தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20230231164943766.jpeg

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

அண்ணன் மேல்முறையீட்டில் ஒரு கின்னஸ் சாதனையை செய்ய முயற்சி பண்ணார்

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் கடன் சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அது இருக்கட்டும் அமைச்சரே வாங்குற கடனை எப்ப தள்ளுபடி பண்ணுவீங்க அத முதல்ல சொல்லுங்க

அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும் அமைச்சர் எல்.முருகன்

அப்ப கிளி மீண்டும் கூண்டுக்குள் அடைச்சுடுவீங்களா

மூணு பேருடன் ரயில் மறியல் ஏன் அண்ணாமலைக்கு அழகிரி விளக்கம்

விளக்கம் எல்லாம் சொல்ற அளவுக்கு அந்த மறியல் அவ்வளவு முக்கியமாயிடுச்சு அப்படித்தானே தலைவரே

ராகுலை மீண்டும் எம்பியாக பார்ப்போம் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் நம்பிக்கை

பாக்கலாம் பாக்கலாம் அப்படி நடக்குதா பாக்கலாம்

ராகுல் காந்தி பின்னால் நாடே நிற்கிறது இரா.முத்தரசன்

இந்த விஷயம் கேரள கம்யூனிஸ்ட் கட்சிக்கு தெரியாம பாத்துக்கோங்க டென்ஷன் ஆயிடுவாங்க

மத்தியில் திமுக தலைமையிலான கூட்டணி அரசு அமைய மக்கள் ஆதரவு தர வேண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அப்போ காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி இல்லையா அண்ணாமலை மாதிரி நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா

விசாரணை கைதிகள் பல்லை பிடுங்கிய அதிகாரி சஸ்பெண்ட்

கடைசியில் அவர் பல்லையும் புடுங்கிட்டாங்க போல இருக்கு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இன்றும் முடங்கியது பாராளுமன்றம்

பேசாம பாராளுமன்றம் நடந்தால் செய்தியா போடுங்க முடங்கறது வழக்கமான ஒன்றுதானே

தொகுதிக்குச் சென்று அரசின் திட்டங்களை மக்களுக்கு சொல்லுங்கள் பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் கட்டளை

அதெல்லாம் சரி எங்க தொகுதி எங்க இருக்கு அத சொல்லுங்க பிரதமரே தேர்தலுக்கு போனதோடு சரி

அதிக கடன் வாங்குவது சமூக நீதிக்கு செய்யும் துரோகம் தமிழக நிதி அமைச்சர்

அப்ப ரெண்டு வருஷமா நீங்க சமூக நீதிக்கு துரோகம் தானே செஞ்சுட்டு இருக்கீங்க அமைச்சரே

ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் ஏன் நீதிமன்றத்தை நாடவில்லை மத்திய அமைச்சர் கேள்வி

கோர்ட்டுக்கு போன எதிர்க்கட்சியினர் ஒன்றாக சேர மாட்டாங்களே அதுதான் இது கூடவா மத்திய அமைச்சருக்கு தெரியாது

மாநிலக் கட்சிகள் இல்லாமல் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது டி.ஆர்.பாலு

அண்ணன் தைரியமா உண்மையை சொல்லிட்டாரு இல்ல

இந்தியக் கோர்ட்டில் நடைபெறும் ராகுல் காந்தி மீதான வழக்கை கவனித்து வருகிறோம் அமெரிக்க அறிவிப்பு

அங்கு ஏதோ ஒரு பேங்க்கை இழுத்து மூடுற சத்தம் கேட்குது முதல்ல அதை கவனிங்க அமெரிக்கா

தமிழ்நாட்டில் சமூக நீதி சமகாலத்தின் முன்னோடியாக இருந்து வருகிறது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சமூக நீதி இப்போ திராவிட கட்சிகள் கையில் இல்லையா தேசியக் கட்சிக்கும் வந்திருச்சா