தொடர்கள்
அரசியல்
அடுத்த ஒலிம்பிக் மெட்டிரியல் வேதாந்த் - நீச்சல் வீரர் வேதாந்தின் அப்பா தான் சினிமா நடிகர் மாதவன் - விகடகவியார்.

2023032817075322.jpg

நடிகர் மாதவனின் மகனும், நீச்சல் விளையாட்டு வீரருமான வேதாந்த், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் 5 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

வேதாந்த், சிறு வயது முதலே நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி செய்து வருகிறார். 17 வயதான அவர் இந்திய நாட்டின் சார்பில் சர்வதேச அளவிலான நீச்சல் விளையாட்டு தொடர்களில் பங்கேற்று வருகிறார். கடந்த ஆண்டு டேனிஷ் ஓபன் தொடரில் 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பந்தயத்தில் தங்கப் பதக்கமும் வென்றிருந்தார்.

20230328170812811.jpg

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023-ல் மகாராஷ்டிரா அணிக்காக வேதாந்த் பங்கேற்றார். இதில் 5 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை அவர் வென்றுள்ளார். 100 மீட்டர், 200 மீட்டர், 1500 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் என பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வேதாந்த் வென்றுள்ளார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்றுக் கொள்ள தயார் செய்யப்படுவார் வேதாந்த். மாதவன் மகன் என்பதில் எனக்கு பெருமையில்லை, ஒரு நீச்சல் வீரன் என்பதில் தான் எனக்கு பெருமை என்கிறார் வேதாந்த்.

அதே போல என்னுடைய தொழிலை விட வேதாந்தின் நீச்சல் வெற்றியில் நான் கவனமாக இருக்கிறேன் என்கிறார் மாதவன்.

இவர்களை அழைத்து தமிழக அரசு எதுவும் பாராட்ட வில்லை கெளரவிக்கவில்லை குறைந்த பட்சம் படமாவது எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் அவர்கள் சார்ந்த வகுப்பின் மீதுள்ள துவேஷமாகக் கூட இருக்கும்.

ஆனால் கல்யாணப் பரிசு தங்கவேல் போல, பாத்திரக்கடையில் வடிவேலு வாங்கி வருவதைப் போல வாங்கி வந்த உலகக் கோப்பை டி20 என்று டுபாக்கூர் கோப்பையுடன் வந்த மனிதர் சக்கையாக ஒரு மந்திரியையும் ஒரு முதல்வரையும் ஏமாற்ற முடியும் என்றால் தமிழக அரசின் உளவுத் துறையையும் அவர்களது மதியூகத்தையும் பார்த்து விழுந்து புரண்டு சிரிக்கிறது உலகம்.

என்னவோ போடா மாதவா என்றால் வேதாந்த் கோவித்துக் கொள்வார். அப்பா பேராச்சே.....

2023032817115626.jpeg

மாற்றுத் திறனாளி என்ற ஒரே காரணத்திற்காக அவரைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்கிறது விகடகவி.