கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம், கிண்டி உள்பட பல்வேறு ரயில் நிலையங்களில் ஓசி ரயில் பயணம் செய்பவர்களைத் தடுக்கும் வகையில், ரயில் பயணிகளிடம் 10க்கும் மேற்பட்ட ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதற்காக 'ஒரு கோடி கிளப்' என்ற புதிய நடைமுறையை தென்னக ரயில்வே ஏற்படுத்தி இருந்தது. இதில், கடந்த நிதியாண்டில் ₹1 கோடிக்குமேல் அபராதம் வசூலிக்கும் டிக்கெட் பரிசோதகர்கள் இந்த கிளப்பில் சேர்க்கப்படுவர் எனக் குறிப்பிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, ₹1 கோடிக்குமேல் அபராதம் வசூலிக்கும் மைல் கல்லை சென்னை கோட்டத்தின் தலைமை டிக்கெட் பரிசோதகர் எஸ்.நந்தகுமார், ரயில்களில் ஓசிப் பயணம் செய்த 27,787 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ₹1.55 கோடி அபராதம் வசூலித்து சாதனை படைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து 2-வதாக கூடைப்பந்து வீரரும், முதுநிலை டிக்கெட் பரிசோதகருமான சக்திவேல் ரூ.1.10 கோடி அபராதம் வசூலித்துள்ளார்.
இதேபோல், 3-வதாக சென்னை கோட்டத்தின் தலைமை பெண் டிக்கெட் பரிசோதகர் ரோசலின் ஆரோக்கியமேரி ₹1.03 கோடி அபராதம் வசூலித்து சாதனை படைத்தார். இதன்மூலம் இந்திய ரயில்வேயில் முதன்முறையாக அதிக அபராதம் வசூலித்த பெண் டிக்கெட் பரிசோதகர் என்ற பெருமையை ரோசலின் ஆரோக்கியமேரி பெற்றுள்ளார் என்று தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்திகள் போதாதென்று வலைதளங்களில் இப்படி ஒரு முன்னெடுப்பை அம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருந்தால்.... என்ற மீம்ஸ்களை இங்கே சொல்வதாக இல்லை.
Leave a comment
Upload