தொடர்கள்
கொடுரம்
டி ஐ ஜி விஜயகுமார் தற்கொலை பின்னணி!- நமது நிருபர்

20230614190443813.jpeg
கோவையில் டி ஐ ஜி விஜயகுமார் தற்கொலை காவல்துறையை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
ஜூலை ஆறாம் தேதி மாலை குடும்பத்தினருடன் கோவை மாநகர துணை ஆணையர் ஆண் குழந்தை முதல் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்கிறார் டிஐஜி விஜயகுமார் எல்லோரும் கலகலப்பாக பேசுகிறார் இந்த நிகழ்ச்சி கோவையில் ஒரு பிரபல ஓட்டலில் ஏற்பாடு செய்திருந்தார் துணை ஆணையர் அங்கேயே விருந்து சாப்பிட்டு இரவு பத்து மணி அளவில் வீடு திரும்பினார் டிஐஜி விஜயகுமார்.
டி ஐ ஜி விஜயகுமாருக்கு தூக்கம் வராமல் அவதிப்படும் பிரச்சனை இருந்தது இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார் தினந்தோறும் இரவு மாத்திரைகள் சாப்பிடும் பழக்கமும் இருந்தது. தன்னைப் பார்க்க வரும் நெருங்கிய வட்டார நண்பர்களிடம் தான் தூக்கம் வராமல் அவதிப்படுவது பற்றி மிகுந்த கவலையுடன் பேசுவது டி.ஐ.ஜி வழக்கம். அன்று இரவு வீட்டுக்கு வந்ததும் தூக்கம் வராமல் வெளிய வந்தவர் தனது பாதுகாவலர் ரவிச்சந்திரன் அறை அருகே போய் நின்று அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்பாதுகாவலர் ரவிச்சந்திரன் ஆயுதப்படை பிரிவை சேர்ந்தவர். அவளும் இருந்த துப்பாக்கியை வாங்கி அப்படி இப்படி திருப்பிப் பார்த்து சிறிது நேரம் கையிலே வைத்துக் கொண்டு விட்டு ரவிச்சந்திரனிடம் துப்பாக்கியை திருப்பிக் கொடுத்தார் டிஐஜி விஜயகுமார்.
மறுநாள் காலை ஆறு மணிக்கு முன்பு எழுந்த விஜயகுமார் பல் தேய்த்து முகம் கழுவி செல்பேசியுடன் வெளியே வந்து உட்கார்ந்தவர் தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் குட் மார்னிங் மெசேஜ் போட்டு விட்டு செல்பேசியில் வைத்துவிட்டு மீண்டும் ரவிச்சந்திரன் அறைக்கு சென்று துப்பாக்கி வாங்கிக்கொண்டு போர்டிகோவுக்கு வந்து துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொண்டு ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார் டி ஐ ஜி .துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த ரவிச்சந்திரன் மற்றும் கார் டிரைவர் டி ஐ ஜி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதை பார்த்து அலறியப்படியே டி ஐ ஜி மனைவியை அழைக்க அவரும் பார்த்து பயந்து போய் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் அங்கே அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்கள்.
இறந்து போன டிஐஜி விஜயகுமார் தூக்கம் இல்லாததால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து என்று காவல்துறை முடிவு செய்தது முதல் தகவல் அறிக்கையிலும் அப்படித்தான் பதிவு செய்திருக்கிறார்கள்.தூக்கம் இல்லாமல் மன அழுத்தத்தில் டிஐஜி அவதிப்படுவது உயர் அதிகாரிகளுக்கும் தெரியும் பலமுறை அவரை சிகிச்சை எடுத்துக் கொள்ள சொல்லியும் ஓய்வெடுக்க சொல்லியும் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். ஆறு மாதமாக தூக்க மாத்திரை எடுத்துக் கொண்ட டி ஐ ஜி பிறந்தநாள் கூட்டத்தில் மகிழ்ச்சியாக எல்லோரிடமும் பேசிய டி ஐ ஜி மறுநாள் தற்கொலை என்பது கோவை காவல் துறையை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. மன அழுத்தத்திற்கு தீர்வு தற்கொலை என்பது இன்னொரு அதிர்ச்சி. ஐபிஎஸ் தேர்வில் ஆறு முறை முயற்சித்து ஏழாவது முறை தான் ஐ பி எஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் டி ஐ ஜி விஜயகுமார் இந்த அனுபவம் கூட அவரது மன அழுத்தத்திற்கு தீர்வாகவில்லை என்பது இன்னொரு சோகம். தற்கொலை என்பது அந்த நிமிட அந்த நொடி முடிவு தான் இதற்கு மருந்தோ சிகிச்சையோ இல்லை தான் போல் தெரிகிறது.