உலகின் பல்வேறு நாடுகளில் புதிது புதிதாக இந்திய மற்றும் மேற்கத்திய உணவகங்கள், சைனீஸ், தைவான், மலேசிய தந்தூரி வகை உணவகங்கள் புதுப்புதுசாக பல்வேறு சுவையான உணவு வகைகளை உருவாக்கி, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதில் பன்னாட்டு உணவு நிறுவனங்களிடம் போட்டி நிலவுகிறது.
தற்போது தைவான் நாட்டில் உள்ள 'நுவு மா குயே' எனும் தனியார் உணவகத்தில் புதிதாக 'முதலைக் கால் வறுவல் சூப்புடன் கூடிய நூடுல்ஸ் உணவு விற்பனை கனஜோராக நடைபெற்று வருகிறது. இந்த உணவகத்துக்கு வரும் இளம் வாடிக்கையாளர்களின் முன்பு நூடுல்ஸ் நிரம்பிய ஒரு சூப் கோப்பையில், ஒரு வறுத்த முதலையின் கால் அழகாக பரிமாறப்பட்டு உள்ளது. அந்த உணவுக்கு 'காட்ஜில்லா ராமென்' என பெயர் குறிப்பிடப்படுகிறது.
இதுகுறித்து 'நுவு மா குயே' எனும் தனியார் உணவக நிர்வாகிகள் கூறுகையில், "எங்களின் உணவகத்தில் தயாராகும் முதலை கால் வறுவல் சூப்புடன் கூடிய நூடுல்ஸ் விற்பனை வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதனால் அதன் விற்பனை அதிகரித்து வருகிறது. இதற்காக சீனாவின் தைபூன் மாகாணத்தில் உள்ள பண்ணையில் இருந்து முதலைகள் வாங்கப்படுகின்றன. இந்த உணவு வகையின் விலை, இந்திய ரூபாய் மதிப்பில் ₹4 ஆயிரம் என நிர்ணயித்து விற்பனை செய்கிறோம்!" என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஏற்கனவே அரிதான வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் மெனக்கெடுகையில் இதில் என்ன மகிழ்ச்சி வாழ்கிறதோ ???
இப்படிப்பட்ட விபரீத உணவுப் பழக்க வழக்கங்களால் தான் உலகையே கோவிட் புரட்டிப் போட்டது. மனிதன் திருந்தவே மாட்டான் !!!
Leave a comment
Upload