நயன்தாரா மீது புகார்
தமிழில் சிவப்பதிகாரம் தடையறத் தாக்க எனிமி என சில பல படங்களில் நடித்திருக்கும் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் நடிகை நயன்தாரா மீது ஒரு புகார் சொல்கிறார் ரஜினிகாந்த் நடித்த குசேலன் படத்தில் நாலு நாள் நடித்தேன். அது இடம்பெற்ற பாடல் காட்சியில் நான் நடித்தேன். ஆனால், நடிகை நயன்தாரா நான் செட்டில் இருந்தால் நயன்தாராநான் வரமாட்டேன் என்று இயக்குனரிடம் உறுதிப்பட தெரிவித்தார் என்று சொன்னார்கள். அதனால், நான் அந்த பாடலில் இருந்து ஓரங் கட்டப்பட்டேன். அப்போதே எனது சம்பந்தப்பட்ட காட்சிகள் வராது என்று எனக்குத் தெரியும் தேவையில்லாமல் படப்பிடிப்பு என்று நாலு நாட்களை நான் வீணாக்கி விட்டேன்என்று சொல்லி இருக்கிறார் மம்தா. மோகன்தாஸ் வலைதளத்தில் இந்தப் பேட்டி தான் இப்போது ஹாட் டாபிக்.
சம்பள பிரச்சனை தான்
சிங்கம் இந்தி ரீமேக்கில் நான்தான் நடிப்பதாக இருந்தது. சம்பளம் சம்பந்தமாக சிறு பிரச்சனை அதனால் நடிக்கவில்லை. அதன் பிறகு கூட நிறைய இந்தி பட வாய்ப்புகள் வருகிறது. ஆனால் அவை எனக்கு ஏற்ற வேடங்களாக இல்லை. ஆனால் எப்படியும் நான் சீக்கிரம் இந்தியில் நடிப்பேன் என்கிறார் அனுஷ்கா.
கவர்ச்சி எல்லாம் ஒரு மேட்டரே இல்லை
நடிகை காஜல் அகர்வால் திருமணத்துக்குப் பிறகு கவர்ச்சியாக எல்லாம் நடிக்க மாட்டார் என்ற வதந்தியை யாரோ கொளுத்தி போட்டு விட்டார்கள். அதற்கு காஜல் அகர்வால் அதெல்லாம் இல்லை நானும் என் கணவரும் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம். நடிக்க வந்து விட்ட பிறகு அந்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் எப்படி சொல்வது சரியாகும் திருமணம் வேறு நடிப்பு வேறு இதில் எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை என்று தெளிவாக சொல்கிறார் நடிகை காஜல் அகர்வால்.
நகைச்சுவை வேடம் தொடரும்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கம் சூரி நடிக்கும் படம் விடுதலை இது இரண்டு பாகமாக வெளியாக இருக்கிறது. இந்தப் படம் பற்றி குறிப்பிடும் நடிகர் சூரி என்னை நாயகனாக நடிக்க வைக்க ஆசைப்பட்டார் இயக்குனர் வெற்றிமாறன் அது முடிந்து விட்டது இனிமேலும் ஹீரோ வேடம் தான் நடிப்பேன் நினைக்காதீர்கள் காமெடி தான் எனக்கு சோறு போட்டது காமெடி வேடத்தில் தான் இனி தொடர்ந்து நடிப்பேன் என்று விளக்கி விட்டார். அதாவது சந்தானம் போல்நான் இப்ப ஹீரோ என்றெல்லாம் முரண்டு பிடிக்க மாட்டாராம் அதைத்தான் சொல்கிறார்.
இனிமேல் நான் சினிமாவில் இல்லை
உதயநிதி ஸ்டாலின் கடைசியாக நடித்த படம் கண்ணை நம்பாதே வெள்ளியன்று ரிலீஸ் ஆகிவிட்டது. இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் இத்தோடு எனது சினிமா தொடர்பு முடிந்து போனது இனிமேல் நான் அரசியல்வாதி சினிமா சம்பந்தமாக யாரும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் முன்னாள் நடிகர் இந்நாள் அமைச்சர் விளக்கி சொல்லிவிட்டார்.
இப்படித்தான் அப்பா எனக்குப் பின் அரசியலுக்கு எங்க வீட்லேர்ந்து யாரும் வர மாட்டார்கள் என்று சொன்னார். ஒரு வேளை அடுத்த படத்துக்கு புக் பண்ண வாங்க என்பதன் அறைகூவலோ ???
வில்லன்கள் வரிசை
விஜய் நடிக்கும் லியோ படத்தில் வில்லன்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. ஏற்கனவே அர்ஜுன், சஞ்சய் தத் ,மிஷ்கின், கௌதம் வாசுதேவ மேனன் இப்போது அந்த வரிசையில் பாபு ஆண்டனி இணைந்துள்ளார். விஜயின் லியோ படத்தில் நடிப்பது எனக்கு பெருமை என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் பாபு ஆண்டனி.
வதந்தி வதந்தி தான்
நடிகை தமன்னா தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார். அரண்மனை 4சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதன் நடுவே இந்தி நடிகர் விஜய் வர்மா தமன்னா காதல் என்று வதந்தி பரவியது. இது பற்றி தமன்னா நடிகர் விஜய் வர்மாவுடன் ஒரு படத்தில் தான் நடித்திருக்கிறேன். ஆனால், அதற்குள் காதல் வதந்தி பரவி விட்டது பலமுறை எனக்கு திருமணம் நடந்ததாக செய்திகள் வருகின்றன டாக்டர் முதல் தொழிலதிபர் வரை பலரை எனக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் உண்மையில் எனக்கு திருமணம் நடந்தால் அதையும் உண்மையா வதந்தியா என்று யோசிப்பார்களோ என்று சந்தேகப்படுகிறார் நடிகை தமன்னா.
6 கோடி சம்பளம்
சீதாராமம் துல்கர் சல்மான் மிருனாள் தாகூர் நடித்த பான் இந்தியா திரைப்படம் வெற்றி பெற்றது. இந்தி நடிகையான மிருணாள் தாகூர் நானி நடிக்கும் தெலுங்கு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கு அவர் வாங்கும் சம்பளம் ஆறு கோடி ரூபாய் தென்னிந்தியாவில் நாயகிகளில் அதிக பணம் வாங்கிய நடிகை நயன்தாரா அவரது சம்பளம் 10கோடி ரூபாய் இப்போ அதற்கான அடுத்த இடத்திற்கு மிருணாள் தாக்கூர் வந்து விட்டார். இது தவிர மேலும் இரண்டு தெலுங்கு படம் இரண்டு தமிழ் படம் ஒரு மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார்.
மீண்டும் இயக்குனர்
சமீப காலமாக பாரதிராஜா நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். கிட்டத்தட்ட அவரும் ஒரு பிசியான நடிகர் என்று ஆனார். இப்போது கதாநாயகி முக்கியத்துவம் கொண்ட ஒரு படத்தை இயக்க இருக்கிறார் படத்தின் மற்ற விவரம் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
Leave a comment
Upload