தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

90 நிமிடம் கிராபிக் காட்சிகள்

20230231162435357.jpg

நிவின் பாலி அஞ்சலி சூரி நடிக்கும் படம் ஏழு கடல் ஏழுமலை இந்தப் படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தில் 90 நிமிடம் கிராபிக் காட்சிகள் இடம்பெறுகின்றன. தற்போது அந்த வேலை நடந்து வருகிறது. அது முடிந்ததும் படம் ரிலீஸ்.

ஆக்க்ஷன் மசாலா

20230231162609513.jpg

சூது கவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி படத்தில் கார்த்தி நடிக்கிறார். இதன் பூஜை சென்னையில் எளிமையாக நடந்தது. நாலு பைஃட் நாலு பாடல் என்ற பார்முலாவில் ஆக்க்ஷன் மசாலா படமாக இந்தப் படம் இருக்கும் என்கிறார் இயக்குனர்.

தைவான் ,தென்னாபிரிக்கா

20230231162951819.jpg

இந்தியன் 2 படம் படப்பிடிப்பு சென்னையில் முடிந்தது. அடுத்து தைவான் மற்றும் தென்னாப்பிரிக்காவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. முதலில் தைவான் அடுத்து தென்னாபிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ் பார்க்கில் ஏப்ரல் 30 வரை இங்க படப்பிடிப்பு நடக்குமாம்.

வசனம் எழுதுகிறார் எம்பி

20230231163258465.jpg

இயக்குனர் சங்கர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். கியாரா அத்வானி ஜோடி இவர்கள் தவிர எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், அஞ்சலி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு கேம் சேஞ்சர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது ஒரு அரசியல் திரில்லர் படம் .இதன் தமிழ் பதிப்புக்கு எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் வசனம் எழுதியுள்ளார்.

ஆகஸ்ட் 15

20230231163444372.jpg

ஜெயிலர் படம் 25 நாட்கள் கொச்சியில் இறுதிக்கட்டப் படப் பிடிப்பு நடந்து வருகிறது. படத்தை ஆகஸ்ட் 15 இல் ரிலீஸ் பண்ண திட்டம். விஜய் நடிக்கும் லியோ பெங்களூரு ,ஐதராபாத் ,மும்பை என்று மூன்று லொகேஷன்களில் சூட்டிங் நடக்க இருக்கிறது. ஒரே மூச்சில் படப்பிடிப்பை முடித்து நாமும் ஆகஸ்ட் 15 ரிலீஸ் செய்தால் என்ன என்று யோசிக்கிறார் தயாரிப்பாளர்.

பிரியங்கா சோப்ரா

20230231163703211.jpg

ஹிந்தி திரைத்துறையில் ஓரங்கட்டப்பட்டேன் யாரும் வாய்ப்பு தரவில்லை. இதனால் இந்தி சினிமாவில் இருந்து விலகி விட்டேன். அங்கு நடக்கும் அரசியல் விளையாட்டு எனக்குப் பிடிக்கவில்லை என்கிறார் பிரியங்கா சோப்ரா. இந்தி அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டது. ஆனால், ஹாலிவுட் பட வாய்ப்பு அவரைத் தேடி வந்திருக்கிறது.

நடிகை வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

20230231163917159.jpg

ட்ரெண்டிங் துர்கா என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் கதை ஒரு திரைப்பட நடிகையை சுற்றி வருகிறது. அந்த நடிகை வேடத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இயக்குனர் ஸ்ருதி ஹாசன்

20230231164223278.jpg

தற்போது தெலுங்கில் பிசியாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் ஒரு புதிய படத்திற்கான திரைக்கதையை எழுதி வருகிறார். அவருக்கு கவிதை பாடல்கள் எல்லாம் கூட எழுத வருமாம் இயக்குனராக விரும்புகிறேன். விரைவில் ஒரு படத்தை இயக்குவேன் என்கிறார் சுருதிஹாசன்.

காதல் பிடிக்கும்

20230231164431697.jpg

ரசிகர்கள் காதல் கதையைத்தான் கொண்டாடுகிறார்கள் விரும்புகிறார்கள் காதல் படம் போர் அடிக்காது. எனவே வித்தியாசமான காதல் படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் என்கிறார் ராஷி கன்னா

மூன்று படத்தில் நாயகர்

வெற்றிமாறன் இயக்கம் விடுதலைப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகர் இருந்தாலும் நான் தொடர்ந்து காமெடி வேடங்களில் நடிப்பேன் என்று சொல்லி வருகிறார் ஆனாலும் மூன்று படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு நடிகர் சூரிக்கு தேடி வந்திருக்கிறது.