தொடர்கள்
பொது
சந்திரயான்-3- மாலாஸ்ரீ

20230614173420833.jpeg

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிலிருந்து புறப்பட்ட 18 நிமிடங்களில் பூமியின் நீள் வட்ட பாதையில் சந்திராயன்-3 செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது. விண்ணில் ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் 40 நாட்கள் பயணம் செய்து ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும். என இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஜூலை 14ம் தேதி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். சந்திரயான்-3 என்பது நமது 3வது சந்திரப் பயணம்- சந்திரயான்-3 நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும் என பிரதமர் நரேந்திரமோடி ட்வீட் செய்து இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார்.

சந்திரயான் 3-வது விண்கலம் விண்ணில் களமிறங்கியுள்ளது. சுமார் 3,921 கிலோ எடையுள்ளஇந்த செயற்கைக்கோள், சுமார் 4 லட்சம் கிமீ தொலைவுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இந்தியாவின் பாகுபலி என அழைக்கப்படும் லாஞ்ச் வெஹிகிள், மார்க் 3 (LM-3) என்ற ராக்கெட் சந்திரயான்-3ஐ சுமந்து செல்கிறது. இந்த ராக்கெட் மட்டும் 642 டன் எடை கொண்டது. இதன் உயரம் 43.5 மீட்டர். இது, 130 ஆசியாவின் 130 யானைகளின் மொத்த எடைக்குச் சமமாகும்.இதுவரை 100% சக்சஸ் ரேட்டை கொண்ட இந்த மார்க் 3 (LM-3) ராக்கெட்டின் 6-வது பயணமாகும்.

சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென்துருவத்துக்கு அருகே தரையிறங்குகிறது. நிலவில் சாதனை புரியும் 4-வது நாடாக இந்தியா பெருமிதம் கொள்ளும். இதுவரை நிலவில் ரஷ்யா,அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளின் ராக்கெட் மட்டுமே வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது .நிலவில் இறங்கப் போகும் மிகப்பெரிய எஸ்யூவி கார் அளவிலான சந்திரயான்-3 செயற்கை கோளில்தான் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இருக்கிறது. அந்த இரண்டையும் திட்டமிட்ட இடத்துக்கு எடுத்துச் செல்ல, இதில் propulsion சிஸ்டம் இருக்கிறது.சந்திரைய்யன் தயாரிப்பு செலவு மட்டும் 615 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவில் விரைவில் இந்தியர்கள் காலடி எடுத்து வைப்பதற்கு சந்திரயான் -3 விண்கல ஆய்வு பெரிதும் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.