காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
அதாவது நாடாளுமன்றத்தை இன்னும் எத்தனை நாள் முடக்குவது என்று அதான் ஆலோசனை.
தகவல் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகக் கூடாது முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
அண்ணா நம்பக் கட்சியில தனியா ஐடி விங்கே வச்சிருக்கோம்.
எல்லா மக்களுக்கும் இபிஎஸ்சை பிடித்திருக்கிறது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
விட்டால் எடப்பாடி ரசிகர் மன்றம் தொடங்கி விடுவார் போல இருக்கு
பிளஸ் டூ மாணவர்கள் 50,676 பேர் தமிழ் தேர்வு எழுத வரவில்லை.
இவங்க தமிழ் தெரியாது போடா கோஷ்டி அதான் வரல
கருணாநிதி மீது மிகப்பெரிய பற்று உடையவன் நான் டாக்டர் ராமதாஸ்.
கூட்டணி இல்லையெனில் மாத்தி பேசக்கூடாது டாக்டர்
மத்திய அரசு தேர்வில் ஆள் மாறாட்டம் அரியானாவைச் சேர்ந்த நாலு பேர் கைது.
புலம் பெயர்ந்தவர்கள் வேலை இதுதான் இதுக்கும் ஒரு குழு வராம இருந்தா சரி
உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் ஸ்வீடன் ஆய்வு நிறுவனம் தகவல்.
ஆனா நாங்க இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்று அடிக்கடி சொல்லிக் கொள்வோம்.
பீகாரில் முஸ்லிம் வாக்குகளை கவர ஓ வை சி பாதயாத்திரை
இப்ப பாதயாத்திரை வாக்கு வங்கியா ஆக்கிட்டாங்க போல
நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் வன்முறை
திராவிட மாடல் சட்டம் ஒழுங்கு இதுதான்.
மக்கள் பணிகள் மேற்கொள்ளும் போது திமுக வட்டச் செயலாளர்கள் இடையூறு காங்கிரஸ் கவுன்சிலர்கள் புகார்
கூட்டணி தர்மம் ஒரு தரம் கூட்டணி தர்மம் இரண்டு தரம் கூட்டணி தர்மம் மூன்று தரம் அவ்வளவுதான் ஏலம் முடிஞ்சிடுச்சி கிளம்புங்க.
மாவட்டங்களில் கள ஆய்வு அவசியம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.
ஆய்வு செய்தால் எம் எல் ஏ அமைச்சர்கள் கோபிச்சிப்பாங்களே முதல்வரே என்கிறார் ஒரு அதிகாரி.
கல்வி உரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக நாங்கள் கொடுக்கும் குரல் தான் நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அண்ணன் அவசரப்பட்டு ரகசியத்தை சொல்லிட்டாரு இனிமே இவரைப் பற்றி மீம்ஸ் அவ்வளவா வராது இவருக்கு இனிமே பாப்புலாரிட்டி கொஞ்சம் குறையும்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறியதால் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு
அப்ப தமிழ்நாட்டில் எல்லோரும் முதலாளிகள் தான் தொழிலாளிகள் வேணும்னு நம்ம வடக்கே இருந்து தான் இறக்குமதி பண்ணிக்கணும் இதுதான் நம் ஆட்சியோட சாதனை.
மத்திய அரசை எதிர்க்க திமுக அரசுக்கு தைரியம் இல்லை முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.
அண்ணன் இப்ப எதிர்க்கட்சியில் இருப்பதால் எவ்வளவு தைரியமா பேசறாரு பாத்தியா
அரசியலுக்கு வராதது ஏன் ரஜினிகாந்த் விளக்கம்.
உங்களை யாருமே கேட்கவே இல்லையே தலைவரே நீங்க இப்ப லிஸ்டிலேயே இல்லை புரிஞ்சுக்கோங்க.
சிறிய பிரச்சனை என்றாலும் பெரிய பிரச்சனை என்றாலும் மக்களுக்கு குரல் கொடுக்கும் கட்சி பாரதிய ஜனதா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
அந்த கேஸ் விலைக்கு ஒரு குரல் தருவிங்களா ஐபிஎஸ்.
Leave a comment
Upload