தொடர்கள்
தொடர்கள்
கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் கூறுகள் - 44 - காவிரி மைந்தன்

2022906211040755.jpg

2022906211111256.jpg

உன்னையறிந்தால் நீ
உன்னையறிந்தால்..


‘Know Thyself’ என்கிற தத்துவம் அறியப்பட்ட நாள் முதலாய்.. தன்னைத் தானறிதல் என்பது தவத்திலும் அடிப்படையாய் ஷேக்ஸ்பியரின் சொல்லோவியமாகவும்..

கடவுள் என்பது கூட உள்ளே உள்ளது என்பதையே குறிக்க..

இருக்கும் இடத்தைவிட்டு எங்கும் அலைய வேண்டாம் என்பதை உணர்த்த, உலகின் திசைகள் பரவிக்கிடந்தாலும்.. அதை ஆளும் திறன் உள்ளத்திற்கு உள்ளது என்பதே உணர்ந்த உண்மையாகும்.

ஒரு மனிதன் தன்னைப் பற்றி அறிவது என்பதில் பல நிலைகள் உள்ளன. மேலோட்டமாகச் சொல்லப்படும் வார்த்தையல்ல.. ஒரு ஜீவனின் சக்தி என்பது ஜனனம் தந்த செல்வமென்றாலும் அதனைச் சரிவரப் பயன்படுத்தும் கடமையும் ஆற்றலும் மீண்டும் தனி மனித உடைமை ஆகிறது. தனது பலம், பலவீனம் என்ன என்பதைப் பகுத்தாய்ந்து, அதற்கேற்றாற்போல் தனது துறைகளைத் தேர்ந்தெடுத்துப் பயணம் மேற்கொள்ளுதல் அவசியமாகிறது.

சுய பரிசோதனை என்பது ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும். அலுவலகங்களில்.. மேற்பார்வையாளர் பதவிகள் முதலாக.. அனைத்திலும் Self Appraisal என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாய் விளங்குவது நிகழ்கால எடுத்துக்காட்டு.

ஒரு மரத்திற்கு ஆணி வேர் எப்படி முக்கியமோ அப்படியே தனி மனிதன் தன்னைப் பற்றி முழுமையாக அறிதல். ஆழ்கடல் போன்ற மனதை அடக்கியாளும் தன்மை - அதன் அவசியம் என்பன எல்லாம் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுவரும் தலைப்புகள். தத்துவரீதியான இந்த விளக்கங்கள் எல்லாம் சராசரி மனிதனைச் சென்றடைவது எப்போது? எப்படி? அந்தக் கேள்விகளுக்கு விடைசொல்கிறார் கண்ணதாசன் தப்பாது!!
உன்னையறிந்தால்.. நீ உன்னையறிந்தால்
வலியுறுத்தப்பட்ட இந்த ஒற்றைச் சொல்லுக்கே ஓராயிரம் பொருளடக்கம் உள்ளபோது.. பாடலின் சரணங்கள் ஓடிவருகின்றன ஜீவநதியாய்.. ஆம் .. ஒவ்வொரு ஜீவனையும் நோக்கி..

உன்னையறிந்தால் .. நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்..
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்!
மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மானென்று சொல்வதில்லையா
தன்னைத் தானும் தெரிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா?
உன்னையறிந்தால் .. நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்..
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகரில்லையா? பிறர்
தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளையல்லவா?
உன்னையறிந்தால் .. நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்..
மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன்
இவனென்று போற்றிப் புகழவேண்டும்!
உன்னையறிந்தால் .. நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்..

நம்ம சத்யராஜ் அவர்கள் அடிக்கடி சொல்வது போல்.. இந்தப் பாடல்..
ஏழைகளின் கீதை..
வேதம்..
பைபிள்
குரான்..
வேறென்ன சொல்ல வேண்டும்?

பயணம் தொடரும்...