ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் போட்டியிடத் திட்டம்.
அப்ப திருக்குறள், நளவெண்பா ,ஆத்திச்சூடி இதெல்லாம் மனப்பாடம் பண்ண ஆரம்பிச்சிட்டாரா பிரதமர்.
முதல்வர் ஸ்டாலினிடம் தோல்வி பயம் தெரிகிறது அண்ணாமலை
தோல்வியில் உங்களுக்கு தான் சர்வீஸ் ஜாஸ்தி நீங்க சொன்னா சரியா இருக்கும்.
திமுக எம்எல்ஏ வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
இப்பதான் தமிழ்நாடு அமைதி பூங்கா என்று சொல்லி தமிழக போலீசை பாராட்டி பேசினார்.
புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.300 வரை குறைகிறது, முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
இங்க திராவிட மாடலா ஆட்சி இதற்கெல்லாம் சான்சே இல்லை.
கரும்பு விவசாயிகளுக்கு 500 ஊக்கத்தொகை மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.
இது கூட்டாணி தர்மம் தானா ?
டாஸ்மாக் கடையில் கூடுதலாக பத்து ரூபாய் தட்டிக் கேட்டவரை தாக்கிய எஸ்ஐ மாற்றம்.
செந்தில் பாலாஜி ஆளாக இருப்பாரோ என்னவோ ?
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு பாடசாலை தொடங்க முடிவு
ரகசியமா அரசியல் பாடம் எடுப்பார்களோ
டாஸ்மாக் கடை நேரத்தில் மாற்றம் இல்லை அமைச்சர் அறிவிப்பு.
மாற்றம் ஒன்றே மாறாதுன்னு சொன்னாங்க.
வழக்குகள் விசாரிக்கப்படாத நிலையில் முன்னாள் அமைச்சர்களை குற்றவாளிகள் என்பதா முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கண்டனம்.
அதானே செந்தில் பாலாஜிக்கு ஒரு நியாயம் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு ஒரு நியாயமா அமலாக்கத்துறை இதெல்லாம் கண்டுக்க மாட்டீங்களா
நோபல் பிரிக்ஸ் உதயநிதி அறக்கட்டளை ஒரே முகவரி ஏன் அண்ணாமலை கேள்வி
அட்ரஸ் இல்லாத அறக்கட்டளை சொல்லக்கூடாது இல்ல அதனாலதான் ஒரு விலாசம்.
பக்தர்கள் மகிழ்ச்சியாக இருப்பதுதான் திராவிடமாடல் அரசின் நோக்கம் முதல்வர் ஸ்டாலின்
ஆனால் விநாயகர் சதுர்த்தி தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டோம் இதுவும் திராவிட மாடல்தான் என்கிறார் அய்யா வீரமணி
35 ஆண்டுகளாகியும் பாமக ஆளுங்கட்சி கனவு நிறைவேறாமல் போனதில் மனம் வருந்துகிறது டாக்டர் ராமதாஸ்.
ஐயா இந்த உள் ஒதுக்கீடு விஷயம் மறந்தேபோயிட்டீங்க நீங்க
அரியானாவில் விவசாயிகளுடன் வயலில் இறங்கி நாற்று நட்டார் ராகுல் காந்தி
வேற வேலை எதுவும் இல்லை அதனால நாற்று நடுவது டிராக்டர் ஓட்டுவது லாரி ஓட்டுவது என்று தலைவருக்கு டைம் பாஸ் ஆகுது
24 மணி நேரம் இயங்கும் காணொளி நீதிமன்றங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது.
அப்ப 24 மணி நேரமும் ஜாமீன் கேட்கலாம் தலைவர்களுக்கு கவலை இல்லை..
Leave a comment
Upload