசென்டா பிஹேவ் பண்ணுங்க...!"


"கூடையில் பழங்கள், பிஸ்கெட் இருக்கு. டிரெயின்ல கண்ட கண்ட கூடை ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிடாதீங்க...!"


"குண்டு, அப்பாராவ்… தாத்தாவை உங்க பொறுப்பில் விடறேன். நடுவிலே வர்ற ஸ்டேஷன் மஞ்சள் போர்டை எழுத்துக் கூட்டி படிச்சு, ரயிலை விட்டுடப் போறார்."


"ரன்னிங்கிலே அடிக்கடி எந்திரிச்சி போக வேணாம். கொஞ்சம் தப்பினா, டி ரெயில் ஆகிடுவீங்க."


"வண்டி ஸ்மூத் பிளேசிலே போகும்போது டாய்லெட் யூஸ் பண்ணுங்க. வேகமா ஓடும்போது ஆடற ஆட்டத்திலே, பக்கவாட்டுலே மோதி, நெத்தி புடைச்சுடப் போறது...ஜாக்கிரதை!"


"ஸ்டாப்..." என்று தடுத்து நிறுத்தினார் சுப்புசாமி, கோமு பாட்டியை.


"இன்னாமே கூவிகினே போறே? நம்மகாண்டி தோஸ்துக இருக்கிறப்போ இன்னா வோனும்?"


"பெரிம்மா உன் நல்லதுக்கோசரந்தான கூவுறாங்க, நைனா...!" என்றான் ஹாஃப் பிளேடு.


"கருணா, லிசன். தேவையில்லாம...பாஷை புரியாம யார்கிட்டேயாவது சண்டை கிண்டை போடப்போறார் தாத்தா. பத்திரமா பாத்துக்கோ...!"


"நீ குசாலா இரு பெரீமா. தாத்தாவுக்கு நாங்க கியாரண்டி...!"


"இத்தினி வருஷமா நீதான் தாத்தாவுக்கு உன் பாஷையைக் கத்துக் கொடுத்திருக்கே. நல்லதா நீ தமிழ் பாஷை கத்துண்டிருக்கலாம்...!"


பிளேடு நெளிந்தான்.


"சரி, சரி வரும்போது ஏரோபிளேன் ரிடர்ன் டிக்கெட்ஸ் மறந்துடாதீங்க. ஒரு மணி நேரத்துக்கு முன்னாலே ஏர்போர்ட்லே இருக்கணும்...!"


"நாய் வாயிலே கோலை உட்ட மாதிரி அட்வைஸ் பண்ணுறதை நிறுத்து..."


குண்டு ராஜா, "தாத்தா, பாட்டி நம்ம நல்லதுக்கு தானே எல்லாம் சொல்றாங்க. கம்முனு இருங்க...!" என்றான்.


"அடேய்...தடிப்பையா. நீங்கெல்லாம் டெல்லி பார்க்கலைன்னுதான் என் செலவிலே கூப்டுகினு போறேன். கெயவிக்கி வக்காலத்து வாங்குறது அநியாயம்டா...!"


"லெட் ஹிம் டாக் குண்டு ராஜா. மேட் பியூப்பில் நேவர் லிசன் புத்திசாலி மனிதர்களின் பேச்சை...!"


பாட்டி பழக்கூடையை அப்பாராவிடம் கொடுத்தாள்.


"அஜ்ஜிக்கு தும்ப ஆச, தாதா...!"


"பஜ்ஜியைல்லாம் இப்ப வேணாம்...!" என்றார் சுப்பு.


"இல்ல தாத்தா. பாட்டிக்கு உங்கமேல ரொம்ப ஆசை... என்கிறான்..!"


"அப்படின்னா, தூர தேசம் போற புருஷன் பாதக்கமலத்திலே, பத்தினிப் பொண்டாட்டி வுழுந்து கும்பிடுவாளா...?"


கோமுப்பாட்டிக்கு என்ன தோணிற்றோ தெரியவில்லை. சென்டிமெண்டாக தாலியைத் தொட்டுப் பார்த்தவள், சட்டென்று தாத்தாவின் காலைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள்.


'பாவம், நட்ட நடுவழியில் டிரெயினிலிருந்து இறக்கி விடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! மனிதர் திரும்பி வருவாரோ இல்லையோ? ஓ... லார்ட் வெங்கடேஷ், ப்ளீஸ் சேவ் திஸ் புவர் ஓல்ட் மேன்!"

(அடாவடி தொடரும்…)