தொடர்கள்
பொது
வனத் துறை நடவடிக்கை - பணத்தை திரும்ப செலுத்துங்கள் - ப.ஒப்பிலி

20230225091219472.jpeg

பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் மர கன்றுகள் நடப்பட்டன. இத் திட்டத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுவது, கொடுத்தகன்றுகளை நடாமல் அல்லது சரியான முறையில் பராமரிக்க தவறினால், எத்தனைகன்றுகள் சரியாக நடப்படவில்லை என்பதை கண்டறிந்து அதற்கான பணத்தைமாவட்ட வன அதிகாரி, வன சரகர் மற்றும் வனவர்களிடம் திரும்பபெற வழி வகை செய்யப்பட்டுள்ளது தான்.

இந்த புதிய நடைமுறை குறித்து கேட்டபோது, கூடுதல் தலைமைச் செயலர் மற்றும்வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ கூறுகையில் இந்த அரசு மாநிலத்தில் பசுமைப்பரப்பை அதிகரிக்க இந்த திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பசுமை பரப்பினை அதிகரித்து அதன் மூலம் பருவ நிலை மாற்றத்தின்தாக்கத்தை குறைப்பதே இதன் நோக்கம். இந்த குறிக்கோளை அடைய சிலநடவடிக்கைகள் இன்றியமையாததாகிறது. அதன் ஒரு பகுதிதான் வனத்துறைஅதிகாரிகள் மேல் நடவடிக்கை, என்கிறார் அவர்.

சில வாரங்களுக்கு முன்பு சென்னை மற்றும் திருச்சி மண்டல வனபாதுகாவலர்களுக்கு பசுமை தமிழ்நாடு திட்ட இயக்குனர் ஒரு கடிதம் அனுப்பினார்.அதில் சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களில் சில இடங்களில் செடிகள் சரியானமுறையில் நடப்படவில்லை என்றும், அது குறித்து நேரில் ஆய்வு செய்து பின்சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலர், வன சரகர் மற்றும் வனவர் ஆகியவர்களிடம்விசாரணை செய்து முறையாக நடாத/பராமரிக்காத செடிகளுக்கு உண்டானபணத்தை பெற்று அதனை பசுமை தமிழ்நாடு திட்ட வங்கி கணக்கில் கட்டும்படி உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாதிரியான தவறுகள் வனத்துறையின் மாவட்ட அளவில் உள்ள வன விரிவாக்கசரகங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐந்துசரகங்களிலும், திருவள்ளூரில் இரண்டு சரகங்களிலும் கொடுக்கப்பட்ட செடிகள்சரியான முறையில் நடப்பட்டு பராமரிக்கப்படவில்லை. அதே போல பெரம்பலூர்மாவட்டத்தில் இரண்டு சரகங்களிலும் மற்றும் தனியார் நிலங்களில் நடவு செய்ய கொடுத்த செடிகள் சரியான முறையில் நடப்படவில்லை என்பது தெரியவந்தது.

நடப்பட்ட செடிகள் எந்த அட்சரேகை தீர்க்கரேகைகளில் நடப்பட்டன என்பது பதிவுசெய்யப்பட்டுள்ளது. நடப்பட்ட செடிகளின் வளர்ச்சியை நிகழ்நிலை மூலம்கண்காணிக்கும் வசதி உள்ளது. அதன் மூலம் இந்த தவறுகள் நடந்தது கண்டறியமுடிந்தது என்றார் அவர்.

திட்ட இயக்குனர் மேலும் கூறுகையில் சென்னையில் இருந்து நிகழ்நிலை மூலம்பராமரிப்பு குறித்து தெரிந்து கொண்டாலும், மண்டல அளவில் உள்ள வனஅதிகாரியின் பொறுப்பு முக்கியமானதாகும். எனவேதான் அவரை நேரில் சென்றுஆராய்ந்து உரிய பணத்தை வாங்கி திரும்ப கட்டுமாறு கூறியுள்ளோம். மண்டல வனஅதிகாரி நேரில் ஆய்வு செய்யும் போது உண்மை நிலை தெளிவாக கண்டறிய முடியும். எனவேதான் இந்த பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து உள்ளோம், என்றார்அவர்.

இந்த மாதிரியான நடவடிக்கை இதுவரை தமிழக வனத்துறையில் முன்எப்போதும் எடுக்கப்படவில்லை.இதுவே முதன் முறை. இம்மாதிரியானநடவடிக்கைகள் திட்டத்தின் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்தும். மேலும்,திட்டத்தின் குறிக்கோள் அடைய பெரிதும் உதவியாக இருக்கும், என்கிறார் சுப்ரியாசாஹூ.

இந்த நடவடிக்கை வனத்துறை அதிகாரிகளுக்கு ஒரு முன் மாதிரியாக அமையும்.இரண்டாவதாக அதிகாரிகளிடம் தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற ஒருபயத்தையும் ஏற்படுத்தும், என்கிறார் திட்ட இயக்குனர்.

இப்படி ஒவ்வொரு அரசு நிறுவனங்களும் அரசு இயந்திரங்களும் செயல்படத் துவங்கினால் நாட்டில் மாற்றம் வரும்.