திருமுல்லைவாயல் சேர்ந்த க முருகன் போத்துர் ஏரியை கடந்து செல்லும் போதெல்லாம், அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள சீம கருவேலன்மரங்கள் அகற்றப்பட்டு, ஏரியின் கரை முழுதும் செடிகள் நடப்பட்டு ஓர் சோலை வனம் போல காட்சி தருவதாக கற்பனை செய்து கொள்வார். அவரது கனவு வீண் போகவில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்பு போத்துர் பஞ்சாயத்து தலைவர், தன்னார்வல நிறுவனம் பிச்சாண்டிக்குளம் வனம் மற்றும் டாடா தகவல் தொடர்புநிறுவனமும் சேர்ந்து இந்த ஏரியை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. தன்னார்வல நிறுவனம் பஞ்சாயத்து தலைவர் பி வீ சுரேஷை அணுகியபோது, அவர் பஞ்சாயத்திடம் ஏரியை புனரமைக்கும் அளவுக்கு போதிய அளவு நிதி இல்லை என கூறினார்.
பிச்சாண்டிகுளம் வனம் நிறுவனம் இம்மாதிரியான இயற்கை வளங்களை புனரமைக்க கார்பொரேட் கம்பனிகள் தங்கள் கார்பொரேட் சோசியல்ரெஸ்பான்சிபிலிட்டி நிதியிலிருந்து செய்துகொள்ள முடியும் என உறுதியளித்தார்.
இதையடுத்து 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் புனரமைக்கும் பனி துவங்கியது. ஏரியின் மொத்த பரப்பு 15 ஏக்கர். அதில் நான்கு ஏக்கரில் தண்ணீர்இருந்தது. இரண்டு ஏக்கரில் சீம கருவேலன் மரம் ஆக்கிரமிப்பு செய்திருந்தது. இன்னும் ஒரு ஒன்பது ஏக்கர் குப்பை கொட்டும் இடமாக மாறி இருந்தது.
பிச்சாண்டிக்குளம் வனம் நிறுவனத்தின் தாவரவியலாளர் ஆறுமுகம் கூறுகையில் முதலில் வெளியில் இருந்த குப்பைகள் மற்றும் சீமை கருவேலன்மரங்களை அகற்றும் பணி தொடங்கியது. இந்த வேலையே மிக பெரிய சவாலாக அமைந்ததாக அவர் கூறுகிறார். ஏனெனில் சீமை கருவேலன் மரங்களைஅவ்வளவு எளிதாக அகற்றி விட முடியாது. அவை மீண்டும் மீண்டும் துளிர்த்து விடும். எனவேதான் முதலில் அந்த மரத்தை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அடுத்து ஏரியில் குவிந்திருந்த குப்பைகள், அதிலும் குறிப்பாக மது புட்டிகள் அதிகம் இருந்தன. எனவே அதனை அப்புறப்படுத்தும்போது அதிககவனத்துடன் அகற்ற வேண்டி இருந்தது. அதற்கு அடுத்ததாக ஏரியில் படிந்திருந்த வண்டல் மண்ணை அகற்றும் பணி. கிட்டத்தட்ட 24,500 கண மீட்டர்வண்டல் மண் ஏரியில் படிந்திருந்தது.
இந்த மண்ணை கொண்டு ஏரியின் நடுவில் ஒரு பெரிய மற்றும் ஒரு சிறிய தீவுகளை அமைத்தோம். பெரிய தீவில் இருந்து ஏரியின் மொத்த பகுதியையும்கண்டு ரசிக்கலாம்.சிறிய தீவு பறவைகளுக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு அதில் அவைகள் மனிதர்களின் தொந்தரவு இல்லாமல் வந்துஅமர்ந்து இளைப்பாறி செல்லும் வகையில் ஏற்படுத்தப்பட்டது என்கிறார் ஆறுமுகம்.
அடுத்ததாக மீதம் இருந்த மண்ணைக் கொண்டு ஏரியின் கரைகளை பலப்படுத்தினோம். இதற்கு அடுத்து 4,000 செடிகள், அனைத்தும் நம் தமிழகத்தில்காணப்படும் மற வகைகளை ஏரியை சுற்றி நட்டோம். இந்த எண்ணிக்கையில் டாடா நிறுவன ஊழியர்கள் தங்கள் பங்கிற்கு பல விதமான செடிகளைநட்டனர்.
டாடா தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஆதேஷ் கோயல் கூறுகையில் ஏரியின் புனரமைப்பு மட்டும் செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அருகில் இருக்கும்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் ஒரு பசுமை மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தில் சூரிய சக்தியால் செயல்படும் மின்விளக்குகள் மற்றும் காத்தடிகள் அமைக்கப்படும். இந்த மையத்தில் சுற்று சூழல் குறித்த ஆவண படங்கள் திரையிடவும் எண்ணம் உள்ளது என்றார்.
அணைத்து புனரமைப்பு வேலைகளும் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட்டு, தற்போது அந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இது ஏரியின் முழுகொள்ளளவில் பாதியாகும். தண்ணீர் உள்ள இந்த ஏரிக்கு வலசை வரும் ஆறு வகையான வாத்துக்கள் வந்து சென்றதாக ஆறுமுகம் கூறினார். அவைதவிர செங்கால் நாரைகள், உன்னி கொக்குகள், குருட்டு கொக்குகள், மீன் கொதிகள் என பல விதமான பறவைகள் வந்து செல்வதாக அவர் கூறினார்.
புதுப்பிக்கப்பட்ட ஏறி அந்த பகுதி மக்களை வெகுவாக மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மாநகர் போக்குவரத்து ஊழியர் கே ராஜசேகர்: "ஏரியின் கரையில் மக்கள்காலையும் மாலையும் நடை பயில ஏதுவாக சிமெண்ட் பலகைகள் அமைத்துக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார். அவரது கோரிக்கை நிறைவேறும்நாள் வெகு தூரத்தில் இல்லை, என டாடா குழும அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
Leave a comment
Upload