தொடர்கள்
அரசியல்
விஜய் அரசியல் ஆட்டம்- ஜாசன்

20230614192920460.jpg

விஜய் அரசியல் கட்சி பற்றிய பேச்சு ஏற்கனவே வரத் தொடங்கிவிட்டது அவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளே சொல்லத் தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே முக்கிய தலைவர்களுக்கு பிறந்தநாள் போது அவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது நிகழ்ச்சி நடத்துவது என்று அரசியல் கட்சி போல் விஜய் மக்கள் இயக்கமும் தொடர்ந்து செய்யத் தொடங்கியது ஊராட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது விஜய் மக்கள் இயக்கம்.

20230614192941443.jpg

இந்த வாரம் அடுத்த கட்ட நடவடிக்கையாக மீண்டும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் பனையூரில் உள்ள தனது வீட்டில் அழைத்து ஆலோசனை செய்திருக்கிறார் 234 தொகுதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசியிருக்கிறார் நடிகர் விஜய்

இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் 15ஆம் தேதி கர்மவீரர் காமராஜர் பிறந்த தினத்தை விஜய் மக்கள் இயக்கம் விமர்சியாக கொண்டாட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் உங்கள் தொகுதியில் காமராஜர் சிலை இருந்தால் அந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யுங்கள். கூடவே ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் பேனா பை பென்சில் போன்ற நல உதவிகளையும் செய்யுங்கள் என்று யோசனை சொல்லி இருக்கிறார். இவை எல்லாவற்றையும் ஐ லைட்காமராஜர் பிறந்த நாள் எல்லா தொகுதிகளிலும் தளபதி விஜய் பயிலகம்தொடங்குமாறுஅறிவுறுத்திருக்கிறார்.இந்த பயிலகம்முதலில் இரவு பாடசாலையாகஆரம்பிக்கப்படும்பயிற்சி பெற்ற ஆசிரியர் மூலம்ஏழை மாணவ மாணவர்களுக்குடியூஷன் வசதி இல்லாதவர்களுக்குபாடம் சொல்லிக் கொடுக்கப்படுமாம்.இவையெல்லாம்அந்த மாணவர்களைதேர்ச்சி பெற வைக்கும் அளவுக்குஇருக்க வேண்டும்என்று அறிவுறுத்திருக்கிறார்கூடவே இந்த பயிலகம் பற்றிய முன்னேற்றங்களைதனக்கு உடனுக்குடன்தெரியப்படுத்த வேண்டும் என்றும்அறிவுறுத்தி இருக்கிறார் நடிகர் விஜய்.

20230614193022936.jpg

விஜய் மக்கள் இயக்கம் இனிமேல் மாதாமாதம் கூடி அரசியல் உட்பட எல்லா விஷயங்களையும் தளபதி ஆலோசிக்க முடிவு செய்திருப்பதாக எங்களிடம் சொல்லி இருக்கிறார் என்கிறார் ஒரு விஜய் மக்கள் இயக்க நிர்வாகி. கூடவே அவர் அரசியலுக்கு வருவது உறுதி அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டதால் இனிமேல் படங்களின் நடிப்பது சந்தேகம் என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தமிழக அரசியலில் இனிமேல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது போல் தெரிகிறது.